Home /News /lifestyle /

கோடைகால பருக்களா..? முக அழகை கெடுக்கும் அவற்றை உடனே போக்க டிப்ஸ்..!

கோடைகால பருக்களா..? முக அழகை கெடுக்கும் அவற்றை உடனே போக்க டிப்ஸ்..!

முகப்பரு

முகப்பரு

வெயில் சுட்டெரிக்கும் இந்த நேரத்தில்  புற ஊதா கதிர்களின் வெளிப்பாடு மற்றும் அதிக வியர்வை உள்ளிட்டவை முகப்பரு பிரச்சனை உள்ளவர்களுக்கு மேலும் பாதிப்பு ஏற்படுத்தும்.

பலருக்கும் ஆண்டின் பல மாதங்களில் நீடிக்கும் பிரச்சனையாக இருந்து வருகிறது முகப்பரு. அதுவும் இது கோடைகாலம் என்பதால் கேட்கவே வேண்டாம். பலருக்கும் எப்போதும் சாதாரணமாக இருந்து வரும் முகப்பரு இந்த கோடை மாதங்களில் மிகவும் மோசமாக இருக்கும்.

வெயில் சுட்டெரிக்கும் இந்த நேரத்தில் புற ஊதா கதிர்களின் வெளிப்பாடு மற்றும் அதிக வியர்வை உள்ளிட்டவை முகப்பரு பிரச்சனை உள்ளவர்களுக்கு மேலும் பாதிப்பு ஏற்படுத்தும். இதில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியனான ஒன்று சூரிய ஒளி காரணமாக முகப்பரு மோசமடையாது. பெரும்பாலும் இது அதிகரித்த எண்ணெய் உற்பத்தபு, அதிக வெப்பத்தால் ஏற்படும் வியர்வை மற்றும் சரும துளைகள் அடைப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது.

சருமத்தை பளபளப்பாக ஆரோக்கியமாகவும் வைத்திருக்க பயன்படுத்தப்படும் சன்ஸ்கிரீன்கள், மாய்ஸ்சரைசர்கள், சீரம்கள் வியர்வையுடன் கலந்தால் அவை துளைகளை அடைத்து முகப்பருக்கள் அதிகரிக்க வழிவகுக்கும். முகப்பரு வெடிப்புகள் பல வடிவங்களில் தோன்றலாம். பிளாக்ஹெட்ஸ் அல்லது ஒயிட்ஹெட்ஸ் போன்ற லேசான வடிவங்களில் சாலிசிலிக் ஆசிட் அல்லது பென்சில் பெராக்சைடு அடிப்படையிலான ஃபேஸ் வாஷ் போன்றவை பயனளிக்கலாம். அழற்சி புண்கள், கொப்புளங்கள் போன்ற தீவிர வடிவங்களில் முகத்தில் பருக்கள் ஏற்பட்டால் தோல் சிகிச்சை நிபுணரிடம் செல்ல வேண்டும்.கோடையில் முகப்பரு வராமல் தடுக்க உதவும் குறிப்புகள்..

கோடையில் நாளொன்றுக்கு 2 முறை ஃபோமிங் ஃபேஷியல் க்ளென்சரை (foaming facial cleansers) பயன்படுத்துங்கள். உங்கள் ஸ்கின் டைப்பை பொறுத்து உங்களுக்கேற்ற cleanser-ஐ நீங்கள் தேர்வு செய்து அடிக்கடி முகத்தை கழுவுவது சிறப்பான பலனை தரும். அதே போல அடிக்கடி முகத்தை கழுவுவது அதிகப்படியான வறட்சி மற்றும் எரிச்சலை ஏற்படுத்துவதோடு முகப்பரு வெடிப்புகளை மோசமாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

திருமணத்திற்கு முன்பு பொலிவான முகத்தைப் பெற இந்த 5 வகை மாஸ்க்குகளை முயற்சி செய்யலாம்!

பகல் நேரத்தில் எப்போது வெளியே சென்றாலும் சன்ஸ்கிரீனை பயன்படுத்துங்கள்.

பகலில் உங்கள் முகத்தில் எண்ணெய் வழிந்தால் ஃபேஸ் மிஸ்ட்டை பயன்படுத்தி பலன் பெறுங்கள்

ஹெவி லோஷன்கள் அல்லது கிரீம்களை தவிர்த்து அதற்கு பதில் லைட் மாய்ஸ்சரைசர் மற்றும் ஜெல் அடிப்படையிலான சன்ஸ்கிரீனை பயன்படுத்துங்கள்.முகப்பருக்களை எக்காரணம் கொண்டும் கிள்ளி எடுக்காதீர்கள். இப்பழக்கம் அரிப்பு வீக்கம் மற்றும் வடு ஏற்பட வழிவகுக்கும்.

கோடைகாலம் என்பதால் நீங்கள் பீச் அல்லது ஸ்விமிங் ஃபூலுக்கு சென்று பொழுதை கழிப்பீர்கள். ஸ்விமிங் ஃபூல் அல்லது பீச்சை விட்டு வெளியே வந்தவுடன் முகத்தை நன்றாக கழுவி விடுங்கள் அல்லது குளித்து விடுங்கள். ஏனென்றால் உப்பு நீரோ, குளோரினோ உங்கள் முகத்தில் நீண்ட நேரம் இருக்க கூடாது.

சிம்பிளான மேக்கப்பில் ஜொலிக்கும் ஆலியாவின் ப்ரைடல் மேக்கப் டிப்ஸ்

கோவிட் தொற்று நீடிப்பதால் மாஸ்க் அணிந்து கொண்டு செல்கிறோம். இதனிடையே தோலில் உராய்வு அல்லது அழுத்தத்தின் விளைவாக மாஸ்க்னே எனப்படும் முகப்பருக்கள் ஏற்படுகின்றன. மாஸ்க் போட்டிருப்பதால் ஏற்படும் ஈரப்பதம் சரும துளைகளில் தடையை ஏற்படுத்துகிறது. எனவே காமெடோன்ஸ் மற்றும் அழற்சி புண்கள் உருவாகின்றன. மாஸ்க்னேவை தடுக்க எப்போதும் சுத்தமான மாஸ்க்-குகளை அணிவதும், குறைந்தபட்சம் தினமும் இருமுறை முகத்தை கழுவதும் முக்கியம்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Acne, Beauty Tips, Summer Heat

அடுத்த செய்தி