HOME»NEWS»LIFESTYLE»beauty skin care tips for rainy season beauty tips scs

மழைக்கால சரும பராமரிப்பு - வீட்டிலேயே இருக்கும் எளிய தீர்வு!

தேங்காய் எண்ணெய்யில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் சருமத்தில் உண்டாகும் பாக்டீரியல் இன்பெக்ஷன்களை தடுத்து சருமத்தை மிருதுவாக்கும்.

மழைக்கால சரும பராமரிப்பு - வீட்டிலேயே இருக்கும் எளிய தீர்வு!
சரும பராமரிப்பு
  • Share this:

உண்மையில் இப்போது மழைக்காலம் இல்லை. ஆனால் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. இப்படி தொடர் மழை பொழிவு சமயத்தில் சருமத்தின் மீது கவனம் செலுத்துவது அவசியம். இதற்கு வீட்டில் இருக்கும் தீர்வுகள் என்னவென்பதை பார்ப்போம்.

நீங்கள் தொடர்ந்து ஃபேஷியல் செய்பவராக இருந்தால், மழைக்காலத்தில் முகத்துக்கு பப்பாளி பழ ஃபேஷியல் மட்டும் செய்யுங்கள். மற்ற பழங்களின் ஃபேஷியல்கள் உடலை குளிரச் செய்துவிடும். கனிந்த பப்பாளி பழத்தை மிக்ஸியில் அரைத்து, முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவிட்டு, கழுவினால் போதும்.

மழைக்காலத்தில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய்யில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் சருமத்தில் உண்டாகும் பாக்டீரியல் இன்பெக்ஷன்களை தடுத்து சருமத்தை மிருதுவாக்கும்.



ஆலிவ் ஆயிலில் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து நன்றாக அடித்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர் கடலைமாவுக் கலவை உபயோகித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும்.

கற்றாழை ஜெல் சரும வறட்சியைத் தடுப்பதோடு, சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி உலர வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினமும் இதனை பின்பற்றி வர முகம் பொலிவாகும்.

சருமத்தின் அழகை பாதுகாக்க தவறாமல் குளிர்காலங்களில் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று கிளின்சிங். ஒரு நாளைக்கு 2-3 முறை காட்டனை பாலில் நனைத்து முகத்தை நன்றாக சுத்தம் செய்யுங்கள். இதனால் அழுக்குகள் வெளியேறி, ஈரப்பதம் தக்க வைக்கப்படும்.

உதடுகளில் தோல் உரிந்தால், பாலாடை, வெண்ணெய், தேங்காய் எண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றை, இரவு படுப்பதற்கு முன்பு உதட்டில் தடவுங்கள்.

பாதங்களில் வெடிப்பு வருவதும் இந்த சீசனில் சகஜம். எனவே, வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குள் வந்ததும், பாதங்களை வெந்நீரில் சுத்தமாக கழுவி, துடைத்து, தரமான மாய்ச்சுரைஸர் அப்ளை செய்யுங்கள்.

இதையெல்லாம் பின்பற்றினால் மழைக்காலத்தில் உங்கள் சருமத்தை பொக்கிஷம் போல் பாதுகாக்கலாம்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: