ஐஸ்வர்யா ராய் தன் அழகை பராமரிக்க இந்த வீட்டுக் குறிப்பைதான் செய்கிறார்...

ஐஸ்வர்யாவைப் பார்க்கும் பலருக்கும் அவர் எப்படி இத்தனை அழகாக இருக்கிறார்..என்ன காரணம் என பலருக்கும் இந்தக் கேள்வி எழுந்திருக்கக் கூடும்.

Web Desk | news18
Updated: September 20, 2019, 11:38 PM IST
ஐஸ்வர்யா ராய் தன் அழகை பராமரிக்க இந்த வீட்டுக் குறிப்பைதான் செய்கிறார்...
ஐஷ்வர்யா ராய்
Web Desk | news18
Updated: September 20, 2019, 11:38 PM IST
இன்று வரை அழகி என்றாலே நமக்கெல்லாம் ஐஸ்வர்யா ராய்தான். அதற்கு பொருத்தமானவரும் ஐஸ்வர்யாதான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஐஸ்வர்யாவைப் பார்க்கும் பலருக்கும் அவர் எப்படி இத்தனை அழகாக இருக்கிறார்..என்ன காரணம் என பலருக்கும் இந்தக் கேள்வி எழுந்திருக்கக் கூடும்.

உண்மையிலேயே அதற்காக அவர் என்ன செய்கிறார் என்று கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.

ஐஸ்வர்யாவின் ஒரு நேர்காணலில் அழகு பராமரிப்பிற்காக என்ன செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு பாட்டி வைத்தியம் தான் செய்கிறேன் என்றுக் கூறியுள்ளார். ஆம்..நம் வீட்டுக் கிச்சனில் உள்ள கடலை மாவும் மஞ்சள் பொடியும்தான் பயன்படுத்துகிறாராம்.
அதாவது கடலை மாவு மற்றும் மஞ்சள் இரண்டையும் கலந்து முகத்தில் பேக்காக அப்ளை செய்கிறாராம். இதை தனக்கு மட்டுமல்லாது மக்களுக்காகவும் பரிந்துரைக்கிறார்.Loading...

இந்த கடலை மாவு என்பது அனைத்துவிதமான சரும வகைக் கொண்டோருக்கும் பொருந்தும். இதில் பயன்படுத்தப்படும் மஞ்சள் ஆண்டி ஆக்ஸிடண்டாக செயல்படும். இதனால் சருமத்தில் தேங்கியிருக்கும் அழுக்கு, இறந்த செல்களும் நீங்கும். கடலை மாவு கரும்புள்ளிகள் , கருவலையம், பருக்களின் தடையங்களை அகற்றி தெளிவான சருமத்தை அளிக்கும். எனவே உங்களுக்கும் இது பயன்படுமாயின் நீங்களும் பயன்படுத்தலாம்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: September 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...