ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சரும பராமரிப்பில் முக்கிய பங்காற்றும் வேம்பு மற்றும் கற்றாழை.!

சரும பராமரிப்பில் முக்கிய பங்காற்றும் வேம்பு மற்றும் கற்றாழை.!

வேம்பு மற்றும் கற்றாழை

வேம்பு மற்றும் கற்றாழை

Neem And Aloe Vera Skin Care | பழங்காலத்தில் இருந்தே பெண்கள் பயன்படுத்தி வரும் வேம்பு மற்றும் கற்றாழை சருமத்தை இயற்கையாக பிரகாசம் அடைய துணை புரிகிறது. வேம்பு மற்றும் கற்றாழையின் சரும பாதுகாப்பு பண்புகள் குறித்து நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.,

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தற்போது மார்க்கெட்டுகளில் எண்ணற்ற சரும பாதுகாப்பு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பொருட்களை நாம் வாங்கி பயன்படுத்தினால் தற்காலிக பளபளப்பை தருமே தவிர நாளடைவில் சருமம் பொலிவிழந்து வயதான தோற்றத்தை பெறும். இதற்கு மாற்றாக இயற்கையான பொருட்களால் தயார் செய்யப்படும் பொருட்களை நாம் பயன்படுத்தினால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது.

இதில் குறிப்பாக பழங்காலத்தில் இருந்தே பெண்கள் பயன்படுத்தி வரும் வேம்பு மற்றும் கற்றாழை சருமத்தை இயற்கையாக பிரகாசம் அடைய துணை புரிகிறது. வேம்பு மற்றும் கற்றாழையின் சரும பாதுகாப்பு பண்புகள் குறித்து நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.,

வேம்பின் நற்பயன்கள் :

வேம்பில் ஆரோக்கியமான சருமத்திற்குத் தேவையான ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. வேம்பு இலைகளை சருமத்தில் பயன்படுத்துவதால் முகப்பரு மற்றும் தழும்புகளை எளிதாக அகற்ற முடியும். எனவே வேம்பு இலைகளை மஞ்சளுடன் சேர்ந்து சிறிது தண்ணீர் கலந்து சருமத்தில் அப்ளை செய்து வந்தால் பொலிவான சருமத்தை பெற முடியும்.

வேம்பின் இலைகள் மட்டுமின்றி வேம்பு மரத்தில் உள்ள அனைத்தும் சருமத்திற்கு நன்மை அளிக்கிறது. அதாவது வேப்பங்கொட்டையில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால் முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி பருக்களை குறைக்கிறது.

Also Read : மழைக்காலத்திலும் சருமம் பொலிவுடன் இருக்க மறக்காமல் செய்ய வேண்டிய விஷயங்கள்...

வேம்பு இலை மற்றும் வேம்பு பூக்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ட்ரைகிளிசரைடுகள் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே சருமத்தில் உள்ள மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்க வேம்பு இலைகள் மற்றும் வேம்பு பூக்களை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அந்த நீரை ஆவி பிடித்து வந்தால் நல்ல பலனை பெறலாம். மேலும் இது சருமத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்வதால் சருமத்தில் உள்ள அசுத்தங்கள் நீங்கி, துளைகள் இறுக்கமடைகின்றன. இதனால் உங்கள் சருமம் இளமையாக காட்சியளிக்கும்.

மேலும் சருமத்தில் உள்ள வெள்ளை புள்ளிகள், கரும்புள்ளிகளை நீக்கவும், சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

Also Read : எந்த கிளைமேட்டாக இருந்தாலும் தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாமா..?

கற்றாழையின் நன்மைகள்:

கற்றாழை சரும பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பாக வெயிலில் சென்று வந்தால் உருவாகும் சன் டேன் எனும் கருமையை நீக்க கற்றாழை முக்கிய பங்காற்றுகிறது. கற்றாழை ஜெல்லை எடுத்து தண்ணீரில் கழுவி விட்டு அதனை சருமத்தில் நேரடியாக அப்ளை செய்து வந்தால் உடனடி பலன் கிடைக்கும்.

கற்றாழையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் ஏற்படும் காயங்கள், வீக்கத்தை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. எனவே தினமும் இரவு கற்றாழை ஜெல்லை சருமத்தில் அப்ளை செய்து பின்னர் மறுநாள் காலை கழுவி வந்தால் சருமம் பொலிவாகும்.

Also Read : டிரெண்டாகும் கிளாசி மேக்அப்... நீங்களும் டிரை பண்ண உங்களுக்கான டிப்ஸ்...

கற்றாழை சருமத்தின் வயதான செயல்முறையை மெதுவாக்குகிறது, இதனால் கற்றாழையை பயன்படுத்தி வருபவர்கள் இளமையாக காட்சியளிப்பீர்கள்.

கற்றாழை ஜெல் முகப்பரு மற்றும் முகப்பரு தழும்புகளைப் போக்க மட்டுமின்றி, ஸ்ட்ரெட்ச் மார்க்களையும் மறைய வைக்க உதவுகிறது. மேலும் சருமத்தை ஊட்டமளித்து குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

வறண்ட சருமம் இருப்பவர்கள் கற்றாழை ஜெல்லை முகத்தில் தேய்த்து வந்தால் சருமம் ஈரப்பதத்துடன் காணப்படும். நீங்கள் கற்றாழை ஜெல்லுடன் மஞ்சள் தூள், வைட்டமின் ஈ திரவம் சேர்த்து பயன்படுத்தி வந்தால்  கண்களில் உள்ள கருவளையம் மறையும்.

Published by:Selvi M
First published:

Tags: Aloe vera, Neem, Skin Care