Home /News /lifestyle /

குட்டை தலைமுடிக்கு ஏற்ற அழகான 2 ஹேர் ஸ்டைல்கள்

குட்டை தலைமுடிக்கு ஏற்ற அழகான 2 ஹேர் ஸ்டைல்கள்

குட்டை தலைமுடி

குட்டை தலைமுடி

Short Hair : குட்டையான தலைமுடியை வைத்துக் கொண்டு திருமணம், பார்ட்டி போன்ற நிகழ்ச்சிகளுக்கு என்ன மாதிரி ஹேர் ஸ்டைல் செய்வது என குழப்பமா?

நீண்ட கூந்தல் கொண்டவர்கள் மட்டுமே விதவிதமான, புதுமையான ஹேர் ஸ்டைலை செய்து கொள்ள முடியும் என்பது கிடையாது. கழுத்து வரை அல்லது தோள் பட்டை வரை குட்டையான முடியை கொண்ட பெண்களும் அசத்தலான ஹேர் ஸ்டைல்களை செய்து கலக்கலாம். உங்களது குட்டை முடியை விதவிதமாக கொண்டை போட்டுக்கொள்வது நேர்த்தியான மற்றும் புதுமையான ஒரு லுக்கை உங்களுக்கு கொடுக்கும்.

குட்டையான தலைமுடியை வைத்துக் கொண்டு திருமணம், பார்ட்டி போன்ற நிகழ்ச்சிகளுக்கு என்ன மாதிரி ஹேர் ஸ்டைல் செய்வது என குழப்பமா? கவலையே படாதீர்கள். உங்களுக்கு ஏற்ற ஹேர் ஸ்டைலை அமைத்துக்கொள்ள நாங்கள் உதவுகிறோம்... குட்டையான தலைமுடி கொண்ட பெண்களுக்காக இரண்டு விதமான ஹேர் ஸ்டைலை செய்வது எப்படி என விளக்கியுள்ளோம். இதை மட்டும் முயற்சித்து பாருங்கள், உங்களுடைய லுக்கே சூப்பர் ஸ்டைலிஷ் ஆக மாறிவிடும்.

1. ஹைபன் ஹேர் ஸ்டைல்: (உயர்ந்த கொண்டை)



சீப்பை வைத்து உங்களுடைய ஒட்டுமொத்த முடியையும் தலைக்கு மேல் சீவிக்கொள்ளுங்கள்.

அனைத்து முடியும் ஒன்று திரட்டிய பிறகு அதனை நன்றாக ஏர் பேண்ட் கொண்டு கட்டிவையுங்கள். அவை நன்றாக டைட்டாக இருப்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் முடி உதிர்வை தடுக்க சில பாபி பின்களை பயன்படுத்தி, மேலும் டைட்டாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ளலாம்.

இப்போது உங்கள் போனிடெயிலை சீப்பினால் நன்றாக பின்பக்கமாக சீவி விடுங்கள். இது உங்களுடைய ஹை பன் ஹேர்ஸ்டைலுக்கு கூடுதல் லுக்கை கொடுக்கும். இதை செய்யும் போது நல்ல சீப்பினால் கூந்தலை வாரி விடுங்கள், இல்லையே முடி உதிர்வையோ, சேதத்தையோ அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க...  கருகரு கூந்தலை பெற வீட்டிலேயே தயார் செய்ய ஹேர் ஆயில் : உங்களுக்கான டிப்ஸ்...

அதன் பின்னர் போனிடெயிலை இரண்டு சமமான பகுதிகளாக பிரித்துக்கொள்ள வேண்டும்.

இரண்டாக பிரிக்கப்பட்ட போனிடெயிலின் கீழ் பகுதியை முதலில் எடுத்து கீழ் நோக்கி கொண்டை வடிவத்தில் சுற்றி, அதன் மீது சில ஹேர்பின்களை சொருகுங்கள். இப்படி செய்யும் போது முடியை மிகவும் மிருதுவாக கையாளுங்கள், இறுக்கமாக முறுக்குவது கூந்தலை சேதப்படுத்தும்.

இப்போது மேல்புறம் இருக்கும் போனிடெயிலின் மற்றொரு பிரிவையும் இதேபோல் சுற்று கீழே இருக்கும் கொண்டைக்கு மேலாக சுற்றி, சில பின்களை குத்தி இறுக்கமாக்கி கொள்ளுங்கள்.

அவ்வளவு தான் ஹேர் ஸ்டைல் தயார். அங்காங்கே கலைந்திருக்கும் தலைமுடியை சரி செய்ய ஹேர் ஸ்பிரேவை அடித்துக்கொண்டால், அம்சமான ஹேர் ஸ்டைல் ரெடி.

2. லோ பன் ஹேர் ஸ்டைல்: ( தாழ்வான கொண்டை)



ஒட்டுமொத்த முடியையும் சீவி தலைக்கு சற்றே கீழ்புறமாக ஒரு போனிடெயிலை போட்டுக்கொள்ள வேண்டும். அதனை நன்றாக டைட்டாக ஹேர் பேண்ட் கொண்டு கட்டிக்கொள்ளவும்.

கூந்தலை அடர்த்தியானதாக காட்ட போனிடெயிலை முன்னால் இழுத்து பிடித்துக்கொண்டு, அதனை சீப்பை வைத்து நன்றாக பின்னோக்கி சீவி விடுங்கள். இதேபோல் சிறிது சிறிதாக முடியை எடுத்து நன்றாக பின்னோக்கி சீவி விட வேண்டும். இதனால் உங்களுடைய ஹேர் ஸ்டைல் பார்க்க அதிக அடர்த்தியாக காட்சியளிக்கும்.

இதையும் படிங்க...  கூந்தலை பாதிக்காத நோ-ஹீட், நோ-டேமேஜ் முறைகளின் கீழ் ஹேர் ஸ்ட்ரைட்னிங் செய்வது எப்படி?

கழுத்துக்கு கீழே உள்ள சில முடி கற்றைகளை எடுத்து கர்லிங் அயர்னை பயன்படுத்து கர்ல்களை உருவாக்கிக் கொள்ளலாம். இப்போது உங்களுடைய போனிடெயிலை இரண்டாக பிரித்து, அதன் பின் பாதியை பின்னோக்கி கொண்டை வடிவில் சுற்றி, சில பின்களை சொருகி கட்டிக்கொள்ள வேண்டும்.

மற்றொரு பாகத்தையும் இதேபோல் பின்நோக்கி சுற்றி, ஏற்கனவே உள்ள கொண்டை மீது சுற்றி, ஹேர் பின்களை சொருகினால் சூப்பரான லோ பன் ஹேர் ஸ்டைல் தயார்.

இந்த முறையில் நீங்கள் விரும்பினால் போனிடெயிலின் இரண்டாக பிரிக்கப்பட்ட பகுதிகளை இடது மற்றும் வலது பக்கத்தில் கொண்டையாக சுற்றி, சைடு பன் ஹேர் ஸ்டைலாக கூட மாற்றிக்கொள்ளலாம்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Hair care, Hairstyle

அடுத்த செய்தி