முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / தலைமுடிக்கு எண்ணெய் தடவும் முன்பு இந்த விஷயங்களை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

தலைமுடிக்கு எண்ணெய் தடவும் முன்பு இந்த விஷயங்களை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

எண்ணெய்

எண்ணெய்

Hair Care | மசாஜ் செய்யும் போது, ​​அதிகப்படியான அழுத்தத்தைப் பயன்படுத்த கூடாது. ஏனென்றால் அது முடியின் வேர்களை சேதப்படுத்தும் மற்றும் முடி உதிர்வுக்கும் வழிவகுக்கும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சூரிய வெப்பம், பனிப்பொழிவு, தூசு, மாசு கலந்த புகை போன்ற காரணிகளால் வறண்டு போகும் கேசத்தை ஹைட்ரேட் செய்யும் டானிக்காக எண்ணெய் இருக்கிறது. அதனால் தான் நம் முன்னோர்கள் காலங் காலமாக தலைக்கு எண்ணெய் தடவுவதையும், வாரத்திற்கு ஒருமுறையாவது எண்ணெய் குளியல் எடுத்துக்கொள்வதையும் கட்டாயப்படுத்தினர்.

எண்ணெய் தடவுவதால் கூந்தல் வறட்சி நீங்கி புதுப்பொலிவுடன் இருப்பது மட்டுமின்றி, எண்ணெய்களில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், அவற்றை உங்கள் தலைமுடிக்கு பயன்படுத்துவது ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்கிறது. மேலும், எண்ணெய் தடவுவது, உச்சந்தலையில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, தலையை சுத்தமாகவும், முடி உதிர்வில் இருந்தும் பாதுகாக்கிறது.

இருப்பினும், தலைமுடியில் எண்ணெய் தடவுவது மட்டும் போதாது, அதை நீங்கள் செய்யும் விதமும் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. சரியான முறையில் செய்யாவிட்டாலோ அல்லது அதிகமாகச் செய்தாலோ, அது உங்களது முடிக்கும், உச்சந்தலைக்கும் ஆபத்தாக மாறலாம்.

எண்ணெய் முடியை மென்மையாகவும் இயற்கையாகவும் பளபளப்பாக வைத்திருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதேசமயம் அதிகப்படியான எண்ணெய் முடியின் வேர்களுக்குச் சென்றால், அது ஃபோலிகுலிடிஸை ஏற்படுத்தலாம் என்றும் எச்சரிக்கின்றனர். மேலும், தலைமுடியை நீண்ட நேரம் மசாஜ் செய்வதால் முடி உதிர்வு அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

எனவே, எண்ணெய் மசாஜ் மூலம் உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிப்பதற்கான சரியான வழியை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். முடிக்கு எண்ணெய் தடவும் முன்பு நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில குறிப்புகள் இங்கே உள்ளன.

Also Read : Hair Care : தலைக்கு குளிக்கும்போது முடி அதிகமாக கொட்டுதா..? நீங்கள் செய்யும் இந்த தவறுகள்தான் காரணம்..!

*தலையை கழுவுவதற்கு 2-3 மணி நேரத்திற்கு முன்பு எண்ணெய் தடவ வேண்டும். மேலும் கூந்தல் மிகவும் அழுக்காக இருந்தால், இரவில் எண்ணெய் தடவி காலையில் ஷாம்பு கொண்டு கழுவலாம்.

*உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தடவுவதன் பலன் முழுமையாக கிடைக்க, உச்சந்தலையில் தடவுவதற்கு முன்பு எண்ணெயை மந்தமான வெப்பநிலையில் சூடாக்கவும். மைக்ரோவேவ் பயன்படுத்தி எண்ணெயை சூடாக்கலாம் அல்லது எண்ணெய் பாத்திரத்தை வெந்நீரில் சில நிமிடங்கள் வைத்து சூடாக்கலாம்.

*மசாஜ் செய்யும் போது, ​​அதிகப்படியான அழுத்தத்தைப் பயன்படுத்த கூடாது. ஏனென்றால் அது முடியின் வேர்களை சேதப்படுத்தும் மற்றும் முடி உதிர்வுக்கும் வழிவகுக்கும்.

*இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணெய்களைக் கலந்து, அதனை தலைமுடியில் தடவுவது கூடுதல் பலனைத் தரும். உச்சந்தலையில் மசாஜ் செய்வதற்கு முன், தேங்காய் எண்ணெயை அர்கான் எண்ணெயுடன் கலக்கலாம் அல்லது கடுகு எண்ணெயில் சில துளிகள் ஆலிவ் எண்ணெயைச் சேர்க்கலாம்.

Also Read : Grey Hair : இளம் வயதிலேயே நரைமுடி பிரச்னையா..? இந்த பழக்கம் காரணமாக இருக்கலாம்..!

*முடியை சேதப்படுத்தாமல் இருக்க, அவற்றை இறுக்கமாக கட்டக்கூடாது. முடியின் வேர்கள் மீது அதிக அழுத்தம் கொடுப்பது அவற்றை வலுவிழக்கச் செய்து முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும்.

குறிப்பு: இந்தக் கட்டுரையில் பகிரப்பட்ட சுகாதார குறிப்புகள் பொதுவான நடைமுறைகள் மற்றும் பொது அறிவை அடிப்படையாகக் கொண்டவை. வாசகர்கள் வீட்டில் அவற்றைப் பின்பற்றுவதற்கு முன்பு மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

First published:

Tags: Hair care, Hair Damage, Hair oil