வெயில் காலத்தில் உங்கள் சருமத்தை பாதுகாக்கும் எண்ணெய் வகைகள்!

வெயிலை எதிர்கொள்ள சூப்பர் டிப்ஸ்

news18
Updated: May 21, 2019, 4:14 PM IST
வெயில் காலத்தில் உங்கள் சருமத்தை பாதுகாக்கும் எண்ணெய் வகைகள்!
மாதிரிப் படம்
news18
Updated: May 21, 2019, 4:14 PM IST
என்னதான் ஆரோக்கியமான உணவு, போதுமான நீர் அருந்துதல் என உடலை பராமரித்தாலும், மேனி பளபளக்க அதற்குரிய சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக வெயில் காலத்தில் சருமத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதற்கு இந்த எண்ணெய்களைப் பயன்படுத்தினாலே போதுமானது.

தூக்கமின்மை: மனஅழுத்தம், பதற்றம் போன்ற காரணங்களால் உடல் ஓய்வை விரும்பாது. இதனால் தூக்கமின்மை நோய் வாட்டும். இதன் விளைவு கண் வீக்கம், வறட்சி, கருவளையம் போன்ற பிரச்னைகள் வரும் இதற்கு லாவண்டர் எண்ணெய் பயன்படுத்துவது நல்லது.தெளிவான முகம்: சம்மரில் ஏசி அறையாக இருந்தாலும், வெயிலில் சுற்றும் நபராக இருந்தாலும் உடலின் நீர் வறட்சி ஏற்படும். ஒருபக்கம் தூசிகள் சருமத் துளைகளில் தேங்கி சேதமாக்கிவிடும். இதைத் தடுக்க யூக்கலிப்டஸ் எண்ணெய், கேமொமைல் எண்ணெய், ஜாஸ்மின் எண்ணெய், ரோஸ் எண்ணெய் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்தால் தெளிவான முகம் கிடைக்கும்.

உடல் ஓய்வு: கடுமையான வெப்பம் உடலை மேலும் பாதிக்கும். இதனால் உடல் ஓய்வின்றி தவிக்கும். இதைத் தடுக்க உடலுக்கு ஓய்வு தரும் விதமாக கேமொமைல் எண்ணெய், லாவண்டர் எண்ணெய், ஆரஞ்சு எண்ணெய் மற்றும் ஏலக்காய் எண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒன்றை தடவி உடல் முழுவதும் மசாஜ் செய்தால் உடல் நல்ல ஓய்வு பெற்று நிம்மதியான உறக்கம் வரும்.முதுமையின்மை: டிஹைட்ரேஷன் காரணமாக சரும வறட்சி ஏற்பட்டு சருமச் சுருக்கங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதற்கு ரோஸ் எண்ணெய், ஏலக்காய் எண்ணெய், டீ ட்ரீ எண்ணெய், கிராம்பு எண்ணெய் ஆகியவற்றில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.

முகப்பருக்கள் : கோடைகாலத்தில் வெளியாகும் எண்ணெய் முகப்பருக்களை உண்டாக்கும். இதற்கு டீ ட்ரீ எண்ணெய், ரோஸ்மெர்ரி எண்ணெய். அல்கினா எண்ணெய் போன்ற எண்ணெய்களைப் பயன்படுத்தினால் நாளடைவில் சரியாகும்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...