ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

நெருங்கும் பண்டிகை... உங்கள் சருமத்தை பளபளப்பாக்க நடிகையின் டிப்ஸ்..!

நெருங்கும் பண்டிகை... உங்கள் சருமத்தை பளபளப்பாக்க நடிகையின் டிப்ஸ்..!

 தீபாவளி சருமப்பராமரிப்பு

தீபாவளி சருமப்பராமரிப்பு

பண்டிகை காலங்களில் பல்வேறு விழாக்களில் கலந்து கொள்ள நேரிடும். அந்த சமயங்களில் சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்புடனும் வைத்திருக்கவே அனைவரும் விரும்புவர். மேலும் சருமம் ஆரோக்கியமாக இருக்கும் பொழுது நமக்கும் மனதளவில் ஒரு தன்னம்பிக்கை உண்டாகக்கூடும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒன்றன் பின் ஒன்றாக பண்டிகைகள் வந்து கொண்டிருக்கும் வேளையில், அனைவரும் மிக உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் அந்த பண்டிகைகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பீர்கள். இந்த எதிர்பார்ப்புகளுக்கும் கேளிக்கைகளுக்கும் மத்தியில் அனைவரும் மிகுந்த கவனமுடன் சில சமயம் கவலையுடனும் இருக்கும் ஒரு விஷயம், பண்டிகை காலங்களில் எவ்வாறு உடை உடுத்திக் கொள்வது மற்றும் எவ்வாறு தன்னை அழகுபடுத்திக் கொள்வது என்பதுதான். முக்கியமாக ஒருவர் அழகாக தோற்றமளிக்க வேண்டும் எனில் அவரது சருமத்தை நன்றாக பேணி பாதுகாக்க வேண்டும்.

பண்டிகை காலங்களில் பல்வேறு விழாக்களில் கலந்து கொள்ள நேரிடும். அந்த சமயங்களில் சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்புடனும் வைத்திருக்கவே அனைவரும் விரும்புவர். மேலும் சருமம் ஆரோக்கியமாக இருக்கும் பொழுது நமக்கும் மனதளவில் ஒரு தன்னம்பிக்கை உண்டாகக்கூடும். இவ்வாறு சரும பராமரிப்பை மேற்கொள்வதற்கு பல்வேறு சிகிச்சை முறைகளும் அழகு சாதன நிலையங்களும் இருந்தாலும், வீட்டிலே மிகக் குறைந்த விலையில் நமக்கு நாமே செய்து கொள்ளும் சரும பராமரிப்பதற்கு ஈடு இணை ஏதுமில்லை. சில குறிப்பிட்ட வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி வரும்போது அழகான பளபளக்கக்கூடிய சருமத்தை மிக எளிதில் பெற முடியும் என்று நடிகை ஃபுளோரா சைனி கூறியுள்ளார்.

ஆங்கிலத்தில் CTM Routine என்று ஒரு பழக்கம் உண்டு. அதாவது சருமத்தை சுத்தப்படுத்துதல், டோனிங் செய்தல், ஈரப்பதத்துடன் வைத்திருத்தல் ஆகியவை மிக முக்கியமாக சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டியபழக்கமாகும். இதில் கிளீனிங் முறையில் சருமத்தில் உள்ள நச்சுக்களையும் அழுக்குகளையும் வெளியேற்றி, டோனிங் முறையில் சருமத்தில் உள்ள சுருக்கங்களை குறைக்கவும், மேலும் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தி சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் முடியும்.

சரியான அளவு தண்ணீரை தினமும் குடிக்க வேண்டும். இது சரும பளபளப்பிற்கு உதவியாக இருக்கும். குறைந்தது 8 லிருந்து 10 கிளாஸ் தண்ணீர் வரை தினமும் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதை ட்ராக் செய்வதற்கு தற்போது பல ஆப்கள் வந்துவிட்டன. விரும்பினால் அவற்றை பயன்படுத்தலாம்.

Also Read : ஹேர் கலரிங் செய்திருந்தால் சுடு தண்ணீரில் தலை குளிக்க கூடாதா..? கலர் செய்த கூந்தலுக்கான ஹேர் கேர் டிப்ஸ்

வெளியே ஷாப்பிங் அல்லது வேறு ஏதும் வேலையாக வெயிலில் செல்லும்போது சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். தூங்கச் செல்வதற்கு முன் மேக்கப்பை முழுவதுமாக சுத்தம் செய்துவிட்டு தூங்கச் சொல்ல வேண்டும். பலர் இதனை மறந்து மேக்கப் செய்த முகத்துடனே தூங்கச் சென்று விடுகின்றனர் இதனால் அதில் உள்ள வேதிப்பொருட்கள் நேரடியாக ரத்தத்தில் கலந்து நச்சு தன்மையை உருவாகும் அபாயம் உண்டு.

தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இயற்கையாகவே உடற்பயிற்சி செய்யும்போது அது முகத்திற்கு ஒரு பொலிவை கொடுக்கிறது. சில நாட்கள் சரியான முறையில் உடற்பயிற்சி செய்தால் நீங்களே உங்கள் முகத்தில் ஏற்படும் மாற்றத்தை பார்க்கலாம்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Beauty Tips, Skincare