Home /News /lifestyle /

உஷார்..! இந்த 5 பொருட்களையும் தெரியாமல் கூட உங்கள் முகத்தில் பூசி விடாதீர்கள்!

உஷார்..! இந்த 5 பொருட்களையும் தெரியாமல் கூட உங்கள் முகத்தில் பூசி விடாதீர்கள்!

அழகுக்குறிப்பு

அழகுக்குறிப்பு

குளிர் காலங்களில் உங்கள் சருமத்தில் பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்தினால், நீங்களே சருமப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறீர்கள்

உங்கள் சருமம் பளபளப்பாக, எந்த குறைபாடுகளும் இல்லாமல், பொலிவுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? அதற்காக ஏதேனும் ஒரு ஸ்கின் கேர் ரொட்டீனில் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளீர்களா?

"ஆம்" என்றால், உண்மையில் அதுவொரு நல்ல விடயம் தான். இருப்பினும் நம்மில் பெரும்பாலோர் தத்தம் சருமத்தை மிகவும் சாதாரணமாக கையாள்கிறோம்! அதாவது அதிக ரசாயனங்கள் மிக்க அழகுசாதனப் பொருட்களை எந்தவொரு முன்-பின் சிந்தனையுமின்றிப் பயன்படுத்துகிறோம், சோம்பேறித்தனத்தால் முறையான சருமப் பராமரிப்பை மேற்கொள்ளாமல் இருப்பது மட்டுமின்றி, பல தவறுகளையும் சேர்த்து செய்கிறோம்.

"வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சருமத்தை பராமரிப்பது எப்படி?" என்கிற தலைப்பின் கீழ் இணையத்தில் குவிந்து கிடக்கும் லட்சக்கணக்கான சருமப் பராமரிப்பு சார்ந்த DIY-க்களை முயற்சி செய்பவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இது உங்களுக்கான எச்சரிக்கை!

தோல் ஒவ்வாமை, எரிச்சல் காயங்கள், கொப்புளங்கள் மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷனை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், உங்களை விரைவில் வயதானவர்களாகவும் மாற்றலாம். இது கேட்பதற்கு நம்பும்படியாக இல்லையென்றாலும், ஆராய்ந்து பார்த்தால் அதிர்ச்சி அடைவீர்கள்!

தோல் மருத்துவரும், எலிமெண்ட்ஸ் ஆஃப் ஆஸ்தெட்டிக்ஸின் நிறுவனருமான டாக்டர் ஸ்டுடி கரே சுக்லா, நீங்கள் உங்கள் முகத்தில் பயன்படுத்தக்கூடாத 5 பொருட்கள் அல்லது தயாரிப்புகளையும் அவற்றின் விளைவுகளையும் பட்டியலிட்டுள்ளார்:1. பார் சோப்

ஃபேஸ் வாஷ் இல்லாத நேரத்தில் அல்லது குளிக்கும்போது சோம்பேறித்தனமாக இருக்கிறது என்று முகத்தில் பார் சோப்பைப் பயன்படுத்தியிருக்கிறீர்களா? ஆம் என்றால் இந்த செயலை உடனே நிறுத்த வேண்டாம். ஏனெனில் டாக்டர் சுக்லாவின் கூற்றுப்படி, “ஒரு பார் சோப்பில் ஆல்கலைன் பிஎச் உள்ளது, அதே சமயம் உங்கள் தோலில் அசிட்டிக் பிஎச் உள்ளது. எனவே, இது உங்கள் சருமத்தின் மாய்ஸ்ச்சர் பேரியரை (அதாவது நல்லதை ஏற்கும்; கெட்டதை வெளியேற்றும் திறனை) சீர்குலைத்து, உங்கள் சருமத்தை நிரந்தரமாக சென்சிடிவ் ஆக மாற்றக்கூடிய பல தோல் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

கொலாஜின் அடுக்குகள் முகத்திற்கு செய்யும் நன்மைகள் என்ன..? கட்டுக்கதைகளும்..உண்மைகளும்

2. பெட்ரோலியம் ஜெல்லி

குளிர் காலங்களில் உங்கள் சருமத்தில் பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்தினால், நீங்களே சருமப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறீர்கள் என்று அர்த்தம். மிகவும் அடர்த்தியான பெட்ரோலியம் ஜெல்லியை முகத்தில் பயன்படுத்தக் கூடாது, இது உங்கள் சருமத்தில் மிகவும் தடிமனான அடுக்கை உருவாக்கும். எண்ணெய்ப் பசையான சருமம் கொண்டவர்களுக்கு முகப்பரு மற்றும் சருமத்தில் சிறு சிறு வெடிப்புகள் ஏற்படலாம். பெட்ரோலியம் ஜெல்லிக்கு மாற்றாக, உங்கள் சருமத்தை சரியான ஈரப்பதத்தில் வைக்க சருமத்தில் ஊடுருவிச் செல்லும் லைட்வெயிட் மாய்ஸ்சரைசரைத் தேர்வு செய்யவும். மாய்ஸ்சரைசரை வாங்கும் போது ஹைலூரோனிக் ஆசிட்டின் இருப்பை சரி பார்க்கவும்.3. டூத்பேஸ்ட் பயன்பாடு!

உலகம் முழுவதும் முகப்பருவுக்கு எளிதான, ஒரே இரவில் மாற்றம் அளிக்கும் தீர்வாகக் கருதப்படும் பற்பசை, உண்மையில் சருமத்தில் பயன்படுத்தக் கூடாத மிக மோசமான பொருளாகும். டூத்பேஸ்ட் வழியாக உங்கள் முகப்பரு அல்லது பருக்களுக்கு சிகிச்சையளிப்பது சில சமயங்களில் சருமத்திற்கு பொருந்தாத இரசாயனங்களின் இருப்பால் எரிச்சலை உண்டாக்கலாம். டூத்பேஸ்ட்டால் முகப்பருவை தடுக்க முடியாது, ஆனால் உலர வைத்திடும், இருந்தாலும் அது உங்கள் முகத்தில் ஒரு மோசமான வடு அல்லது காயத்தை ஏற்படுத்தலாம் முகப்பருவிற்கு மருத்துவரின் சிகிச்சையே சிறந்தது என்பதை புரிந்துகொள்வது முக்கியம் என்கிறார் டாக்டர் சுக்லா.

முகத்தில் உள்ள முடியை எளிதாக வீட்டிலேயே நீக்க உதவும் 4 ஃபேஸ் மாஸ்க் டிப்ஸ்

4. ஆல்கஹாலை தேய்த்தல்!

ஆல்கஹால் - சருமத்திற்கு பொருந்தாத ஒன்று. நீங்கள் ஆல்கஹால் கொண்டு உங்கள் சருமத்தை தேய்க்கும் பட்சத்தில் அது உங்கள் சருமத்தை வறண்டதாகவும் சென்சிடிவ்வாகவும் மாற்றும். இது மற்ற சரும பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். டாக்டர் சுக்லாவின் கூற்றுப்படி, “ஆல்கஹாலை சருமத்தில் தேய்ப்பது உங்கள் ஸ்கின் பேரியரை சீர்குலைக்கும்".5. பாடி லோஷன்

பாடி லோஷனை முகம் மற்றும் கழுத்தில் தடவுகிறீர்களா? இதை உடனே நிறுத்துங்கள்! முகத்தில் உள்ள தோல் மிகவும் மெல்லியதாகவும் மென்மையாகவும் இருக்கும். அதே சமயம், பாடி லோஷன் ஒரு பேஸ் மாய்ஸ்சரைசரைப் போலவே இருந்தாலும், அது முகத்திற்காக உருவாக்கப்பட்டதல்ல! பொதுவாக பாடி லோஷன்களில் கடுமையான பொருட்களே இருக்கும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Beauty Tips, Skincare

அடுத்த செய்தி