கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்போது அதிலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். புற ஊதா கதிர்கள் தோலின் வெளிப்புற அடுக்குகளை ஊடுருவி ஆழமான அடுக்குகளுக்குள் செல்லும்போது, அவை தோல் செல்களை சேதப்படுத்துகிறது. இதனால் சருமத்தில் சிவப்பு நிற தடிப்புகள் ஏற்படுத்துகிறது. இதனை வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை கொண்டு சரி செய்ய முடியும்.
கற்றாழை
கற்றாழை அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது புற ஊதா கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளை எளிதாகவும், விரைவாகவும் சரி செய்கிறது. கடையில் வாங்கும் கற்றாழை ஜெல்லை விட இயற்கையாக கிடைக்கும் கற்றாழையை சுத்தம் செய்து பயன்படுத்துவது நல்ல பலனை தரும்.
செய்முறை :
கற்றாழை ஜெல்லை ஒரு கிண்ணத்தை எடுத்து ஒரு ஐஸ் கியூப் ட்ரேயில் வைத்து ஃப்ரீசரில் வைக்கவும். ஐஸ் க்யூப்ஸ்களாக உருவானவுடன், பாதிக்கப்பட்ட பகுதியில் நேரடியாக பயன்படுத்தவும்.
ஓட்மீல் :
சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய ஓட்மீல் உதவுகிறது. ஓட்மீலில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் அரிக்கும் தோலழற்சிக்கு சிகிச்சையளிக்கும் என்று தோல் மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஓட்ஸை பொடித்து அரைத்து அதனை பயன்படுத்தி குளிக்க வேண்டும். இதற்கு 1 கப் சுவையற்ற ஓட்ஸை அரைத்து, இரண்டு கப் வெதுவெதுப்பான நீரில் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் ஊற வைத்து குளிக்கவும்.
கடல் உப்பு இல்லாத ஹேர் ஸ்பிரே இல்லையாம்.. அப்படி என்ன நன்மைகளை தலைமுடிக்கு தருகிறது..?
மற்றொரு முறை :
ஓட்ஸை பொடித்து அரைத்து அதனுடன் ¼ கப் பால் மற்றும் ½ தேக்கரண்டி தேன் சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை நன்கு கலந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் 20 நிமிடங்கள் தடவவும். பின்னர் குளிர்ந்த தண்ணீரில் குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பால் பொருட்கள் :
DIY வீட்டு வைத்தியத்திற்கு பால் பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பாலில் உள்ள கொழுப்பு, புரதம் மற்றும் pH ஆகியவை சருமத்தில் உள்ள சன் டேனை நீக்க உதவுகிறது. மேலும் பால் பொருட்கள் குளிர்ச்சியானது என்பதால் இரத்த நாளங்களை கட்டுப்படுத்தி வீக்கம் மற்றும் சிவப்பு தடுப்புகளை குறைக்கவும் உதவுகின்றன.
செய்முறை :
சுத்தமான பச்சை பால், தண்ணீர் மற்றும் ஐஸ் கட்டிகளை சம அளவில் எடுத்து கொள்ளவும். இந்த கலவை எடுத்து ஒரு துணியை பயன்படுத்ததி சருமத்தில் ஒத்தடம் கொடுக்கவும். இதனை தொடர்ந்து இரண்டு, மூன்று முறை செய்யவும். பின்னர் சருமத்தை கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தயிரை எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 10-15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பின்னர் நீரில் கழுவி வந்தால் சருமத்தில் உள்ள தடுப்புகளை குறைக்க உதவும்.
கூந்தலின் முனை முடியை அடிக்கடி வெட்டுவதால் வேகமாக வளருமா..? உண்மை இதுதான்..!
வெள்ளரிக்காய் :
வெள்ளரி குளிர்ச்சியானது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவற்றின் புத்துணர்ச்சியூட்டும் சுவையின் காரணமாக கோடையில் பயன்படும் மிகவும் குளிர்ச்சியான DIY வீட்டு வைத்தியங்களில் ஒன்றாகும். வெள்ளரிக்காய் அசௌகரியத்தை போக்கவும் , புற ஊதா கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளை தணிக்கவும் உதவும் ஒரு சிறந்த மூலப்பொருள் ஆகும். எனவே, தேவைப்பட்டால், உங்கள் உடல் முழுவதும் வெள்ளரி சாற்றை பயன்படுத்த தயங்காதீர்கள். வெள்ளரிக்காய் எந்த விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாதது என்பது குறிப்பிடத்தக்கது.
புற ஊதாக்கதிர்களிலிருந்து சருமத்தை பாதுகாக்க தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சன்ஸ்க்ரீன் பயன்படுத்த வேண்டும். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சூரிய ஒளியில் செல்வதை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.