சரவணம் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமடைந்த ரச்சிதாவின் அழகில் பல பெண்களுக்கு சந்தேகம் இருக்கிறது..? அதாவது அவர் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறார் என்பதே...
கருப்பாக இருந்தாலும் அதையெல்லாம் ஒரு விஷயமே இல்லை என தன் நடிப்பாலும் , அழகாலும் மக்களின் உள்ளத்தைக் கவர்ந்த நாயகி. ஆரம்பத்தில் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் என தோன்றிய ரச்சிதா நாட்கள் செல்ல செல்ல எப்படி இவ்வளவு அழகாக மாறினார்..? அவரின் பருக்கள் மறைய என்ன செய்தார் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். குறிப்பாக பருக்கள், சரும பாதிப்புகளை சந்திக்கும் பெண்களுக்கு அவரின் டிப்ஸ் உதவியாகவே இருக்கும். எனவேதான் ஒரு நேர்காணலில் அவரே பகிர்ந்துகொண்ட சில டிப்ஸ் உங்களுக்காக தொகுத்துள்ளோம்...
ரச்சிதாவிற்கு சருமத்தில் பருக்கள் உண்டாவதற்கான காரணம் அவருக்கு ஹார்மோனல் சமநிலையின்மைதான் என்று கூறுகிறார்.அதற்காக பல ஹோம் ரெமடீஸ், லேசர் சிகிச்சைகளையும் கூட செய்திருக்கிறார். பிறகுதான் அவருக்கு நம்முடைய வாழ்க்கை முறைதான் முகப்பருக்களுக்கு காரணம் என்பதை புரிந்துகொண்டிருக்கிறார். எனவே உணவுப் பழக்கம், தூக்கம் இவற்றை ஒழுங்குமுறைக்கு கொண்டு வந்தால் பருக்களை அகற்ற முடியும் என்பதை தெரிந்துகொண்டிருக்கிறார். எனவே அவருடைய ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரைத்த பட்டியலை சரியான முறையில் பின்பற்றிய பிறகே முகப்பருக்கள் முற்றிலுமாக ஒழிந்துள்ளன.
அந்த வகையில் அவர் சர்க்கரை, அரிசி, மாவு வகைகள் என வெள்ளை உணவுகள் அனைத்தையும் முற்றிலுமாக தவிர்த்து வருகிறார். அதுமட்டுமன்றி எண்ணெய் உணவுகளை கனவில் கூட சுவைத்துப் பார்க்கக் கூடாது என்கிறார். பிரியாணி கூட சாப்பிட வேண்டும் என தோன்றினால் 2 ஸ்பூனுக்கு மேல் சாப்பிட மாட்டாராம். கலர்ஃபுல் பழங்கள், காய்கறிகளை நிறைய சாப்பிடுங்கள் என்கிறார். கீரை , தக்காளி, கேரட், ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை இப்படி கலர்ஃபுல் பழங்களை சாப்பிடுங்கள் என்கிறார்.
காலை எழுந்ததும் தினசரி வேலையாக தன் முகத்தை ஆசுவாசப்படுத்த ஒரு மிகப்பெரிய பவுலில் தண்ணீரை நிரப்பி அதில் சில ஐஸ் கட்டிகளை கொட்டிக்கொள்வாராம். பின் முகத்தை முழுவதுமாக அதில் முக்கி சில நிமிடங்கள் அப்படியே இருப்பாராம். இப்படி 2 , 3 முறை முக்கி முக்கி எடுத்த பின் முகத்தை துடைத்தால் மிகவும் ரெஃப்ரெஷாக இருக்கும் என்கிறார். முகத்தின் சருமத் துகள்கள் மலர்ந்து சுவாசிக்க ஆரம்பிக்கும். இதனால் உங்கள் முகம் பொலிவாக இருக்கும். அதன்பிறகு மாய்சரைசர் அல்லது சன் ஸ்கிரீன் அப்ளை செய்துகொள்ளுங்கள் என்கிறார்.
அதேபோல் ரச்சிதாவிற்கு காஜல் இல்லாமல் இருக்கவே முடியாதாம். வீட்டில் சும்மா இருந்தால் கூட காஜல் அப்ளை செய்துகொள்வாராம். ஷூட்டிங் இல்லாத நாட்களில் வீட்டில் நன்கு தூங்குவதுதான் அவருடைய மிகப்பெரிய ஸ்கின் கேர் டிப்ஸ் என்கிறார்.
அவர் பின்பற்றும் வீட்டுக் குறிப்பு : ஓட்ஸ், வாழைப்பழம், தேன் மூன்றையும் கைகளிலேயே பிசைந்து முகத்தில் அப்ளை செய்வதுதான் சருமத்தை பாதுகாக்க நான் செய்யும் ஹோம் ரெமடி. இதனால் பிளாக் ஸ்பாட்ஸ், பருக்கள் , கருவளையங்கள் மறையும் என்கிறார்.
கொய்யா இலை சருமத்தை ஜொலிக்க வைக்குமாம்.. இத்தனை நாள் இது தெரியாம போச்சே..
முகப்பரு உள்ளவர்களுக்கான டிப்ஸ் : பருக்கள் இருப்பவர்கள் முகத்தை தேய்த்து முகம் கழுவக் கூடாது. நகங்கள் படக் கூடாது. முகக் கருமையை போக்க தக்காளி, வெள்ளரிக்காய், தயிர் மட்டும்தான் அப்ளை செய்வாராம். தக்காளி அல்லது வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் அப்ளை செய்வாராம். இல்லையெப்னில் தயிரில் மஞ்சள் தூள் கலந்து கை , முகம், கழுத்து என அப்ளை செய்வாராம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.