ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கர்ப்ப காலத்தில் இந்த ஸ்கின்கேர் பொருட்களை அப்ளை செய்தால் குழந்தைக்கும் ஆபத்தா..?

கர்ப்ப காலத்தில் இந்த ஸ்கின்கேர் பொருட்களை அப்ளை செய்தால் குழந்தைக்கும் ஆபத்தா..?

கர்ப்ப காலத்தில் ஸ்கின்கேர்

கர்ப்ப காலத்தில் ஸ்கின்கேர்

சில தயாரிப்புகளில் உள்ள சில பொருட்கள் கர்ப்பிணி பெண்களின் உடலாலும், அதனால் வயிற்றில் உள்ள குழந்தையின் உடலாலும் "உறிஞ்சப்படலாம்". இதை வேறுவிதமாக கூற வேண்டும் என்றால் - குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் சில ஸ்கின் கேர் பொருட்கள் இங்கே உள்ளன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஒரு பெண்ணின் முழு உலகமும் அவள் கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடிக்கும் தருணத்தில் மாறிவிடும். அதில் அவளுடைய ஸ்கின் கேர் (தோல் பராமரிப்பு) தயாரிப்புகளில் சில மாற்றங்களைச் செய்வதும் அடங்கும். கர்ப்ப காலத்தில் தங்களுக்கு பிடித்தமான ஸ்கின் கேர் பொருட்களை கைவிடுவது என்பது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் கூட, அதற்கு ஒரு சரியான காரணமும் இருக்கிறது.

அது என்னவென்றால் - சில தயாரிப்புகளில் உள்ள சில பொருட்கள் கர்ப்பிணி பெண்களின் உடலாலும், அதனால் வயிற்றில் உள்ள குழந்தையின் உடலாலும் "உறிஞ்சப்படலாம்". இதை வேறுவிதமாக கூற வேண்டும் என்றால் - குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் சில ஸ்கின் கேர் பொருட்கள் இங்கே உள்ளன. இருப்பினும் இந்த இடத்தில், கர்ப்பிணி பெண்கள் தங்கள் சருமம் மற்றும் குழந்தை பாதுகாப்பு ஆகிய இரண்டிற்கும் இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்த முடியும்.

தோல் மருத்துவர் டாக்டர் ஜெய்ஸ்ரீ ஷரத், கர்ப்ப காலத்தில் எந்தெந்த ஸ்கின் கேர் பொருட்களை பயன்படுத்துவது பாதுகாப்பானது, எதெல்லாம் பயன்படுத்தக்கூடாது என்கிற பட்டியலை ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோ வழியாக பகிர்ந்து உள்ளார். குறிப்பிட்ட வீடியோவானது, கர்ப்பத்தால் ஏற்படும் விரும்பத்தகாத சருமம் தொடர்பான மாற்றத்தை சரிசெய்ய விரும்பும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் டாக்டர் ஜெய்ஸ்ரீ ஷரத், கர்ப்பத்தை திட்டமிடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே நிறுத்தப்பட வேண்டிய பொருட்கள் மற்றும் கர்ப்பம் முழுவதும் பயன்படுத்தக் கூடாத பொருட்களையும் இங்கே முன்னிலைப்படுத்துகிறார்.

பாதுகாப்பற்ற தயாரிப்புகளின் பட்டியல்:

ரெட்டினாய்டுஸ்: 'டாப்பிக்கல்' ஆக இருந்தாலும் சரி (கிரீம்கள், சீரம்கள்) மற்றும் 'ஓரல்' ஆக (ஐசோட்ரெட்டினோயின்) இருந்தாலும் சரி.

கர்ப்பம் தரிக்க திட்டமிடும் பெண்கள் இன்றிலிருந்து இந்த உணவுகளையும் கட்டாயம் சாப்பிடுங்க..!

ஹைட்ரோகுவினோன்: சருமத்தை ஒளிரச் செய்யும் கிரீம்களில் காணப்படும் ஒரு மூலப்பொருள்.

அர்புடின்: ஆல்பா அர்புடின் என்பது சருமத்தை ஒளிரச் செய்யும் பொருட்களில் உள்ள மற்றொரு மூலப்பொருள் ஆகும்.

அதிக அளவுகளில் சாலிசிலிக் அமிலம்: சாலிசிலிக் அமிலத்தின் அதிக கான்செண்ட்ரேஷன்ஸ் பாதுகாப்பானது அல்ல, இருப்பினும் ஃபேஸ் வாஷ் மற்றும் சில சீரம்களில் குறைந்த கான்செண்ட்ரேஷன்ஸ் இருப்பது பாதுகாப்பானது.

பாதுகாப்பான தயாரிப்புகளின் பட்டியல்:

வைட்டமின் சி: வைட்டமின் சி சருமத்திற்கு பொலிவை தருகிறது.

ஹைலூரோனிக் அமிலம்: ஹைலூரோனிக் அமிலம் சிறந்த ஹைட்ரேடிங் ஏஜென்ட்.

லாக்டிக் அமிலம்: லாக்டிக் அமிலம் முகப்பருவிற்கு சிகிச்சை அளிக்கிறது.

அசெலிக் அமிலம்: இதையும் முகப்பருவுக்கு பயன்படுத்தப்படலாம்.

பகுச்சியோல் (Bakuchiol): இதை ரெட்டினோலுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படலாம்.

சன்ஸ்கிரீன்ஸ்: ஸின்க் ஆக்சைடு ஏஎம்டி டைட்டானியம் டை ஆக்சைடு போன்ற பிஸிக்கல் பிளாக்ஸ் பாதுகாப்பானவைகள் ஆகும்.

சரும பிரச்சனைகளை தவிர்க்க வீட்டிலேயே இந்த ஃபேஸ் வாஷ் செய்து வைத்துக்கொள்ளுங்கள் : இந்த 5 பொருள் போதும்..!

அனைத்து தாய்மார்களும் தங்கள் உடலுக்குள் செல்லும் அனைத்தின் மீதும், குறிப்பாக அவர்களின் முகம் மற்றும் தோலில் பயன்படுத்தும் பொருட்கள் மீதும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் கர்ப்பம் அடைவது எவ்வளவு முக்கியமோ, அதே போல கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளை பற்றி அறிந்துகொள்வதும் முக்கியமே!

Published by:Sivaranjani E
First published:

Tags: Pregnancy care, Skincare