கரும்புள்ளிகள் நீங்க... முகப்பருக்கள் மறைய... கொத்தமல்லி!

உணவுக்கு மட்டுமல்ல அழகுக்கும் அரோக்கியம் தரும்.

news18
Updated: March 21, 2019, 1:26 PM IST
கரும்புள்ளிகள் நீங்க... முகப்பருக்கள் மறைய... கொத்தமல்லி!
கொத்தமல்லியில் அழகுப் பராமரிப்பு
news18
Updated: March 21, 2019, 1:26 PM IST
கொத்தமல்லி தழை உணவின் கடைசி தூவல் என்றாலும் அதுதான் உணவிற்கு வாசனையையும், அதிக ஆரோக்கத்தையும் கொடுக்கிறது. உடலுக்கு மட்டுமல்ல, அழகைப் பாதுகாக்கவும் கொத்தமல்லி பயன்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

Beauty Tips | குளிர்கால அழகு குறிப்புகள்

சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்க :


தேவையான பொருட்கள் :
கொத்தமல்லி - சிறிதளவு
கற்றாழை - 2 tsp

Loading...

தேங்காய் பால் - 1 tsp
அரிசி மாவு - 1 tsp

செய்முறை : கொத்தமல்லியை கெட்டியான பதத்தில் அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் தேவைப்பட்டால் தேங்காய் பால் பயன்படுத்திக் கொள்ளவும். அதோடு கற்றாழை மற்றும் அரிசி மாவு கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். அதை முகத்தில் தடவி 15 - 20 நிமிடங்கள் காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவிவிடவும். அதன் பிறகு உங்கள் முகத்தை உங்களாலேயே நம்ப முடியாது.கரும்புள்ளிகள் மறைய :

தேவையான பொருட்கள்

கொத்தமல்லி ஜூஸ் - 1 tsp
எலுமிச்சை சாறு - 1 tsp

செய்முறை : இரண்டையும் நன்குக் கலந்து கொண்டு முகம் முழுவதும் காட்டன் பயன்படுத்துத் தடவினால் கரும்புள்ளிகள் நாளடைவில் மறைந்துவிடும். அந்த ஜூஸ் முகத்தில் காயும் வரை காத்திருந்து பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். வாரம் மூன்று முறை செய்யலாம்.முகப் பருக்கள் நீங்க:

கொத்தமல்லி - கையளவு
எலுமிச்சை சாறு - 1 tsp
கேமமைல் எண்ணெய் - 1 tsp

செய்முறை : கொத்தமல்லியை மைய அரைத்து அதில் எலுமிச்சை மற்றும் எண்ணெயை நன்குக் கலந்து கொள்ளவும். அந்தக் கலவையை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் காந்த்திருந்து, பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவுங்கள். இப்படி வாரம் ஒரு முறை செய்தால் பருக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும்.சுருக்கங்கள் நீங்கி இளமை தோற்றம் பெற :

தேவையான பொருட்கள் :
கொத்தமல்லி - சிறிதளவு
முட்டை வெள்ளை - 2
ஓட்ஸ் - அரை கப்

செய்முறை: மூன்றையும் மிக்ஸியில் நன்கு அரைத்துக்கொள்ளவும். பேஸ்ட் பதத்தில் இருக்க வேண்டும். அதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். பின் கொள்ளை அழகில் ஜொலிப்பீர்கள்.
First published: March 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...