முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மஞ்சள், கடலை மாவு , தயிர்… நடிகை ஸ்ரேயாவின் பியூட்டி சீக்ரெட் இதுதான்..!

மஞ்சள், கடலை மாவு , தயிர்… நடிகை ஸ்ரேயாவின் பியூட்டி சீக்ரெட் இதுதான்..!

ஸ்ரேயாவின் பியூட்டி சீக்ரெட்

ஸ்ரேயாவின் பியூட்டி சீக்ரெட்

நடிகை ஸ்ரேயா உடனடி புத்துணர்ச்சிக்காக முடிந்தவரை அடிக்கடி பயன்படுத்தும் ஒரு பொருள் இயற்கையான ரோஸ் வாட்டர். வெளியே எங்கு சென்றாலும் அவரது பையில் கட்டாயம் நேச்சுரல் ரோஸ் வாட்டர் இருக்கும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ளவர் நடிகை ஸ்ரேயா சரண். 2003-ம் ஆண்டு வெளியான திரைப்படமான "எனக்கு 20 உனக்கு 18" மூலம் தமிழ் வெள்ளி திரையில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா சரண்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமானார். மிகவும் திறமை வாய்ந்த மற்றும் அழகு நிரம்பியவராக திகழும் நடிகை ஸ்ரேயா 1982-ம் ஆண்டு, செப்டம்பர் 11-ம் தேதி வட இந்தியாவில் இருக்கும் ஹரித்துவாரில் பிறந்தவர். சமீபத்தில் தனது 39-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார் நடிகை ஸ்ரேயா.

கிட்டத்தட்ட 40 வயதை நெருங்கி விட்ட போதிலும் இன்னும் இளமையாகவும், ஃபிட்டாகவும் காட்சி அளிக்கிறார் நடிகை ஸ்ரேயா. 2001-ல் முதன் முதலில் "இஷ்டம்" என்றதெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா துறைக்குள் நுழைந்தார். தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்த வந்த ஸ்ரேயா, எனக்கு 20 உனக்கு 18 படத்திற்கு பிறகு தமிழில் 2005-ம் ஆண்டில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக மழை படத்தில் நடித்தார். பின்னர் 2006-ல் தனுஷ் நடிப்பில் வெளியான திருவிளையாடல் ஆரம்பம் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பு திறனை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார்.

தொடர்ந்து பிரமாண்ட டைரக்டர் ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்து இந்திய அளவில் புகழ் பெற்றார். பின்னர் முன்னணி நடிகர்களான விஜய், விக்ரம், விஷால், ஆர்யா உள்ளிட்டோருடனும் நடித்தார். பியூட்டி மற்றும் ஹெல்தி ப்ராடக்ட்கள் பலவற்றுக்கு பிராண்ட் அம்பாசிடராக இருந்து வரும் நடிகை ஸ்ரேயா, தனது சொந்த சரும பராமரிப்பு மற்றும் அழகு என்று வரும் போது பெரும்பாலும் தன் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உயர்தர அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதில்லை.

தனது சரும அழகை எளிமையாகவும் இயற்கையான முறையிலும் பராமரித்து வருகிறார். நடிகை ஸ்ரேயா உடனடி புத்துணர்ச்சிக்காக முடிந்தவரை அடிக்கடி பயன்படுத்தும் ஒரு பொருள் இயற்கையான ரோஸ் வாட்டர். வெளியே எங்கு சென்றாலும் அவரது பையில் கட்டாயம் நேச்சுரல் ரோஸ் வாட்டர் இருக்கும். முக பளபளப்பு என்ற விஷயத்தைபொறுத்தவரை, மஞ்சள், தயிர் கலந்த பழமையான இயற்கை முறையை தான் பெரிதும் பயன்படுத்துவதாக ஸ்ரேயா கூறுகிறார்.

முகப்பருவை போக்க வெங்காயத்தோல் போதும்.. தெரியுமா ?

பளபளப்பான சருமத்தை பெற அவர் வீட்டிலிருக்கும் இயற்கை பொருள்களை வைத்து ஃபேஸ் பேக் தயார் செய்து, அதையே பயன்படுத்தி வருகிறார். ஸ்ரேயா பயன்படுத்தும் ஃபேஸ் பேக்கிற்கு தேவியான பொருட்கள் மற்றும் எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

* 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு

* ஒரு சிட்டிகை மஞ்சள்

* 1 டேபிள் ஸ்பூன் தயிர்

அவ்வளவு தான். இந்த மூன்றே பொருட்கள் போதும் உங்களது சருமத்தை, ஸ்ரேயாவின் சருமத்தை போல பளபளப்பானதாக மாற்ற. மேற்காணும் அனைத்தையும் நனறாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை காய வைத்து பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள். வாரம் 2 அல்லது 3 முறை, இந்த ஃபேஸ் பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வருவது பளபளப்பான சருமத்தை உறுதி செய்யும்.

First published:

Tags: Actress Shriya, Beauty Tips