ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

முகத்தில் ஏற்படும் கருப்பான திட்டுக்கள்.. ஈசியா சரிசெய்ய ஆயுர்வேத சிகிச்சை இதுதான்!

முகத்தில் ஏற்படும் கருப்பான திட்டுக்கள்.. ஈசியா சரிசெய்ய ஆயுர்வேத சிகிச்சை இதுதான்!

ஸ்கின் பிக்மென்டேஷன்

ஸ்கின் பிக்மென்டேஷன்

Skin Hyperpigmentation : முகத்தில் ஏற்படும் கருப்பான திட்டுக்களை ஆயுர்வேத முறையில் போக்க சிறந்த உபகரங்களை இங்கு தெரிந்துக்கொள்ளுங்கள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பெண்களாக இருந்தாலும், ஆண்களாக இருந்தாலும் சருமத்தை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதிலும் முகத்தில் பருக்களோ அல்லது கரும்புள்ளிகளோ வந்தால் என்ன செய்வது? எப்படி இயற்கையான முறையில் தீர்வு காண்பது என இணையங்களைத் தேட ஆரம்பிப்போம். இவ்வாறு சருமப் பிரச்சனைகளுக்குப் பல முக்கியத்துவம் கொடுத்தாலும் அனைத்து வகை சருமங்களிலும் இயல்புக்கு மாறாக மெலனின் சுரப்பதால், சருமத்தில் ஆங்காங்கே கருந்திட்டுகள் ஏற்பட்டு சீரற்றுப் போகும்.

  இதனால் தோலில் நிறமும் மாறக்கூடும். இன்றைக்கு பொதுவாகப் பலருக்கு ஏற்படும் சரும பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது. இதைத் தான் “பிக்மென்டேஷன்“ என்று அழைக்கிறோம். சருமத்தில் இந்த பிரச்சனை அதிகமாக ஏற்படும் போது ஹைபர் பிக்மெண்டேஷன் என்று சொல்லப்படுகிறது. இதனால் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் தோலின் நிறம் வெளிறுதல், முகத்தில் அடர் கருந்திட்டுக்கள் தோன்றுதல் போன்றவை ஏற்படக்கூடும்.

  முகத்தினை அழகைக் கெடுப்பது போன்று ஏற்படும் இப்பிரச்சனைகளைச் சரி செய்வதற்கு ப்ளீச், பேஸ் வாஷ், கிரீம்கள் போன்றவற்றை அதிகமாகப் பயன்படுத்தும் போது சருமத்தின் PH-ன் அளவை சீர்குலைக்கிறது. எனவே ஆரோக்கியமான முறையில் சருமத்தில் ஏற்படும் நிறத் திட்டுகளுக்கான சிகிச்சைகள் எவ்வாறு பெற முடியும்? என்ற கேள்வி அதிகளவில் பலருக்கு எழக்கூடும். பொதுவாக இவ்வாறு தோலில் ஏற்படும் அடர்திட்டுகளை சரிசெய்வதற்கு லேசர் சிகிச்சைகளைப் பயன்படுத்தினாலும் உடலுக்கு கேடு விளைவிக்கும். எனவே எவ்வித கெமிக்கலும் இல்லாமல் வீட்டில் உள்ள சில ஆயுர்வேத மருந்துகளை நாம் பேஷ்வாஷாக பயன்படுத்தலாம். இதோ அந்த லிஸ்ட்..

  தோல் நிறமி சிகிச்சைக்கான ஆயுர்வேத மருந்துகள்: 

  அதிமதுரம்:

  ஆயுர்வேத மூலிகைகளில் மிகச்சிறந்தது அதிமதுரம். இந்த வேரில் உள்ள ஃபிளாவனாய்டுகள், தாதுகள், வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு சரும பிரச்சனைக்கும் தீர்வு காண்கிறது. குறிப்பாகச் சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், பிக்மெண்டேஷன் எனப்படும் தோல் நிறமி பிரச்சனை போன்றவற்றிற்கு அதிமதுரத்தின் பேஸ்பேக் சிறந்த பலனளிக்கும்.

  பகுச்சி எண்ணெய் (Bakuchi oil) :

  தோல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்கும் திறன் இந்த எண்ணெய்-க்கு உள்ளது. ஆயுர்வேத மருத்துவத்தில் சொறி, சிரங்கு போன்ற பிரச்சனைகளிலும், முக சருமத்தில் ஏற்படும் கருந்திட்டுக்களுக்கும் இதனைப் பயன்படுத்துகின்றனர்.

  Also Read : இதையெல்லாம் சாப்பிட்டாலே போதும்.. உங்க சருமம் பளபளக்கும்.. ஆரோக்கிய சருமத்துக்கு சூப்பர் டயட் ப்ளான்!

  அர்புடின் பெர்ரி சாறு, வைட்டமின் சி, துத்தநாகம், ஜிங்க் சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காய், கொண்டைக்கடலை, ஓட்ஸ், பயறு வகைகள், சிறுதானியங்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றையும், பைட்டோ மூலங்களிலிருந்து கிடைக்கும் வைட்டமின் ஏ போன்றவற்றையும் வழக்கமாக நீங்கள் உங்களது உணவு முறையில் எடுத்துக் கொள்ளலாம் . கடலை மாவு, பாசிப்பயறு மாவு போன்றவற்றையும் உங்களது முகத்தில் உள்ள பிரச்சனையைச் சரி செய்ய பேஷ் பேக்காவும் உபயோகிக்கலாம்.

  இதேபோன்று ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ள சந்தனக் கட்டையும் தோல் நிறமி சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம். இது உங்களது சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது.

  Published by:Janvi
  First published:

  Tags: Natural remedies, Skin Care