ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உங்களுக்கு எண்ணெய் பசை சருமமா? நீங்கள் பயன்படுத்த வேண்டிய சீரம் இதுதான்!

உங்களுக்கு எண்ணெய் பசை சருமமா? நீங்கள் பயன்படுத்த வேண்டிய சீரம் இதுதான்!

சீரம்

சீரம்

முகத்தில் உள்ள கருமையையும், வறட்சியையும் போக்க ஹைலூரோனிக் அமிலம் உதவுகிறது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

முக அழகை பற்றிய கவலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இன்றைய தேதியில் முக அழகை பராமரிக்கும் வழிமுறைகளையே அதிக பேர் இணையத்தில் தேடி வருகின்றனர். குறிப்பாக எண்ணெய் வடியும் முகம் கொண்டர்களுக்கு முகத்தில் பாதிப்புகள் அதிகம் உண்டாகுகிறது. நமது அன்றாட செயல்பாடுகள், உணவு முறை, வாழ்க்கை முறை, காலநிலை மாற்றம், எடுத்துக்கொள்ளும் மருந்துகள், பியூட்டி புராடக்ட்ஸ் போன்ற பலவற்றினாலும் சருமம் பாதிக்கப்படுகிறது.

நமது தோலில் சுரக்கும் செபம் என்கிற மூலப்பொருள் தான் சருமத்திற்கு எந்த பாதிப்பும் வராமல் பாதுகாக்கிறது. ஆனால் இது அதிக அளவில் சுரக்க தொடங்கினால் முகத்தில் பருக்கள் உருவாகும். மேலும் முகம் எப்போதும் எண்ணெய் பிசுக்குடன் காணப்படும். இப்படி பல சிக்கல்கள் இருக்க, முக அழகை பராமரிப்பதை எளிதாக்கவே சீரம் என்கிற பியூட்டி புராடக்ட்டை அழகியல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

முகத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி உங்கள் சருமத்தை எப்போதும் ஊட்டமாக வைக்க இந்த சீரம் உதவும். நம் உணவு முறையில் மாற்றங்கள், வாழ்வியல் மாற்றங்கள் போன்ற பாதிப்புகள் இருந்தாலும் எளிதான முறையில் உங்கள் முக அழகை பராமரிக்க வேண்டுமென்றால் சீரமை சரியாக பயன்படுத்த வேண்டும். சீரமானது தண்ணீர் அல்லது ஜெல் போன்ற தன்மையுடையதாக இருக்கும். இது முகத்தில் ஒட்டாது. இதை தினமும் முகத்தில் தடவுவதால் சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடனும், மென்மையாகவும் இருக்கும்.

கடைகளில் விற்கப்படும் பல வகையான சீரத்தில் சரியானதை தேர்வு செய்யவும் வழி உள்ளது. சிறந்த பலனை உங்கள் முகத்தில் ஏற்படுத்த, ஹைலூரோனிக் அமிலம், சாலிசிலிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகிய மூலப்பொருட்கள் கொண்ட சீரம் வாங்கி பயன்படுத்த வேண்டும். இதை தான் அழகியல் நிபுணர்களும் பரிந்துரை செய்கின்றனர்.

மழைக்காலத்தில் முக அழகைப் பராமரிக்க என்ன செய்ய வேண்டும்..? சில டிப்ஸ் உங்களுக்காக...

முகத்தில் உள்ள கருமையையும், வறட்சியையும் போக்க ஹைலூரோனிக் அமிலம் உதவுகிறது. மேலும் முகத்தில் ஏற்படும் சிறு துளைகளை மூட செய்து, அதிக அளவில் முகத்தில் எண்ணெய் வெளியேறுவதை குறைக்க சாலிசிலிக் அமிலம் பயன்படுகிறது. இத்துடன் வைட்டமின் சி-யில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ், இழந்த முகப்பொலிவை மீண்டும் பெற செய்து உங்கள் சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.

நீங்கள் பயன்படுத்தும் ஃபேஸ் கிரீம் மற்றும் மாய்சரைஸரை விடவும் இந்த சீரம் உங்களுக்கு நல்ல பலனை தரும். இதை பயன்படுத்தினால் உங்கள் சருமத்தின் ஆழம் வரை சென்று ஈரப்பதமூட்டி, ஊட்டமளிக்கும். சீரத்தை முகத்திற்கு பயன்படுத்துவதும் மிக எளிது. சிறிது சீரம் கையில் எடுத்து கொண்டு முகம் மற்றும் கழுத்து பகுதியில் லேசாக தடவ வேண்டும் (டேப் செய்க). இப்படி செய்து வந்தால் முகத்தில் எண்ணெய் வடிவது முழுவதுமாக குறையும். மேலும் உங்கள் முகமும் நீங்கள் எதிர்பார்ப்பது போன்று சிறப்பான அழகை பெறும். சிறந்த பலனை பெற தினமும் இரவு முகத்தை நன்கு கழுவிய பின்னர் சீரம் பயன்படுத்தலாம்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Beauty Tips, Face serum, Oily Skin