நம் முகத்தில் பார்ப்பவர்களை வசிகரீக்கும் தன்மை கண்ணிற்கு இருக்கிறது. அதனால் கண்களை சுற்றி காஜல், ஐ லைனர், மஸ்காரா இப்படி பல அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி அழகுப் படுத்துவோம். சிலர் கண்ணின் கருவிழியின் நிறத்தையும் தங்களுக்கு பிடித்த நிறத்தில் காண்டாக்ட் லென்ஸ் மூலம் மாற்றிக்கொள்கின்றனர்.
காண்டாக்ட் லென்ஸில் இரண்டு வகை உள்ளது. பார்வை குறைபாடு இருப்பவர்கள் மருத்துவரை அணுகி காண்டாக்ட் லென்ஸ் அணிவார்கள். சிலர் அழகுக்கென்று இருக்கும் காண்டாக்ட் லென்ஸை போட்டோ ஷூட் போன்றவற்றிக்கு பயன்படுத்துவார்கள்.
காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்த ஆசையாக இருந்தாலும் அதை எப்படி போடுவது என்று பெரும்பாலான பேருக்கு தெரிவதில்லை. அந்த சந்தேகத்திற்கு எல்லாம் விடை கொடுக்கும் வகையில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை ஜனனி தனது இன்ஸ்டாகிராமில் ஐ.ஜி டிவி வீடியோவில் விளக்கமளித்துள்ளார்.
அந்த வீடியோவில் சீரியல் நடிகை ஜனனி, முதலில் காண்டாக்ட் லென்ஸை ஆள்காட்டி விரலின் நுணியில் எடுத்து,அதை வெள்ளை விழியின் ஓரத்தில் வைத்துக்கொள்கிறார்.
பின்பு கண்ணை உருட்டி அந்த காண்டாக்ட் லென்ஸை கருவிழியில் சரியாக பொருத்தி விடுகிறார்.இந்த வீடியோவை பார்க்கும் போது காண்டாக்ட் லென்ஸ் போடுவது இவ்வளவு தானா என்று நினைக்க வைக்கிறார் ஜனனி.
அதே போல் காண்டாக்ட் லென்ஸ் போடுவதற்கு முன்பு, கைகளை ஹேண்ட் வாஷ் பயன்படுத்தி கழுவிய பின்பு, சுத்தமான டவலில் துடைத்த விட்டு தான் காண்டாக்ட் லென்ஸை தொட வேண்டும் என்று சில டிப்ஸ்களையும் வழங்கியுள்ளார் ஜனனி.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.