HOME»NEWS»LIFESTYLE»beauty skin care tips for winter season scs

ஹெல்தியான சருமம் வேணுமா? குளிர்காலத்தில் இதையெல்லாம் மனசுல வச்சுக்கோங்க..

குளிர்காலத்தில் கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவதும் அவசியமானது.

ஹெல்தியான சருமம் வேணுமா? குளிர்காலத்தில் இதையெல்லாம் மனசுல வச்சுக்கோங்க..
சரும பராமரிப்பு
  • Share this:

சருமத்தைப் பொறுத்தவரை பராமரிப்பு என்பது மிக முக்கியம். அதுவும் குளிர்காலத்தில் இன்னும் அதிகமான கவனம் தேவை. இந்த நேரத்தில் சருமத்தில் வறட்சி, வெடிப்பு போன்ற பிரச்னைகள் உருவாகும்.

குளிர் காலத்தில் நமக்கு தாகம் குறைவாக எடுக்கும். அதனால் தண்ணீர் குறைவாக பருகும் போது, சருமத்தின் உள்புறமும், வெளிப்புறமும் வறண்டு போக வழிவகுக்கும். இந்த நேரத்தில் ஆல்கஹால் சேர்க்கப்படாத கிரீம்களை பயன்படுத்துவதன் மூலம் சருமத்தின் பி.எச் அளவை சமநிலையில் பராமரிக்க முடியும்.

சிலர் முகத்திற்கு சோப்புகளை பயன்படுத்துவார்கள். கடுமையான சோப்புகளைப் பயன்படுத்துவது உங்கள் சருமத்தின் பி.எச் சமநிலையை சீர்குலைத்து, சருமத்தின் ஈரப்பதத்தை குறைக்கும். அதற்கு பதிலாக மென்மையான ஃபேஸ் வாஷை பயன்படுத்தலாம்.



குளிர்காலத்தில் கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவதும் அவசியமானது. அதில் இருக்கும் வைட்டமின் சி, இ மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை சருமத்திற்கு பொலிவு சேர்ப்பதுடன் முதுமையையும் தள்ளிப்போடும். அதிலும் எண்ணெய் சருமம் கொண்டவர்கள் கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. தொடர்ந்து யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி ரத்த ஓட்டத்தை அதிகரித்து, அதிக அளவு ஆக்சிஜன் உடலுக்குள் செல்வதற்கு வழிவகை செய்யும்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: