Home /News /lifestyle /

Skincare : கோடைகாலத்தில் உங்கள் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் இயற்கை பொருட்கள்!

Skincare : கோடைகாலத்தில் உங்கள் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் இயற்கை பொருட்கள்!

எண்ணெய் வடிந்த முகம் : பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனை எண்ணெய் வடிந்த முகம். இந்த பிரச்சனையை எதிர்கொள்பவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், ஒரு டீ ஸ்பூன் முட்டையின் வெள்ளை கருவை எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன், அரை டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் முல்தானி மிட்டி மற்றும் ஒரு டீ ஸ்பூன் தேனை சேர்த்துக்கொள்ளுங்கள். அவற்றை நன்கு கலக்கி முகம் முழுவதும் தடவிக் கொண்டு, காயும் வரை காத்திருங்கள்த. பிறகு தண்ணீரில் முகத்தை கழுவினால் எண்ணெய் இருக்காது.

எண்ணெய் வடிந்த முகம் : பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனை எண்ணெய் வடிந்த முகம். இந்த பிரச்சனையை எதிர்கொள்பவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், ஒரு டீ ஸ்பூன் முட்டையின் வெள்ளை கருவை எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன், அரை டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் முல்தானி மிட்டி மற்றும் ஒரு டீ ஸ்பூன் தேனை சேர்த்துக்கொள்ளுங்கள். அவற்றை நன்கு கலக்கி முகம் முழுவதும் தடவிக் கொண்டு, காயும் வரை காத்திருங்கள்த. பிறகு தண்ணீரில் முகத்தை கழுவினால் எண்ணெய் இருக்காது.

கோடை காலத்தில், முகப்பரு, சரும கருமை, திறந்த துளைகள் போன்ற தோல் பிரச்சினைகள் ஏற்படும். இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க வீட்டில் இருந்த பொருட்களை கொண்டே இயற்கையான முறையில் தீர்வு பெறலாம்.

aciuதற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளது. இத்தகைய காலத்தில் காட்டன் உடைகளை அணிவது மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகளை சாப்பிடுவது அவசியம். மேலும் கோடை காலத்தில் அதிக வெப்பநிலை இருக்கும் என்பதால், உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். பொதுவாகவே கோடை காலத்தில், முகப்பரு, சரும கருமை, திறந்த துளைகள் போன்ற தோல் பிரச்சினைகள் ஏற்படும். இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க வீட்டில் இருந்த பொருட்களை கொண்டே இயற்கையான முறையில் தீர்வு பெறலாம். அவை என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,

ஓட்ஸ் - தக்காளி பேஸ் பேக் :ஓட்ஸ் குறைவான கலோரி உள்ள ஆரோக்கியமான சிற்றுண்டியாக இருந்தாலும், இது உங்கள் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை ஈர்க்க உதவி, முகப்பருவிற்கும் சிகிச்சையளிக்கிறது. மேலும் இறந்த சரும செல்களை அகற்றவும் உதவுகின்றன. மேலும் தக்காளி சாறு வெயிலால் தோன்றிய சரும கருமையை நீக்கவும், கொலாஜன் உற்பத்தியைத் தூண்டவும் உதவுகிறது.

ALSO READ :  இதய நோயை தடுக்க தக்காளி ஜூஸ் குடிக்கலாம்!

1 தேக்கரண்டி பால், 2 தேக்கரண்டி ஓட்ஸ் மற்றும் 2 தேக்கரண்டி தக்காளி சாறு எடுத்து நன்கு கலக்கவும். தேவைப்பட்டால் ஆரஞ்சு சாறு சேர்க்கலாம். இந்த கலவையை ஒன்றாகக் கலந்து, அடர்த்தியான பேஸ்ட் போன்ற ஃபேஸ் பேக்கை உருவாக்கவும். இந்த பேஸ்ட்டை உங்கள் முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவி உலர விடவும். பின்னர் சாதாரண தண்ணீரில் கழுவி வந்தால், ஆரோக்கியமான பளபளப்பை வழங்கும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தவும்.

பால் - கிளிசரின்குளிரூட்டுகிறது. மேலும் கடுமையான தீக்காயங்களை கூட பால் குணப்படுத்துவதாக அறியப்படுகிறது. அதே நேரத்தில் கிளிசரின் சருமத்தை ஈரப்பதமாக்கும் தன்மை உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது சருமத்தை நீரேற்றமாக மாற்றி, வறட்சியை நீக்கும்.

ALSO READ :  காலாவதியான, கெட்டுப்போன பாலை இனி கீழே ஊற்றவேண்டாம் - சமந்தா சொல்லும் சூப்பர் டிப்ஸ்...

அரை கப் பாலை 3 தேக்கரண்டி கிளிசரின் கலந்து, உங்கள் முகத்தில் அப்ளை செய்யவும். பின்னர் 15 நிமிடங்களுக்கு பிறகு கழுவி விடவும். இது உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுறச் செய்து அதன் இயற்கையான pH சமநிலையை மீட்டெடுக்கும்.

பப்பாளி பழம் :பப்பாளியில் உள்ள பப்பேன் சருமத்தில் உள்ள இறந்த சரும செல்களை நீக்கி, சருமத்தை பொலிவாக்குகிறது. மேலும் வெயிலால் சருமத்தில் உருவாகும் அரிப்புகளைத் தடுப்பதற்கும், சிவப்பு புள்ளிகளை குறைப்பதற்கும் இது உதவுகிறது.

ALSOR READ :  பப்பாளி இலையில் இத்தனை நன்மைகளா..? எப்போது... எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா..?

ஒரு பாத்திரத்தில் ஒரு பப்பாளியை எடுத்து அதை பிசைந்து பேஸ்ட் தயாரிக்கவும். இந்த பேஸ்ட்டை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவி, குளிர்ந்த நீரில் கழுவவும். பின்னர் 20 நிமிடங்களுக்கு பிறகு கழுவி விடவும். இதில் தயிர் அல்லது எலுமிச்சை சாறு கலந்தும் பயன்படுத்தலாம். வாரம் ஒருமுறை இதனை செய்து வரவும்.

வெள்ளரிக்காய் மற்றும் முட்டைவெள்ளரிக்காய் தோலில் இயற்கையான குளிர்ச்சி தன்மை நிறைந்துள்ளது. இது முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமத்திற்கு ஒரு நல்ல மருந்தாக அறியப்படுகிறது. இது சருமத்தில் உள்ள எரிச்சலைத் தணிக்கும் மற்றும் சருமத்திற்கு ஆழமான நீரேற்றத்தை வழங்குகிறது. அதேசமயம், உங்கள் சரும பொலிவிற்கு முட்டையை பயன்படுத்தலாம் இது சருமத்தில் உள்ள துளைகளை இறுக்க உதவுகிறது மற்றும் அதிகப்படியான எண்ணெய்யை நீக்குகிறது

ALSO READ :  வெள்ளரிக்காய் சாப்பிடுவதில் கூட பக்கவிளைவுகள் வருமா..? இவங்கெல்லாம் தொடவே கூடாதா?

இதற்கு வெள்ளரி சாறு மற்றும் ஒரு முட்டையின் வெள்ளை கருவை எடுத்து நன்கு கலந்து கொள்ளவும். இதனை ஒரு மென்மையான பேஸ்ட் செய்யுங்கள். இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்திலும், கழுத்திலும் தடவி அரை மணி நேரத்திற்கு பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும். நீங்கள் எண்ணெய் சருமம் இருந்தால் பால் கூட சேர்த்து கொள்ளலாம். வாரம் இரண்டு முறை இதனை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

 
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Beauty Tips, Skin Care, Summer

அடுத்த செய்தி