Home /News /lifestyle /

எந்த கிளைமேட்டாக இருந்தாலும் தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாமா..?

எந்த கிளைமேட்டாக இருந்தாலும் தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாமா..?

சன்ஸ்கிரீன்

சன்ஸ்கிரீன்

கோடை காலத்தில் இருந்து பருவமழை சீசனை நாம் எதிர்கொண்டு வரும் நிலையில், ஒவ்வொரு சீசனிலும் ஏற்படும் காலநிலை மாற்றங்களோடு நம் சரும பராமரிப்பும் மேம்படுத்தப்பட வேண்டும். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
கோடை காலத்தில் இருந்து பருவமழை சீசனை நாம் எதிர்கொண்டு வரும் நிலையில், ஒவ்வொரு சீசனிலும் ஏற்படும் காலநிலை மாற்றங்களோடு நம் சரும பராமரிப்பும் மேம்படுத்தப்பட வேண்டும்.

ஒவ்வொரு முறை புதிய சீசனை எதிர்கொள்ளும் போது காற்றில் ஏற்படும் மாற்றங்களுக்கு நம் சருமமும் வினைபுரியும். சில நேரங்களில் சருமத்தில் வறட்சி, வெடிப்புகள், மற்றும் சிவத்தல் உள்ளிட்டவற்றை நாம் கவனிக்கலாம். மாறிவரும் வானிலை மாற்றங்களுக்கு ஏற்ப நம் சருமத்தைப் பராமரிப்பதில் சன்ஸ்கிரீன் முக்கிய பங்கு வகிக்கிறது. கடும் கோடையில் தான் சன்ஸ்கிரீன் தேவை, குளிர் மற்றும் மழை காலத்தில் தேவையில்லை என்று பலர் நினைக்கிறார்கள்.

ஆனால் கிளைமேட் (வெயில், மழை, மேகமூட்டம்) எதுவாக இருந்தாலும் தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும் என்பதை சிலர் மட்டுமே அறிந்திருக்கிறார்கள். அதே போல எல்லா கிளைமேட்டிலும் காலை மட்டுமின்றி நாள் முழுவதும் சன்ஸ்கிரீனை பயன்படுத்துவது நம் சருமத்தைப் பாதுகாக்க அன்றாட வழக்கத்தில் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று.



ஏனென்றால் புற ஊதா கதிர்கள் மூலம் ஏற்படும் சரும சேதத்தில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும். தவிர புற ஊதா கதிர்கள் எல்லா கிளைமேட்டிலும் நம்மை சுற்றி இருக்கும். நாம் பயன்படுத்தும் சன்ஸ்கிரீன்கள் அவற்றை உறிஞ்சி சருமத்தில் ஊடுருவாமல் பாதுகாக்கின்றன. சூரிய ஒளியில் இருந்து சருமத்தை சிறப்பான முறையில் பாதுகாக்க 30 அல்லது அதற்கு மேற்பட்ட SPF கொண்ட சன்ஸ்கிரீன்களை பயன்படுத்த வேண்டும். எப்போதும் சிறந்த ஃபேஸ் சன்ஸ்கிரீன் மற்றும் பாடி சன்ஸ்கிரீனை பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பது நிபுணர்களின் பரிந்துரை.

சன்ஸ்கிரீன் வழங்கும் நன்மைகளை அதிகம் பெற வெயிலில் அல்லது வெளியில் செல்வதற்கு குறைந்தபட்சம்10 நிமிடங்களுக்கு முன் சருமத்தில் பயன்படுத்த வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை மீண்டும் பயன்படுத்த வேண்டும்.

டிரெண்டாகும் கிளாசி மேக்அப்... நீங்களும் டிரை பண்ண உங்களுக்கான டிப்ஸ்...

எல்லா கிளைமேட்டிலும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:

UVA மற்றும் UVB கதிர்களைத் தடுக்கும்..

சிறந்த சன்ஸ்கிரீன் என்பது புற ஊதா (UV) கதிர்களில் சருமத்தை மிகவும் சேதப்படுத்தும் 2 வகையான (UVA மற்றும் UVB) கதிர்களில் இருந்து நம்மை பாதுகாக்கும். இதில் UVA கதிர்கள் வயதான செயல்முறையை துரிதப்படுத்த கூடியது மற்றும் சருமத்தில் ஆழமாக ஊடுருவி சுருக்கங்கள் மற்றும் நிறமாற்றத்தை ஏற்படுத்தும்.



ஃபோட்டோஏஜிங்கை தடுக்கிறது:

ஃபோட்டோஏஜிங் என்பது புற ஊதா கதிர்வீச்சின் வெளிப்பாட்டால் ஏற்படும் வயதான தோற்றம் போன்ற சரும பாதிப்புகளை குறிக்கிறது. சன்ஸ்கிரீனை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் ஃபோட்டோஏஜிங்கை தடுக்கலாம். அதே போல சுருக்கங்கள், வறண்ட மற்றும் கரடுமுரடான சீரற்ற சருமம் உள்ளிட்ட ஃபோட்டோஏஜிங் அறிகுறிகளை படிப்படியாக குறைக்கலாம்.

அழகழகான சேலைகளுக்கு புதிய டிசைன்களில் அசத்தலான பிளவுஸ் வகைகள் - பிரபலங்களின் டிப்ஸ்!

கேன்சர் ஆபத்தை குறைக்கும்:

சூரிய ஒளி மற்றும் வெப்பம் பார்க்க மற்றும் உணர முடியும் அதே நேரம் UV கதிர்வீச்சை தனியாக உணர முடியாது. சன் பர்னின் நீண்ட கால விளைவுகளில் தோல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் அடங்கும். புற ஊதா (UV) கதிர்வீச்சு சருமத்தால் உறிஞ்சப்படுவதை தடுப்பதில் சன் ஸ்கிரீன்கள் முக்கிய பங்கு வகிப்பதால் தோல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது. எனவே உங்கள் சருமத்தின் இயற்கை தோற்றத்தைப் பாதுகாக்க வெளியில் செல்லும் போது சிறந்த ஃபேஸ் மாய்ஸ்சரைசர்கள், கெமிக்கல் சன்ஸ்கிரீன்ஸ், மினரல் சன்ஸ்கிரீன்ஸ் போன்ற சரியான வகையான சன்ஸ்கிரீனை பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Beauty Tips, Climate change, Sunscreen

அடுத்த செய்தி