ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குளிர்காலத்தில் சருமம் வறண்டு போவதைத் தவிர்க்க வேண்டுமா..? நிபுணர்களின் பதில் உங்களுக்காக!

குளிர்காலத்தில் சருமம் வறண்டு போவதைத் தவிர்க்க வேண்டுமா..? நிபுணர்களின் பதில் உங்களுக்காக!

ஸ்கின்கேர்

ஸ்கின்கேர்

குளிர்காலம் என்றாலே சூடான நீரில் தான் குளிக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் இந்த செயல் உங்களது சரும பிரச்சனைக்கு வழிவகுக்கும். சூடான நீர் உங்களது சருமத்தை வறண்டு போகச் செய்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

குளிர்காலத்தையும் சரும பிரச்சனையும் பிரிக்க முடியாத ஒன்று. குளிர்காலம் ஆரம்பித்து விட்டாலே உடனே பல சரும பிரச்சனைகளும் நம் உடனே சேர்ந்து பயணிக்க ஆரம்பித்து விடும். ஆம் குளிர்காலத்தில் நிலவும் குளிர்ந்த காற்று முகத்தில் படும் போது, உங்களது சருமத்தில் உள்ள ஈரப்பதம் ஆவியாகி, சருமத்தை இறுக்கமாகவும், வறண்டு விடவும் செய்கிறது. இதனால் எத்தனை மேக் அப் போட்டாலும் சருமம் பொலிவின்றி காணப்படுகிறது. இதோடு முகம் வறண்டு எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவையும் ஏற்படுகிறது.

எனவே இந்நேரத்தில் குளிர்காலத்தில் சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாப்பது எப்படி? என்னவெல்லாம் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து? அழகுக்கலை நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம். பொதுவாக குளிர்காலத்தில் சருமம் வறண்டு காணப்படுவது இயல்பான ஒன்று தான் . இதை முறையாக பராமரிப்பின் மூலம் குணப்படுத்தி விடலாம். ஆனால் ஏன் இது ஏற்படுகிறது? இதைத் தவிர்ப்பதற்கு பின்பற்ற வழிமுறைகள் என்ன என்பதைத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

குளிர்காலத்தில் வறண்ட சருமத்தைத் தவிர்க்கும் முறை:

குளிர்காலத்தில் நீங்கள் மேற்கொள்ளும் தவறான தோல் பராமரிப்பே தோல் அரிப்பிற்கு முக்கிய காரணமாக அமைகிறது. எனவே இந்நாள்களில் நீங்கள் அதிக நுரை வரும் சோப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதோடு, நீண்ட நேரம் குளிக்கவும் நேரம் எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் தோலின் மேல் அடுக்கை சேதப்படுத்துவதோடு இயற்கையான ஈரப்பதத்தை இழக்கச் செய்கிறது. மேலும் சரும பிரச்சனைகளும் ஏற்படுகிறது.
குளிர்காலத்தில் நுரை வராத சோப்புகள் அல்லது பேஸ் வாஸ்களை நீங்கள் உபயோகிக்க வேண்டும். இதோடு குளித்த பிறகு அல்லது முகம் கழுவிய பிறகு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தவும். இது உங்களது சருமத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவியாக இருக்கும்.
ஒருவேளை நீங்கள் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தவில்லை என்றால், கிளிசரின் அல்லது பெட்ரோலியம் ஜெல்லி கொண்ட தயாரிப்புகளையும் நீங்கள் தேர்வு செய்யலாம். இதுவும் உங்களது சருமத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது.
டோனர்கள் அல்லது அதிகப்படியாக மேக் அப்பை தவிர்க்க வேண்டும். வெளியில் செல்லும் போது சன்ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும்.
குளிர்காலம் என்றாலே சூடான நீரில் தான் குளிக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் இந்த செயல் உங்களது சரும பிரச்சனைக்கு வழிவகுக்கும். சூடான நீர் உங்களது சருமத்தை வறண்டு போகச் செய்கிறது.
குளிர்காலத்தில் சரும பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு உடல் நலப்பிரச்சனைகளை நீங்கள் தவிர்க்க வேண்டும் என்றால், உங்களது அன்றாட உணவில் ஆரோக்கியமான உணவுகளை நீங்கள் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக உடலில் உள்ள நீரேற்றம் குறைந்தாலும் சருமம் வறண்டு போகும். எனவே அதிக நீரேற்றம் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை நீங்கள் தினமும் சாப்பிட வேண்டும். இதோடு அதிகளவு தண்ணீர் அருந்துவதையும் மறந்துவிடக்கூடாது.
இதுப்போன்ற வழிமுறைகளை நீங்கள் முறையாக பின்பற்றினாலே குளிர்காலத்தில் ஏற்படும் எவ்வித சரும பிரச்சனையையும் நீங்கள் தவிர்க்க முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
First published:

Tags: Beauty Tips, Skincare