முடி கருகருவென அடர்த்தியாக வளர வேண்டுமா..? இந்த 5 உணவுகளை தினமும் சாப்பிடுங்க

தலைமுடி பராமரிப்பு

சந்தையில் கிடைக்கும் பல தலைமுடி பராமரிப்பு தயாரிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வை நிச்சயமாகக் காண முடியும். ஆனால் அவை அனைத்தும் தற்காலிக தீர்வாகவே இருக்கும்.

  • Share this:
ஒவ்வொரு பெண்ணுக்கும் நல்ல நீளமான, அடர்த்தியான கூந்தலை பெற வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். அதிலும் நீளமான அல்லது அடர்த்தியான கூந்தலுடைய பெண்களை காணும் போது, நாமும் இது போன்ற கூந்தலை பெற வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், பெரும்பாலான பெண்கள் பொடுகு, முடி உதிர்தல் மற்றும் ஸ்பில்ட் எண்ட்ஸ் போன்ற முடி தொடர்பான பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.

இப்போது, ​​சந்தையில் கிடைக்கும் பல தலைமுடி பராமரிப்பு தயாரிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வை நிச்சயமாகக் காண முடியும். ஆனால் அவை அனைத்தும் தற்காலிக தீர்வாகவே இருக்கும். இந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர முடிவு கட்ட வேண்டும் என்றால் அதற்கு ஒருவர் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். கூந்தலின் வெளிப்புற தோற்றத்தை பராமரிப்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல கூந்தலின் உட்புற ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டியது அவசியம்.

முடி உதிர்தல் மற்றும் கூந்தல் தொடர்புடைய பிரச்சினைகளைத் தடுக்க ஒருவர் ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. நாம் சரியான உணவில் கவனம் செலுத்தாத வரை, கூந்தலின் வேர்களை வலுவாக்கவும் முடியாது. அதேபோல ஆரோக்கியமான கூந்தலையும் பெற முடியாது. அதிலும் முடி உதிர்தல் என்பது சாதாரணமாக எல்லோருக்கும் வரும் ஒரு பிரச்சனை. ஆனால் உச்சந்தலை எவ்வளவு முடியை இழக்கிறதோ அவ்வளவு வளர்கிறதா என்று பார்க்க வேண்டும். உச்சந்தலையை வலுப்படுத்தவும் முடியை வளர்க்கவும் உதவும் சில முக்கிய டயட் உணவுகளை பற்றி பின்வருமாறு காணலாம்.



1) புரதச் சத்துள்ள உணவு: வலுவான மற்றும் ஆரோக்கியமான கூந்தலுக்கு புரதம் நிறைந்த உணவு தேவைப்படுகிறது. பொதுவாக உடலில் புரதத்தின் பற்றாக்குறை அதிக முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். எனவே, உங்கள் டயட்டில் அதிக அளவு கோழி, மீன், முட்டை மற்றும் பால் போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

2) வைட்டமின் பி 7 சத்து நிறைந்த உணவு : உங்கள் உணவில் கூடுதல் பயோட்டின் (வைட்டமின் பி 7) சத்து கொண்ட உணவு பொருட்களை சேர்த்து கொள்ள வேண்டும். கேரட், பாதாம், கீரை மற்றும் முட்டைக்கோஸ் போன்ற வைட்டமின் பி-யின் சிறந்த ஆதாரமாக விளங்கும் காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேர்த்துக் கொள்ளவும்.

3) இரும்புச்சத்து நிறைந்த உணவு: உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், ஆக்ஸிஜன் சுழற்சி செயல்முறை பாதிக்கப்படுகிறது. இது உச்சந்தலையில் குறைந்த இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது. எனவே இருப்பு சத்தை அதிகரிக்க கீரை, இறைச்சி மற்றும் பால் ஆகியவற்றை உங்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.



4) வைட்டமின் பி 6 மற்றும் பி 12 அடங்கிய உணவு: வைட்டமின் பி 6 மற்றும் பி 12 நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். இதற்கு உங்கள் டயட்டில் போதுமான அளவு சிறுநீரக பீன்ஸ், முட்டை மற்றும் தானியங்கள், பருப்பு வகைகள் போன்றவற்றை சேர்க்க வேண்டும்.

உங்கள் முடி உதிர்வு அதிகரிக்க கொரோனா பரவல் மன அழுத்தம்தான் காரணம் - ஆய்வில் புதிய தகவல்!

5) ஒமேகா 3: கூந்தல் வளர்ச்சிக்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் சிறந்த ஆதாரமாக இருக்கிறது. எண்ணெய் மீன் மற்றும் வால்நட் பருப்புகள் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டிருப்பதால் அவற்றை சாப்பிடுவது முடிக்கு நல்லது. மீன் எண்ணெயில் காணப்படும் ஒமேகா 3 முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது மற்றும் முடி உதிர்தலைக் குறைக்கிறது.

6) வைட்டமின் சி சத்துக்கள்: தர்பூசணி, சிட்ரஸ் பழங்கள் மற்றும் மிளகுத்தூள் ஆகியவை வைட்டமின் சி யின் சிறந்த ஆதாரமாகும். இது முடியை உள்ளிருந்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

 
Published by:Sivaranjani E
First published: