Home /News /lifestyle /

ஷேவிங் செய்வது உங்கள் சருமத்தை கருமையாக்கும், மீண்டும் முடி வேகமாக வளரும் - கட்டுக்கதையா? உண்மையா?

ஷேவிங் செய்வது உங்கள் சருமத்தை கருமையாக்கும், மீண்டும் முடி வேகமாக வளரும் - கட்டுக்கதையா? உண்மையா?

Girl shaving Razors

Girl shaving Razors

Skin Care | முடி நீக்கும் முறையாக ஷேவிங் செய்வது ஹைப்பர் பிக்மென்டேஷனை ஏற்படுத்தாது. ஒரு பகுதியில் மீண்டும் மீண்டும் முடி அகற்றும் ஆக்கிரமிப்பு தன்மை காரணமாக இது நிகழ்கிறது.

தற்போது பெண்கள் தங்கள் சருமத்தில் உள்ள தேவையற்ற முடியை அகற்ற வாக்சிங் செய்வார்கள். அல்லது கிரீம்களை தடவி அகற்றுவார்கள். இன்னும் சிலர் ஷேவிங் கருவி உதவியுடன் தேவையற்ற முடியை அகற்றுவார்கள். முகம் மற்றும் உடலின் பிற பகுதிகளில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்றுவதற்கு நிறைய விருப்பங்கள் இருந்தாலும், ஷேவிங் தேவையற்ற முடிகளை அகற்ற மிகவும் வசதியான, மலிவான, எளிதான மற்றும் வலியற்ற முறையாக கருதப்படுகிறது. இதனால் தான் பல பெண்கள் அதைத் தேர்வு செய்கிறார்கள்.

ஆனால் ஷேவிங் என்று வரும்போது பல கேள்விகள் மனதில் தோன்றும். ஷேவ் செய்வது பாதுகாப்பானதா? அது என் சருமத்தை கருமையாக்குமா? இதனால் முடி மீண்டும் அடர்த்தியாக வளருமா? என்ற பல கேள்விகள் உங்களில் எழலாம். சரி, தோலில் எதையும் முயற்சிக்கும் முன் அல்லது தடவுவதற்கு முன் கவலைப்படுவது இயல்பானது. ஆனால் உண்மையை பற்றி தெரிந்து கொள்வது மிக அவசியம். அதை பற்றி நாம் இந்த பதிவில் காண்போம்.

ஷேவிங் அதிக நிறமியை ஏற்படுத்துமா?

முடி நீக்கும் முறையாக ஷேவிங் செய்வது ஹைப்பர் பிக்மென்டேஷனை ஏற்படுத்தாது. ஒரு பகுதியில் மீண்டும் மீண்டும் முடி அகற்றும் ஆக்கிரமிப்பு தன்மை காரணமாக இது நிகழ்கிறது. பின்னர் தோல் ஒரு இருண்ட நிறத்திற்கு மாறலாம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உங்கள் தோலுக்கு எதிராக ரேஸர் பிளேடுகளை தொடர்ந்து தேய்ப்பதால் அது எரிச்சலை ஏற்படுத்தும். அந்த எரிச்சல் அடிக்கடி ஏற்படும் போது, ​​அது உங்கள் சருமத்தை கருமையாக்கும்.

Also Read : உஷார்..! இந்த 5 பொருட்களையும் தெரியாமல் கூட உங்கள் முகத்தில் பூசி விடாதீர்கள்!

உங்கள் சருமம் கருமையாகாமல் இருக்க என்ன செய்யலாம்?

* ஷேவிங் செய்வதற்கு முன் சூடான நீரில் குளியல் எடுக்க வேண்டும். இது உங்கள் சருமத்தை தளர்த்தும். இது ஷேவிங் செய்யும் போது எரிச்சல் உண்டாகும் வாய்ப்புகளை குறைக்கும்.

* ஷேவிங் செய்வதற்கு முன் உங்கள் தோலை எக்ஸ்போலியேட் செய்வதன் மூலம் இறந்த செல்களை நீக்கும்.

* வெட்டுக்கள் மற்றும் தீக்காயங்களைத் தடுக்க ஷேவிங் செய்வதற்கு முன் எப்போதும் தடிமனான ஷேவிங் கிரீம் அல்லது மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்.

* எரிச்சலை குறைக்க முடி வளரும் திசையில் ஷேவ் செய்யுங்கள்.

* ஷேவ் செய்த பிறகு உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்க அதாவது மாய்ஸ்சரைஸ் செய்ய மறக்காதீர்கள்.

* லோஷன், வாசனை திரவியம் போன்ற ஆல்கஹால் உள்ளடக்கம் அதிகம் உள்ள எதையும் ஷேவ் செய்த இடத்தில் பயன்படுத்த வேண்டாம்.

* ஒரே நாளில் மீண்டும் மீண்டும் ஷேவ் செய்யக்கூடாது.

* ரேசரை சுத்தமான மற்றும் உலர்ந்த இடத்தில் வைக்க வேண்டும்.

Also Read : முகத்தில் உள்ள முடியை எளிதாக வீட்டிலேயே நீக்க உதவும் 4 ஃபேஸ் மாஸ்க் டிப்ஸ்

ஷேவிங் செய்வதால் அந்த இடத்தில் மீண்டும் முடி அடர்த்தியாக வளருமா?

மேற்கத்திய நாடுகளில், ஷேவிங் என்பது தேவையற்ற முடிகளை அகற்றுவதற்கான மிகவும் விருப்பமான வழிமுறையாகும். துரதிருஷ்டவசமாக, ஷேவிங் என்பது பல பொதுவான கட்டுக்கதைகள் மற்றும் தவறான கருத்துக்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால் ஒருமுறை ஷேவ் செய்தால் அந்த இடத்தில் முடி மீண்டும் அடர்த்தியாக வளரும் அல்லது ஷேவிங் செய்த இடத்தில் தோல் கருமையாகிறது என்பதுதான். ஆனால் அவை அனைத்தும் கட்டுக்கதைகள் தான்.

இதுகுறித்து தோல் மருத்துவர் மற்றும் வெனிரியாலஜிஸ்ட் டாக்டர் செஜல் சாஹேதா கூறியதாவது, "உங்கள் முடியின் அமைப்பு உங்கள் உடலியல் மற்றும் உங்கள் மரபியல் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. ஷேவிங் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் வெளிப்புற பொறிமுறையின் மூலமாகவோ வளர்வது இல்லை. ஷேவிங் செய்வது முடி வேகமாக வளர ஊக்குவிக்காது. இது அநேகமாக எல்லாவற்றிலும் நன்கு அறியப்பட்ட கட்டுக்கதை மற்றும் மிகவும் தவறான ஆலோசனையாகும்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய டாக்டர் சாஹேதா, “ஷேவிங் செய்வது உங்கள் சருமத்தையோ அல்லது முடியையோ எந்த விதத்திலும் மாற்றாது. உண்மையில், வேக்சிங் அல்லது கெமிக்கல் டிபிலேட்டரிகளைப் பயன்படுத்துவதை விட, உங்கள் உடலில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றுவதற்கான பாதுகாப்பான வழிகளில் இதுவும் ஒன்றாகும்" என்று கூறினார்.

Also Read : உங்கள் முகத்தை பொலிவாக்க உதவும் இரவு நேர சருமப்பராமரிப்பு குறிப்புகள்..!

ஷேவிங் செய்வது வெட்டுக்கள் மற்றும் தொற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. அதுவே சிவத்தல் மற்றும் நிறமியை ஏற்படுத்துவதாகவும் கருதப்படுகிறது. அதேபோல, மெழுகு, த்ரெடிங் மற்றும் பிற முடி அகற்றுதல்களுடன் ஒப்பிடும்போது முடியை கருமையாகவும் அடர்த்தியாகவும் வளரச் செய்யும் எனவும் சில கருத்துக்கள் உள்ளன. ஆனால், சரியான முறையில் ஷேவிங் செய்வது முடியை அகற்றுவதற்கு சிறந்த வழி என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மற்றபடி, அனைத்தும் கட்டுக்கதைதான் என தெரிவித்துள்ளனர்.
Published by:Selvi M
First published:

Tags: Lifestyle, Myths, Shaving Tips, Skin Care

அடுத்த செய்தி