இயற்கைக்கு பாதிப்பில்லாத அழகு சாதனக் கருவிகள் - சன்னி லியோனின் புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்

ஹேர் டிரையர், முடியை சுருளாக்க பயன்படுத்தப்படும் கர்லர், கரும்புள்ளிகளை நீக்கும் கருவி, கருவலையங்களை நீக்கும் கருவிகள் என அன்றாடம் பயன்படுத்தும் காஸ்மெடிக் கருவிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.

news18
Updated: July 16, 2019, 4:53 PM IST
இயற்கைக்கு பாதிப்பில்லாத அழகு சாதனக் கருவிகள் - சன்னி லியோனின் புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்
சன்னி லியோன்
news18
Updated: July 16, 2019, 4:53 PM IST
பாலிவுட் நடிகை சன்னி லியோனைத் தெரியாத நபர் யாரும் இருக்க முடியாது. அவர் எந்த அளவிற்கு புகழ் உச்சியை அடைந்திருக்கிறாரோ அதேயளவிற்கு விமர்சனங்களையும் சுமந்துக் கொண்டிருப்பவர். ஆனால் அவற்றை கடுகளவும் மதிக்காமல் தான் நினைத்ததை செய்து இன்று நடிகை என்னும் புகழைத் தாண்டி சிறந்த தொழில் முணைவோராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பெற்ற பிள்ளைகளோடு, தத்தெடுத்து வளர்க்கும் பிள்ளைகளையும் அன்பாகப் பார்த்துக்கொள்ளும் தாய், தொழிலதிபர், நடிகை என பன்முகங்களையும் அசாதரணமாக கையாளும் திறன் கொண்ட பெண் சன்னி லியோன்.

இவர் பர்ஃபியூம் , காஸ்மெடிக்ஸ், உள்ளாடைகள் ,பியூட்டி , ஃபேஷன் என தன் தொழிலை அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி வருகிறார். அதைத் தொடர்ந்து தற்போது இயற்கைச் சூழலுக்கும் , மனிதர்களுக்கும் கேடு விளைவிக்காத வகையில் எக்ஸெண்ட்ரிக் (Xcentric) என்னும் பெயரில் அழகு சாதன பொருட்களை  ( cosmo tech products ) அறிமுகப்படுத்தியிருக்கிறார்.



இந்த பிராண்டானது நடிகைகள் பயன்படுத்தும் காஸ்மெடிக் பொருட்களை மக்களுக்கு பரிந்துரைக்கவுள்ளது. அதாவது ஹேர் டிரையர், முடியை சுருளாக்க பயன்படுத்தப்படும் கர்லர், கரும்புள்ளிகளை நீக்கும் கருவி, கருவலையங்களை நீக்கும் கருவிகள் என அன்றாடம் பயன்படுத்தும் காஸ்மெடிக் கருவிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.

ஆண்களே ஷேவிங் செய்யும்போது இந்த தவறுகளைச் செய்யாதீர்கள்..!

சந்தையில் ஏற்கனவே சன்னி லியோன், லஸ்ட் இன் தி பாஸ்ட் என்னும் பர்ஃபியூம், இன்ஃபேமஸ் என்னும் உள்ளாடைகளுக்கான  பிராண்டும் நடத்தி வருகிறார். இதைத் தவிர கணவரோ இணைந்து சிறுவர்களுக்கான D'Art Fusion என்னும் பிளே ஸ்கூலும் நடத்தி வருகிறார்.

"இந்த முயற்சியில் நான் அதிக மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொருவரும் பூமித் தாயின் ஆரோக்கியத்திற்கு பொறுப்பு ஏற்க கடமைப்பட்டிருக்கிறோம். அந்த வகையில் நான் இந்த காஸ்மோ டெக் பிராண்ட் வெளியிட்டதை நினைத்து மனமகிழ்ச்சி அடைகிறேன். மக்களுக்கு இந்த பிரான்டை  உலக அளவில் கொண்டு சேர்க்க நினைக்கிறேன்” என்று சன்னி லியோன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

இதையும் படிக்க :

நெய் பயன்படுத்துங்கள்: பொடுகுத் தொல்லை, தலை முடி உதிர்வுக்கு குட்பை சொல்லுங்கள்

உங்கள் முகம் எப்போதும் பிரகாசமாக மின்ன வேண்டுமா?

ஆண்களே ஷேவிங் செய்யும்போது இந்த தவறுகளைச் செய்யாதீர்கள்..!

பார்ட்டிக்குச் செல்லும் ஆண்கள் செக்ஸில் தீவிரமாக இருப்பார்கள்: ஆய்வில் தகவல்




லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: July 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...