காஃபி குடித்தால் புத்துணர்ச்சியாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. பெரும்பாலானோர் தினமும் காஃபி குடிப்பதை பழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் இது சரும ஆரோக்கியத்திற்கும் முக்கியமான ஒன்று என்பது உங்களுக்கு தெரியும? காஃபி தூளில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன மற்றும் ஆரோக்கியமான சரும செல்களை சேதப்படுத்துவதில் ஈடுபடும் ஃப்ரீரேடிகல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதனால் கருவளையங்கள், முதல் முகப்பரு வரை உங்கள் சரும பிரச்சனைகள் அனைத்திற்கும் காஃபி தூளை பயன்படுத்தி தீர்வு பெறலாம். அதுகுறித்து இங்கு தெரிந்துகொள்வோம்.
கருவளையங்கள்:
காஃபியில் உள்ள காஃபின் உங்கள் இரத்த நாளங்களை விரிவாக்க உதவுகிறது. மேலும் காபியில் இயற்கையான ப்ளீச்சிங் தன்மை உள்ளன, இது கண்களின் கீழ் அசிங்கமாக காணப்படும் கருவளையத்தை சரி செய்ய உதவுகிறது. ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி காஃபி பவுடர், ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் வைட்டமின் ஈ எண்ணெய் எடுத்து நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை உங்கள் கண்களின் கீழ் கவனமாக தடவி 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவ வேண்டும். தொடர்ந்து இப்படி செய்து விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
முகப்பரு சிகிச்சை:
காஃபி முகப்பருக்களை உருவாக்கும் பாக்டீரியாவை எதிர்த்துப் போராட உதவும், ஏனெனில் காஃபியில் சிஜிஏக்களில் நிறைந்துள்ளது, அவை அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. முகப்பருவால் அவதிப்படுபவர்கள் 3 ஸ்பூன் காஃபி தூள், 2 ஸ்பூன் சர்க்கரையுடன் 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயைச் சேர்த்து நன்கு கலந்து ஒரு தடிமனான ஸ்க்ரப் தயாரிக்கவும். இந்த ஸ்க்ரப்பை உங்கள் முகத்தில் தடவி மென்மையாக அப்ளை செய்யவும். முகமெங்கும் தேய்த்து, கண்கள் போன்ற முக்கியமான பகுதிகளைத் தவிர்க்கவும். இதை 10 நிமிடங்கள் விட்டுவிட்டு சுத்தமான தண்ணீரில் கழுவவும். நன்கு தேய்த்து ஸ்க்ரப் செய்வதை தவிர்த்து விடவும், இது மேலும் பருக்கள் வருவதை தூண்டக்கூடும். இதனை வாரம் இரண்டு நாட்கள் செய்து வந்தால் பருக்கள் படிப்படியாக குறைந்துவிடும்.
Must Read | வெங்காயத்தின் இந்த 5 நன்மைகளை தெரிந்துகொண்டால் இனி உணவில் இருந்து ஒதுக்க மாட்டீர்கள்..!
வயதான தோற்றத்தை தடுக்கிறது:
சூரிய ஒளியின் புறஊதா கதிர்கள் சருமத்தில் நேரடியாக படுவதாலும், தூசி, அதிக கெமிக்கல் பொருட்கள் பயன்படுத்துவது போன்ற காரணங்களினால் நமது சருமத்தில் கரும்புள்ளிகள், சிவத்தல் மற்றும் சரும சுருக்கம் வந்து வயதான தோற்றத்தை தருகிறது. இதற்கு காஃபி தூள் பயன்படுத்துவது நல்ல தீர்வாகும். ஒரு பவுலில் காஃபி பவுடர், கோகோ பவுடர், தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து உங்கள் முகத்தில் தடவவும். சுமார் 20 நிமிடங்கள் விட்டுவிட்டு சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். இந்த கலவையை குளிர்சாதன பெட்டியில் சேமித்தும் பயன்படுத்தலாம். வறண்ட சருமம் இருப்பவர்கள் பால் சேர்த்து கொள்ளலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பொலிவான சருமத்திற்கு:
பொலிவான சருமம் பெற வேண்டும் என்ற விருப்பம் அனைவருக்கும் உள்ளது. இதற்கு ஒரு பவுலில் 1/4 ஸ்பூன் காஃபி தூள், 3 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து நன்கு கலக்கவும். இந்த கலவையை உங்கள் முகம், கழுத்து பகுதியில் தடவி 10 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும். பின்னர் சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். கற்றாழை ஜெல் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இதனை தொடர்ந்து செய்து வந்தால் சருமத்திற்கு ஆரோக்கியமான மற்றும் இயற்கையான பிரகாசத்தை அளிக்கிறது. இதனால் உங்கள் சருமம் பொலிவாக காணப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coffee, Healthy Lifestyle, Skin Care, Skincare