• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • நுனி முடி பிளவுபடுவதை தவிர்க்க வேண்டுமா..? அப்போ இதையெல்லாம் நீங்க செஞ்சே ஆகனும்..!

நுனி முடி பிளவுபடுவதை தவிர்க்க வேண்டுமா..? அப்போ இதையெல்லாம் நீங்க செஞ்சே ஆகனும்..!

நுனி முடி பராமரிப்பு

நுனி முடி பராமரிப்பு

உங்கள் தலைமுடி ஈரமாக இருக்கும்போது சீப்பு கொண்டு சீவுவது தவிர்த்து விடுங்கள். இந்த நேரத்தில் சீவுவதால் முடி உதிர்வு, முடி பிளவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

  • Share this:
நுனி முடி பிளவு (split hair) தற்போது பெரிய பிரச்சையாக மாறிவருகிறது. மாசு மற்றும் தூசியில் அதிகமாக இருப்பவர்களுக்கு, எண்ணெய் தேய்க்காமல் இருப்பவர்களுக்கு கூந்தல் வறட்சியடைகிறது. தலைமுடி வறட்சியடைவதால் முடியின் நுனியில் பிளவு ஏற்படுகிறது. நம் தலைமுடிக்கு போதுமான ஈரப்பதம் கிடைக்க வேண்டியது அவசியம்.

அதேபோல உடல் சூடு இல்லாமலும் பார்த்து கொள்ள வேண்டும். இதற்கு இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்துவதன் மூலமும், சில வாழ்க்கை முறை பழக்கங்களை பின்பற்றுவதன் மூலமும் நுனி முடி பிளவை சரி செய்ய முடியும். இதுகுறித்த தோல் மருத்துவர் அஞ்சல் பந்த் சில எளிய குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டார், அதுகுறித்து இங்கு காண்போம்..

தலைமுடியை பராமரிக்க சில டிப்ஸ் : 

*உங்கள் தலைமுடி ஈரமாக இருக்கும்போது சீப்பு கொண்டு சீவுவது தவிர்த்து விடுங்கள். இந்த நேரத்தில் சீவுவதால் முடி உதிர்வு, முடி பிளவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

* உங்கள் தலை முடியை துவட்ட பருத்தி துண்டை பயன்படுத்துங்கள். மிகவும் கடினமாக இருக்கும் துண்டு முடியை சேதப்படுத்தும் என்பதால் பருத்தி துணியை பயன்படுத்துமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்

*உங்கள் தலைமுடியை சீவுவதற்கு அதிக இடைவெளி கொண்ட சீப்பை பயன்படுத்துங்கள். இதனால் கூந்தல் சேதமாவது தவிர்க்கப்படும்.



*ஒவ்வொரு முறை தலைக்கு குளித்த பின்னரும் கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள். கண்டிஷனர் பயன்படுத்துவது கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்தும் மற்றும் முடி பிளவு ஏற்படாமல் பாதுகாக்கும்.

* மாதம் ஒரு முறை நுனி முடியை வெட்ட வேண்டும். அல்லது பார்லர் சென்று முடியை ட்ரிம் செய்து கொள்ளுங்கள்.

* ஹேர் ட்ரையரை பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்த்து விடுவது நல்லது. மிதமான வெயிலில் கூந்தலை உலரவிடுவது நல்லது. இதேபோல ஸ்ட்ரெய்ட்னெர் போன்ற வெப்பமூட்டும் சாதனங்களை பயன்படுத்துவத்தையும் தவிர்ப்பது நல்லது. இதற்கு பதிலாக முட்டையின் வெள்ளை கருவை பயன்படுத்துவது நல்ல பலனை தரும்.

*நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை ஹேர் மாஸ்க் பயன்படுத்தலாம்.

லாஷஸ் இல்லாமலேயே இயற்கையான முறையில் அடர்த்தியான கண் இமைகளை பெற வேண்டுமா..? சூப்பர் டிப்ஸ் இதோ...

நுனி முடி பிளவு வரமால் தடுக்க உதவும் ஹேர் மாஸ்குகள் :

1. முடி பராமரிப்பு என்றாலே தேங்காய் எண்ணெய் தான் முதல் இடத்தை வகிக்கிறது . ஏனெனில் இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் முடியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம் வாய்ந்தது. தேங்காய் எண்ணெய்யை எடுத்து உங்கள் கூந்தலின் வேர்ப் பகுதியிலிருந்து நுனி வரை நன்றாகத் தடவிக் கொள்ள வேண்டும். பிறகு உங்கள் கூந்தலை ஒரு துண்டை கொண்டோ அல்லது பிளாஸ்டிக் கவர் கொண்டோ தூக்கி கட்டி நன்றாக மூடிக் கொள்ள வேண்டும். ஒரு 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பின்னர் ஷாம்பூ கொண்டு வாஷ் செய்யவும்.



2. முட்டையில் வெள்ளை கருவை எடுத்து, அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து நன்றாக அடித்து கொள்ளவும், இதனை முடியில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து நீங்கள் உபயோகிக்கும் ஷாம்பு கொண்டு தலைக்கு குளிக்கவும். இதனை மாதத்திற்கு இரண்டு வாரங்கள் தொடர்ந்து செய்து வர முடி பிளவு சரியாகும்.

3. எண்ணெய் குளியல் முடியில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ள உதவுகிறது. வாரம் ஒருமுறை தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் அல்லது பாதம் ஆயில் ஒன்றாக கலந்து மஜாஜ் செய்ய வேண்டும். சிறிது நேரம் தலையில் ஊற வைத்து குளித்து வர முடிவு முடி பிளவு குறைவைதை காணலாம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: