ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

அரிசி தண்ணீரில் தலைமுடியை அலசினால் முடி கொட்டும் பிரச்சனையே இருக்காதா..? ஆச்சரியம் தரும் நன்மைகள்

அரிசி தண்ணீரில் தலைமுடியை அலசினால் முடி கொட்டும் பிரச்சனையே இருக்காதா..? ஆச்சரியம் தரும் நன்மைகள்

அரிசி தண்ணீர்

அரிசி தண்ணீர்

அரிசி தண்ணீரில் உள்ள அமீனோ அமிலம் மற்றும் கார்போஹைட்ரேட் தலைமுடி வேர்களை உறுதியாக்குகிறது. உங்கள் கூந்தல் எப்பேர்ப்பட்ட வகையில் பொலிவிழந்து காணப்பட்டாலும் இந்த அரிசி தண்ணீரில் மூழ்க வைத்து, ஊற வைத்துக் குளித்தால் பளபளக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

வரலாற்றில் முன்னோர்களின் கூந்தல் நினைத்துப்பார்க்க முடியாத நீளத்தில் இருந்ததென்றால் அதில் முக்கியப் பங்கு இந்த அரிசி தண்ணீருக்கும் உண்டு. சமீப வருடங்களாகத்தான் இந்த பழமை மறைந்துவிட்டது. ஆனால் ஜப்பான், சீனாவில் இன்றும் இந்த குறிப்புகள் பின்பற்றப்படுகிறது. அரிசியில் உள்ள ஸ்டார்ச் எனும் மூலக்கூறு தண்ணீரில் ஊற வைக்கும்போது 80 % உறிஞ்சப்படுகிறது. அந்த நீரில் விட்டமின் B , E ஆண்டி ஆக்ஸிடண்ட், பல மினரல் சத்துகள் ஆகியவை அடங்கியுள்ளன. அதனால்தான் ஆராய்ச்சியாளர்களே அதன் உண்மைத் தன்மையைச் சோதித்து உறுதி செய்துள்ளனர்.

அதில் அரிசி தண்ணீர் பயன்படுத்துவதால் கூந்தல் கருகருவென, நீளமாகவும், உறுதியாகவும் வளருகின்றது என குறிப்பிட்டுள்ளனர். அதனால்தான் ஜப்பான் மற்றும் சீனர்களின் முடி மென்மையாகவும், உறுதியாகவும் பளபளக்கிறது.

அரிசி தண்ணீரில் உள்ள பலன்கள் 

அரிசி தண்ணீரில் இன்னும் பல முக்கிய பலன்களும் அடங்கியுள்ளன. அதாவது இந்த அரிசி தண்ணீரில் உள்ள அமீனோ அமிலம் மற்றும் கார்போஹைட்ரேட் தலைமுடி வேர்களை உறுதியாக்குகிறது.

உங்கள் கூந்தல் எப்பேர்ப்பட்ட வகையில் பொலிவிழந்து காணப்பட்டாலும் இந்த அரிசி தண்ணீரில் மூழ்க வைத்து, ஊற வைத்துக் குளித்தால் பளபளக்கும். குறிப்பாக உங்கள் கூந்தல் காற்று மாசுபாடு, தூசி, வெப்பத்தால் சேதமடைதல், பொடுகு, வறட்சி, அரிப்பு இப்படி எந்த வகையில் கூந்தல் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதைச் சரிசெய்துவிடும். கெமிக்கல்களில் இல்லாத மேஜிக் இந்த அரிசி தண்ணீரில் உண்டு.

முடி வளர்ச்சிக்கும் நல்ல குறிப்பு. தலைமுடி சேதத்தைச் சரிசெய்துவிட்டாலே கூந்தலின் வேர்ப் பகுதியும் வலுப்பெற்று, கூந்தல் வளர்ச்சியையும் தூண்டும். அதுவும் ஆரோக்கியமான கூந்தலுக்கு உறுதியளிக்கும்.

எவ்வாறு பயன்படுத்த வேண்டும் ?

அரிசி தண்ணீர் என்பது தமிழ்நாட்டைப் பொருத்தவரை அரிய வகைப் பொருள் அல்ல. அதேசமயம் அதிக பணச்செலவும் இல்லை. தினமும் வீட்டில் சமைக்க அரிசி குறைந்தது அரை மணி நேரம் அல்லது 15 நிமிடங்கள் ஊற வைப்போம். அந்த தண்ணீரை இனிக் கீழே ஊற்றாமல் பத்திரப்படுத்தி உங்கள் தலைமுடிக்கு மசாஜ் செய்து தலைக்குக் குளியுங்கள். இல்லையெனில் தலைக்குக் குளித்தபின் இறுதி நீராக இந்த அரிசி தண்ணீரை ஊற்றி அலசுங்கள்.

ஆரஞ்சு பழத்தோலில் இத்தனை சருமக் குறிப்புகளா..? மலைக்க வைக்கும் அழகை பெற டிப்ஸ்..!

அதேபோல் இந்த ஊற வைத்த அரிசி நீரைப் புளிக்கச் செய்து அதில் கொஞ்சம் நீர் கலந்து தலைக்குத் தேய்த்தாலும் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும். நீங்கள் தலைக்குக் குளித்தபின் இறுதியாக இந்த தண்ணீரை ஒரு ஜக் தலையில் ஊற்றி அலசினால் நல்ல பலன் கிடைக்கும். வேண்டுமென்றால் வாசனைக்கு அதில் வாசனை எண்ணெய் கலந்து கொள்ளலாம்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Cooked rice water, Hair care, Hair fall, Hair Problems