முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை வீட்டிலேயே இயற்கையாக அகற்ற எளிய டிப்ஸ்..

காட்சி படம்

உங்கள் முகத்தில் வளர்ந்துள்ள முடிகளை நீக்க நீங்கள் போராடினால், இந்த எளிதான வீட்டு வைத்தியம் முயற்சி செய்யலாம்.

 • Share this:
  முகத்தில் முடிகள் இருந்தால் அது பெண்களின் அழகைக் கெடுக்கும். பெரும்பாலான பெண்களுக்கு முகத்தில் முடிகள் இருக்கின்றன மற்றும் சிலருக்கு திடீரென தாடைகளில் முடிகள் முளைத்து சங்கடத்தை ஏற்படுத்தும். இந்த முடிகளை எப்படி நிரந்தரமாக அகற்றுவது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

  இதற்காக நீங்கள் அழகு நிலையத்திற்குச் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் முகத்தில் வளர்ந்துள்ள முடிகளை நீக்க நீங்கள் போராடினால், இந்த எளிதான வீட்டு வைத்தியம் முயற்சி செய்யலாம். இயற்கையாக முகத்தில் முடியின் வளர்ச்சியைத் தடுக்க உங்களுக்காகவே அட்டகாசமான குறிப்புகளை இங்கே அளித்துள்ளோம்.

  முட்டை :

  முட்டை தோல் மற்றும் கூந்தலுக்கு பல்வேறு நன்மைகள் உள்ளன. முட்டையின் வெள்ளை கருவில் புரதங்கள், ஜிங்க், ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கிறது. இது கூந்தலுக்கும், முகத்துக்கும் பல நன்மைகளை அளிக்கும். முக்கியமாக சருமத்தின் தளர்வை குறைத்து இறுக்கமாக வைத்திருக்கிறது. முட்டை வீட்டில் இருந்தால் தினம் ஒரு அழகு குறிப்பை செய்து முகத்தையும் கூந்தலையும் பளபளப்பாக்குங்கள்.

  மாஸ்க் :

  ஒரு பௌலில் 1 முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு அடித்துக் கொண்டு, பின் அதனை முகத்தில் தடவி 15-20 நிமிடம் நன்கு உலர வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, பருக்கள் வருவது குறைந்து, சருமத்தின் நிறமும் அதிகரிக்கும்.

  மஞ்சள் :

  கஸ்தூரி மஞ்சள் இன்று பெரும்பாலான கடைகளில் கிடைக்கும். இதனை வாங்கி அத்துடன் கொஞ்சம் பச்சைப் பயறு சேர்த்து வெயிலில் உலர்த்தி மெஷினில் கொடுத்து நைசாக அரைத்து வைத்துக்கொண்டு தினமும் குளிக்கும்போதும், முகம் கழுவும்போதும் முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து தேய்த்துக் குளிக்கவேண்டும். உடனடியாக முடி நீங்கி விடாது, தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மட்டுமே நாளடைவில் போகும்.   

  ஆனால், புதிதாக முடிகளை வளரவிடாது, சந்தையில் கிடைக்கும் ஹேர் ரிமூவர் லோஷன்களைப் போட்டு, இந்த தேவையற்ற முடிகளைப் போக்கிய பின்னர், தினந்தோறும் விடாமல் கஸ்தூரி மஞ்சள் தூளை முகத்தில் பூசிக் குளித்து வந்தால், நல்ல வழுவழுப்பான முக அழகைப் பெறலாம் அத்துடன் முகத்தில் உள்ள முடிகளும் நீங்கி முடி மீண்டும் வளராமல் மஞ்சள் தடுக்கும். நம் முன்னோர்கள் பெண் குழந்தைகள் என்றாலே மஞ்சள் பூசி குளிக்க வேண்டும் என்று சொல்வார்கள். மஞ்சள் சரும அழகையும் பாதுகாக்கும்.

  தேவையற்ற இடங்களில் முடி வளரும் பிரச்சனைகளையும் உண்டாக்காது. வரும் முன் காப்போம் என்பதற்கேற்ப எப்போதுமே முனெச்சரிக்கையுடன் மஞ்சள் முகத்தோடு வலம் வருவார்கள்.

  Also read : அடர்த்தியான புருவம் வேண்டுமா? வீட்டிலேயே இந்த மசாஜ் ஆயில் ரெடி பண்ணி அப்ளை பண்ணுங்க...

  மஞ்சள் மாஸ்க் : மஞ்சள் பொடியை தண்ணீரில் ஊறவைத்து, அதிலிருந்து பேஸ்ட்டை உருவாக்கி, அதிக முடி இருக்கும் முக பகுதியில் தடவி, சில நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். அது காய்ந்த பிறகு, வெதுவெதுப்பான நீரில் நனைத்த துணியைப் பயன்படுத்தி மெதுவாக முகத்தை துடையுங்கள்.

  கோதுமை மாவும் பப்பாளியும் :கோதுமை மாவினை கொண்டு முகத்தில் இருக்கும் முடியினை அகற்றுவது பழங்காலத்திலிருந்து பின்பற்றி வரும் முறையாகும். சிறிதளவு கோதுமை மாவினை எடுத்து முடி வளர்ச்சிக்கு எதிர்த்திசையில் ரப் செய்வதினால் மெது மெதுவாக முடி உதிர்தலை ஊக்குவித்து முடி வளர்ச்சியைத் தடுக்கலாம். பப்பாளியில் இயற்கையாக முடியை அகற்றும் என்சைம்கள் உள்ளன. எனவே பப்பாளியைத் தவறாமல் உங்கள் சருமத்தில் முடி உள்ள இடத்தில் உபயோகிப்பதால் முடிகள் அகன்று விடும். ஆனால் இதற்கு நாட்கள் ஆனாலும் வெகு நாட்களுக்கு முடி வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்.

  கடலை மாவு : கடலை மாவு முகப்பரு பிரச்சனைகளை களைய உதவுகிறது. இதற்கு நீங்கள் தேயிலை மர எண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டரை நீங்கள் பயன்படுத்தி வந்தால் பருக்கள் குறைய ஆரம்பித்து விடும். கடலை மாவைக் கொண்டு முகத்தை தேய்த்து கழுவினால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு சருமம் பளிச்சென்று மின்னும். கடலைமாவில் முகத்தை ப்ளீச்சிங் செய்யும் தன்மை உள்ளது, எனவே அதைக் கொண்டு முகத்தை கழுவி வர சருமத்தின் நிறம் அதிகரிக்கும். கடலை மாவைக் கொண்டு பேஸ்பேக் போட்டு வரும் போது கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் போய் விடும்.

  மாஸ்க்:  2 டீஸ்பூன் கடலை மாவுடன், கொஞ்சம் ரோஸ் வாட்டர், 2-3 சொட்டு தேயிலை மர எண்ணெய் என எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து பயன்படுத்தி வாருங்கள். இந்த மாஸ்க் உங்களுடைய முகழகை பராமரிக்க உதவும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: