உங்க சருமம் ரொம்ப சென்சிடிவ்வா இருக்கா? ஃபேஷியல் பண்ணும்போது இதெல்லாம் கவனிங்க..

உங்க சருமம் ரொம்ப சென்சிடிவ்வா இருக்கா? ஃபேஷியல் பண்ணும்போது இதெல்லாம் கவனிங்க..

மாதிரி படம்

நீங்கள் பேஷியல் செய்துக் கொள்வதற்கு முன்பு, உங்கள் தோல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள். எந்தெந்த தயாரிப்புகள் உங்கள் சருமத்திற்கு செட் ஆகும் என்பதை உங்கள் மருத்துவரால் கூற முடியும்.

  • Share this:
ஃபேஷியல் என்பது மனதை அமைதியான நிலைக்குக் கொண்டு செல்வதற்காக ஒரு வகை மசாஜ் தெரபி ஆகும். மேலும், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கிவிட்டு புதிய செல்களை கொண்டு வரவும் பேஷியல் உதவுகிறது. பேஷியல் செய்யும் போது முகத்தில் உள்ள பிரஷர் பாயிண்ட் இடங்களில் அழுத்தம் கொடுப்பதால் முகத்திற்கு ரத்த ஓட்டம் முழுமையாகக் கிடைக்கிறது. முகத்திற்கு ரத்த ஓட்டம் சீராக இருந்தாலே நமது முகம் பொலிவாகக் காணப்படும்.

அதேபோல பேஷியலில் பல வகைகள் உள்ளன. காய்கறி கிரீம், பழக் கிரீம், சீரம் என பல வகைகள் உள்ளன. பொதுவாகவே எல்லா சருமத்திற்கும் எல்லா பேஷியல் கிரீம்களும் பொருந்தாது. அதனால் நம் சருமத்திற்கு ஏற்றாற்போல கிரீம்களை தேர்வு செய்வது நல்லது. இருப்பினும் சிலரது சருமம் அதிக சென்சிடிவ் கொண்டதாக இருந்தால் பேஷியல் சில சரும பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இனி கவலை வேண்டாம், நீங்கள் பேஷியல் செய்வதற்கு முன்பு நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்களைப் மட்டும் தெரிந்துகொண்டால் போதும் சென்சிட்டிவ் ஸ்கின் கொண்டவர்கள் எந்த வித தயக்கமும் இன்றி பேஷியல் செய்து கொள்ளலாம்.இது குறித்து தோல் மருத்துவரான டாக்டர் ஜுஸ்யா பாட்டியா சாரின் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, " பெரும்பாலான மக்களுக்கு, பேஷியல் ட்ரீட்மெண்ட் என்பது முகப்பரு அல்லது வயதான அறிகுறிகள் போன்ற மிகவும் பொதுவான தோல் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு இனிமையான, நிதானமான வழியாகும்.

ஆனால் சென்சிட்டிவ் ஸ்கின் டைப் உள்ளவர்களுக்கு பேஷியல் என்பது எரிச்சல், ஒவ்வாமை மற்றும் அசௌகரியம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். நீங்கள் சென்சிட்டிவ் வாய்ந்த சருமத்தைக் கொண்டிருந்தாலும் கவலையின்றி பேஷியல் செய்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு முன் நீங்கள் சில விஷயங்களை மட்டும் கட்டாயம் செய்ய வேண்டும்." என்று கூறியுள்ளார். எனவே சென்சிட்டிவ் சருமம் பிரச்சனை கொண்டவர்கள் பேஷியல் செய்துகொள்வதற்கு முன்பு என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து பாப்போம்.

தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுதல் : நீங்கள் பேஷியல் செய்துக் கொள்வதற்கு முன்பு, உங்கள் தோல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள். ஏனென்றால் எந்தெந்த தயாரிப்புகள் உங்கள் சருமத்திற்கு செட் ஆகும் என்பதை உங்கள் மருத்துவரால் கூற முடியும். அதுமட்டுமல்லாமல், பேஷியலை எங்கு செய்யலாம் என்பதையும் அவர்கள் உங்களுக்கு பரிந்துரைப்பார்கள்.எந்த தயாரிப்புகள் பயன்படுத்துகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்: சென்சிட்டிவ் ஸ்கின் டைப் கொண்டவர்கள் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது, பேஷியல் செய்துகொள்ளும் போது நீங்கள் பயன்படுத்தும் தயாரிப்புகளை பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும் என்பது தான். ஏனெனில் சில கிரீம்களில் உள்ள ரசாயனம் உங்கள் சருமத்திற்கு கடுமையானதாக இருக்கக்கூடும்.

மேலும் தோல் உரிதல் போன்ற பிரச்சனை இருக்கும் என்பதால் நீங்கள் பயன்படுத்தும் தயாரிப்புகளை முழுமையாக புரிந்துகொள்வது அவசியம். மேலும், வலுவான வாசனை திரவியங்கள் உங்கள் சருமத்தை பெரிதும் எரிச்சலடையச் செய்யலாம். மாண்டெலிக் அமிலம், ஹைலூரோனிக் அமிலம் அல்லது சிவப்பு மற்றும் நீல எல்.ஈ.டி ஒளி சிகிச்சைகள் போன்ற ஹைபோஅலர்கெனி தயாரிப்புகளை பயன்படுத்துவது நல்லது. இவை முக்கியமான சருமத்தை அமைதிப்படுத்த உதவுகின்றன.

முழங்கை, முட்டியில் உள்ள கருமையை நீக்க கருவேப்பிலை போதுமா..? எப்படி என தெரிந்துகொள்ள கிளிக் பண்ணுங்க

உங்கள் தோல் வகை மற்றும் தோல் பராமரிப்பு பற்றி தெரிவிக்க வேண்டும்: உங்களுக்கும் அழகு நிபுணருக்கும் தெளிவான தொடர்பு இருப்பது முக்கியம். இது உங்கள் அனுபவத்தை அதிகளவில் மேம்படுத்தலாம். உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தை நீங்கள் உங்கள் அழகு கலை நிபுணருடன் பகிர்ந்து கொள்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக உங்கள் தோல் மருத்துவரால் ரெட்டினாய்டுகள் அல்லது பிற செயல்களை உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தால் அதனை தெரிவிப்பது அவசியம்.

Published by:Sivaranjani E
First published: