Home /News /lifestyle /

உங்கள் சருமத்தை பளபளப்பாக்க உதவும் இந்த இயற்கையான FacePack

உங்கள் சருமத்தை பளபளப்பாக்க உதவும் இந்த இயற்கையான FacePack

ayurvedic ubtan Powder

ayurvedic ubtan Powder

Ayurvedic Ubtan Powder | இயற்கையான சரும பொலிவை அளிப்பதில் "உப்டான்"(ubtan) என்றழைக்கப்படும் ஆயுர்வேத மூலிகைகள் மற்றும் இயற்கை பொருட்கள் அடங்கிய பவுடர் கலவை முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற எண்ணற்ற டிப்ஸ்கள் இருக்கின்றன. பலவிதமான பியூட்டி ட்ரெண்ட்ஸ், ஸ்கின்கேர் ஹேக்ஸ் மற்றும் ஃபேஷியல் டூல்ஸ் ஆகியவற்றுடன், உங்கள் சருமத்திற்கு மிகவும் பயனளிக்கும் தயாரிப்புகள் மற்றும் பராமரிப்பு நடைமுறைகளைத் தேர்ந்தெடுப்பது பெரும்பாலும் குழப்பமானதாக இருக்கும். மார்க்கெட்டில் கிடைக்கும் கெமிக்கல்ஸ் சேர்க்கப்பட்ட அழகுசாதன பொருட்கள் உங்கள் சருமத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே அவற்றுக்கு பதில் நீங்கள் எப்போதாவது ஆயுர்வேத தோல் பராமரிப்பு முறைகளை முயற்சித்து பார்த்துள்ளீர்களா.?

பிரபல ஆயுர்வேத மருத்துவர் நிகிதா கோஹ்லியின் கூற்றுப்படி, ஆயுர்வேத தோல் பராமரிப்பு சிகிச்சைகள் மற்றும் வைத்தியம், ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலரின் சரும ஆரோக்கியத்திற்கு தங்கச் சுரங்கம் போன்றது. மருத்துவர் நிகிதா கோஹ்லி தனது இன்ஸ்டா போஸ்ட் ஒன்றில் ஆயுர்வேத தோல் பராமரிப்பு வைத்தியம் தலைமுறை தலைமுறைகளாக பல வீடுகளில் பின்பற்றப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, அதன் பளபளப்பை மீட்டெடுக்க, உள்ளிருந்து அதை சுத்தப்படுத்த மற்றும் இயற்கை முறையில் பராமரிக்க உதவும் ஒரு ஃபேஸ் பேக் அல்லது உப்டானுக்கான (ubtan) எளிதான வீட்டு செய்முறையை ஷேர் செய்து உள்ளார்.

இயற்கையான சரும பொலிவை அளிப்பதில் "உப்டான்"(ubtan) என்றழைக்கப்படும் ஆயுர்வேத மூலிகைகள் மற்றும் இயற்கை பொருட்கள் அடங்கிய பவுடர் கலவை முக்கிய பங்கு வகிக்கிறது. இப்போது மேற்கண்ட நிபுணர் ஷேர் செய்திருக்கும் உப்டான் பற்றி பார்க்கலாம். இது தொடர்பாக அவர் ஷேர் செய்துள்ள தகவலானது பின்வருமாறு: காலங்காலமாக இந்தியா முழு உலகிற்கும் இயற்கையான தோல் பராமரிப்பின் கிரீடமாக இருந்து வருகிறது. இயற்கை முறையில் உங்கள் சருமத்தை பராமரிக்க உதவும் மிக எளிய மற்றும் மிகவும் பயனுள்ள தீர்வை நான் உங்களுக்கு சொல்கிறேன்.

வீட்டிலேயே Ubtan தயாரிக்க தேவையானவை..

* 3 டீஸ்பூன் மூங் டால் (Moong daal) அல்லது ஸ்பிளிட் எல்லோ லென்ட்டில்ஸ் (split yellow lentils)

* 2 டீஸ்பூன் ஓட்ஸ்

* சுமார் 3 ஸ்பூன் பச்சைப்பயறு பருப்பு (Green gram daal)

* 2 டீஸ்பூன் மசூர் பருப்பு (Masoor daal)

* பெருஞ்சீரக விதைகள் (saunf)



 




View this post on Instagram





 

A post shared by Dr Nitika Kohli (@drnitikakohli)






ஆயுர்வேத உப்டான் தயாரிக்கும் முறை:

* ஒரு கடாயை சூடாக்கி அதில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் கொட்டி நன்றாக கிளறவும். கடாயில் சேர்க்கப்பட்ட பொருட்கள் வாசனையாக மாறும் வரை காத்திருக்கவும். அந்த நேரத்தில் கடாயில் இருக்கும் சில மசாலா பொருள் வெடிப்பதை கேட்க முடியும்.பின் இந்த கலவையை அடுப்பிலிருந்து இறக்கி அரைப்பதற்காக தனியே எடுத்து வைக்கவும்.

Also Read : முகம் பளபளக்க... கடைபிடிக்க வேண்டிய டிப்ஸ்

* சூடாக இறக்கி வைக்கப்பட்ட கலவை நன்கு ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு அதை பொடியாக அரைக்கவும்.

* இந்த உப்டான் கலவையில் ஒரு ஸ்பூன் ஒரிஜினல் சந்தன பவுடரை சேர்க்கவும். காற்றுப்புகாத டப்பாவில் இதை சேமித்து வைக்கவும்.

Also Read : பழங்களைக் கொண்டு சருமத்தை பராமரிக்க அசத்தல் டிப்ஸ்

* நீங்கள் இதை பயன்படுத்த விரும்பும் போது ஒரு டீஸ்பூன் இயற்கையான உப்டான் கலவையுடன், 2 டீஸ்பூன் பால் மற்றும் 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். தடவுவதற்கு சீரான தன்மை வரும் வரை நன்றாக கலக்கி பின்னர் உங்கள் சருமத்தில் தடவலாம்.
Published by:Selvi M
First published:

Tags: Ayurvedic medicine, Beauty Tips, Lifestyle, Skin Care

அடுத்த செய்தி