ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

YearEnder 2021 : இந்தாண்டு மக்களிடையே அதிகம் ட்ரெண்டான ஸ்கின்கேர் தயாரிப்புகள்..!

YearEnder 2021 : இந்தாண்டு மக்களிடையே அதிகம் ட்ரெண்டான ஸ்கின்கேர் தயாரிப்புகள்..!

ஸ்கின்கேர்

ஸ்கின்கேர்

ரெட்டினோல் தோல் பராமரிப்பு துறையில் வெற்றிகரமாக செய்லபடும் ஒரு முக்கிய தயாரிப்பு. இது முதலில் அறியப்படாத மூலப்பொருளாக இருந்து தற்போது தோல் பராமரிப்பில் மிகவும் தேவையான பொருட்களில் ஒன்றாக மாறியுள்ளது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

2021ம் ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டை போலவே கொரோனாவால் பல ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் சென்றது. இருப்பினும், தடுப்பூசிகளின் பயன்பாடு அதிகரித்ததால் உலக நாடுகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பின. இந்தசமயங்களில், ஒவ்வொருவரும் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த தொடங்கினர். அதேபோல, சரும பாதுகாப்பு தயாரிப்புகள் மீதும் மோகம் அதிகரித்தது. அந்த வகையில் இந்த வருடம் மக்களிடையே மிகவும் பிரபலமான முக்கிய தயாரிப்புகள் குறித்து பின்வருமாறு காண்போம்.

வைட்டமின் சி :

சரும பாதுகாப்பில் கவனம் செலுத்தும் பெண்களின் அலமாரிகளில் கட்டாயம் வைட்டமின் -சி என்ற தயாரிப்பு பொருள் கட்டாயம் இருக்கும். இதனை பயன்படுத்துவதால் சருமம் நல்ல பொலிவினை பெரும். மேலும் ஒளிரும் பண்புகளைத் தவிர, இது சருமத்தை மீண்டும் புதியதாக சரிசெய்து, உடனடி பிரகாசத்தை அளிக்கிறது.

ரெட்டினோல் :

ரெட்டினோல் தோல் பராமரிப்பு துறையில் வெற்றிகரமாக செய்லபடும் ஒரு முக்கிய தயாரிப்பு. இது முதலில் அறியப்படாத மூலப்பொருளாக இருந்து தற்போது தோல் பராமரிப்பில் மிகவும் தேவையான பொருட்களில் ஒன்றாக மாறியுள்ளது. வயதாகும்போது மேல் முகத்தில் மெல்லிய கோடுகள், பெரிய துளைகள், ஆரம்ப சீரற்ற தோல் தொனி மற்றும் நிறமி போன்ற தோல் மாற்றங்களை நாம் பார்க்க ஆரம்பிக்கிறோம். இந்த வயதான அறிகுறிகளைத் தடுக்க 25 வயதிற்குப் பிறகு உங்கள் தோல் பராமரிப்பு நடைமுறைகளில் ரெட்டினோலைச் சேர்த்துக்கொள்வது சருமத்தை இளமையாக வைக்க உதவும்.

ஹையலூரோனிக் அமிலம் :

ஈரப்பதம்-காந்தம் என்றும் சொல்லக்கூடிய அழகுத் துறையில் உள்ள மூலப்பொருள், சருமத்தை ஊட்டமாகவும், பொலிவாகவும், நீரேற்றமாகவும் வைக்க உதவுவதால் இந்த ஆண்டு இந்த தயாரிப்பு பலரால் வாங்கப்பட்டது.

குளிர்காலத்தில் சன்ஸ்கிரீன் அப்ளை செய்வது அவசியம் : ஏன் தெரியுமா..?

சாலிசிலிக் அமிலம் :

சாலிசிலிக் ஆசிட் என்பது தோல் பராமரிப்பின் சூப்பர் ஹீரோ ஆகும். இது முகப்பரு ஏற்படுவதை தடுக்க உதவும் சிறந்த பொருட்களில் ஒன்றாகும். இந்த ஸ்பாட்-கிளியரிங் அமிலம், இலக்கு சிகிச்சைகள் முதல் டோனர்கள், சீரம்கள் மற்றும் கிரீம்கள் வரை எண்ணற்ற தோல் பராமரிப்புப் பொருட்களில் சேர்க்கப்படும் மூலப்பொருளாக இது இருக்கிறது. மேலும் முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமம் உள்ளவர்களுக்கு இது சிறந்த தயரிப்பாக இருக்கும்.

நியாசினமைடு :

நியாசினமைடு சில காலமாக சரும பராமரிப்பு சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முகப்பரு புள்ளிகள் மற்றும் வறட்சியைப் போக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு மந்திரப் பொருளாக செயல்படும். முதுமையின் அனைத்து அறிகுறிகளையும் எதிர்த்துப் போராடுவதற்கும், நுண்ணிய கோடுகள், புள்ளிகள், சுருக்கங்கள் மற்றும் கண்களுக்குக் கீழே உள்ள கருமை போன்ற அனைத்து ஆரம்ப அறிகுறிகளைத் தடுப்பதற்கும் நம் உடலுக்கு ஒவ்வொரு நாளும் தேவைப்படும் ஆக்ஸிஜனேற்றிகளின் சக்தியாக இது செயல்படுகிறது.

ப்ரீ/புரோபயாடிக்குகள் :

சரும பராமரிப்பு பொருட்களில் மிகவும் ட்ரெண்டான ஒரு சரும பராமரிப்பு தயரிப்பு என்றால் அது புரோபயாடிக்குகள் தான். இப்போது சருமப் பராமரிப்பில் ப்ரோ மற்றும் ப்ரீபயாடிக்குகளைப் பயன்படுத்துவதில் நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன. புரோபயாடிக் உட்செலுத்தப்பட்ட பொருட்கள் தோலில் பாக்டீரியாவைச் சேர்க்கின்றன மற்றும் அதன் உகந்த சமநிலையை பராமரிக்க உதவுகின்றன.

குளிர்காலங்களில் பொடுகு தொல்லையில் இருந்து உங்கள் தலைமுடியை பாதுகாப்பது எப்படி?

ஸ்குவாலேன் :

இது வறண்ட சருமத்தின் மீட்பராக செயல்படுகிறது. மேலும் உங்கள் சருமத்தின் வறட்சியை தணிக்க உங்களுக்குத் தேவையான நீரேற்றத்தை வழங்கும் முக்கியப் பொருளாக ஸ்குவாலேன் உள்ளது. ஆனால் ஹைலூரோனிக் அமிலத்துடன் குழப்பமடைய வேண்டாம். இவை இரண்டும் இயற்கையாகவே நம் உடலில் தோன்றும் ஒரு மூலப்பொருள் தான். ஆனால் தோல் பராமரிப்பு பொருட்களாக அவற்றின் நன்மைகள் வேறுபட்டவை. ஹைலூரோனிக் அமிலம் சருமத்தில் ஏற்கனவே இருக்கும் ஈரப்பதத்தைத் தக்கவைத்துக்கொள்வதில் சிறந்தது. அதே நேரத்தில் ஸ்குவாலேன் ஈரப்பதத்தைச் சேர்ப்பதன் மூலம் வறண்ட சருமத்தை நிரப்புகிறது.

அலோ வேரா :

அலோ வேரா என்பது தனிப்பட்ட பராமரிப்புக்காகப் பயன்படுத்தப்படும் மிகவும் செழிப்பான தாவரவியல் பொருட்களில் ஒன்றாகும். இது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த ஒரு பொருள் தான். இது முக்கியமாக அதன் குளிர்ச்சி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் போனவை.

கொலாஜன் :

இது அடிப்படையில் ஒரு புரதம் ஆகும். நமது தோலின் கட்டுமான தொகுதிகளாக செயல்படுகிறது. இருப்பினும், வயதாகும்போது, ​​​​கொலாஜனின் இயற்கையான அளவு குறைகிறது. ஆனால் கொலாஜன்-அதிகரிக்கும் தோல் பராமரிப்பு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, குறைவான சுருக்கங்கள் மற்றும் தோல் நெகிழ்ச்சி மற்றும் உறுதியான தன்மை ஆகியவை எளிதில் கிடைக்கும். எனவே, இந்த வருடம் இந்த பராமரிப்பு பொருளின் விற்பனை அதிகரித்தது.

பகுச்சியோல் :

Bakuchiol தோல் பராமரிப்புப் பொருட்களில் பயன்படுத்தப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, அது ஏற்கனவே இந்திய ஆயுர்வேத சிகிச்சைகள் மற்றும் நோய் தடுப்பு மருந்துகளில் பயன்படுத்தப்பட்டது. இது ஆக்ஸிஜனேற்ற மற்றும் வயதான எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

அழகு சப்ளிமெண்ட்ஸ் :

ஓரல் தோல் பராமரிப்பு சப்ளிமெண்ட்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு நிச்சயமாக வரும் ஆண்டுகளில் டிரெண்ட் ஆகப் போகிறது. மக்கள் தங்கள் தோலிலும், உடலிலும் எதைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றி அதிக விழிப்புணர்வுடன் இருக்கின்றனர்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Beauty Tips, Cosmetics, YearEnder 2021