• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • முகப்பரு பிரச்சனைக்கு துவைக்காத பெட் ஷீட்டும் காரணம்.. ரகசியம் சொல்லும் அபி டெய்லர் ரேஷ்மா!

முகப்பரு பிரச்சனைக்கு துவைக்காத பெட் ஷீட்டும் காரணம்.. ரகசியம் சொல்லும் அபி டெய்லர் ரேஷ்மா!

அபி டெய்லர் ரேஷ்மா

அபி டெய்லர் ரேஷ்மா

முகப்பருக்கு முக்கிய காரணம் படுக்கையில் இருக்கு பெட் ஷீட்கள், தலையணைகள், போர்வைகளாக கூட இருக்கலாம்.

  • Share this:
    சின்னத்திரை நடிகைகளுக்கு எப்போதுமே ரசிகர்களிடத்தில் கொஞ்சம் நெருக்கம் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் இன்று ரசிகர்கள் மத்தியில் ஃபேவரெட் சின்னத்திரை நடிகையாக வலம் வரும் நடிகை ரேஷ்மா முரளிதரனின் பியூட்டி டிப்ஸ் குறித்து பார்க்க போகிறோம்.

    நம் குடும்பத்தில் இருக்கும் பிரச்னைகள் தான் பொதுவாக சீரியல்களின் கதைகளமாக இருக்கும். அதனால் சாதாரண மக்கள் அதோடு விரைவில் நெருக்கமாகிறார்கள். அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பூவே பூச்சுடவா’ சீரியலில் நடித்ததன் மூலம் ரேஷ்மா முரளிதரன் அதிக ரசிகர்களை சொந்தமாக்கினார். அந்த தொடரில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார். இவருடைய துறுதுறுப்பான நடிப்பு இந்த சீரியலின் பெரிய பிளஸ். அது மட்டும் அல்லாமல் இந்த சீரியல் நகைச்சுவை கலந்த கதை என்பதால், மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் அபி டெய்லர் சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக மதன் பாண்டியன் நடித்து வருகிறார். ரீல் ஜோடி கூடிய விரைவில் ரியல் ஜோடியாகவும் மாற போகிறது.

    ரேஷ்மா பிறந்தது கேரளாவில், வளர்ந்தது பெங்களூருவில். மாடலிங் துறையில் கொண்டிருந்த ஈர்ப்பால், சென்னைக்கு மூட்டையைக் கட்டியிருக்கிறார். அதன்பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ராகவ் உடன் இணைந்து ’டான்ஸ் ஜோடி டான்ஸ்’ மூலம் தமிழ் ரியாலிட்டி ஷோவில் அறிமுகமானார். இந்த நிகழ்ச்சி தான் அவருக்கு ஒரு மைல் கல்லாக அமைந்தது. அவர் நடிப்பின் மீது உள்ள வெறியையும் நடனத்தின் மீது அவருக்கு இருக்கிற காதலையும் இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தான் இவருக்கு ’பூவே பூச்சூடவா’ சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

    ரேஷ்மாவுக்கு டஸ்கி ஸ்கின் என்பதால் எப்போதுமே சரும பராமரிப்பு , மேக்கப் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தக்கூடியவர். இவர் முகப்பரு வந்த உடனே முதலில் ஐஸ்கட்டியை எடுத்து பரு மீது வைத்து விடுவாராம். அதே போல், வெளியில் ஷூட்டிங் அல்லது வெயிலில் சென்று வந்த உடனே டேன் ஆன ஸ்கின்னை சரிசெய்ய தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்த பேக்கை கை, கால், முகத்தில் தடவி 15 நிமிட ஊற வைத்து பின்பு கழுவி விடுவாராம்.



    டீன் ஏஜ் பெண்கள் தொடங்கி திருமணம் ஆனவர்கள் வரை ஆண் - பெண் இருவருக்கும் இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை முகப்பருக்கள் தான். இதற்கு மிக முக்கிய காரணம் படுக்க்கையில் இருக்கு பெட் ஷீட்கள், தலையணைகள், போர்வைகளாக கூட இருக்கலாமாம். காரணம், இந்த பெட் ஷீட்களை துவைக்காமல் தொடர்ந்து பயன்படுத்தினால் அதன் மூலம் முகப்பருக்கள் வருமாம். அதில் ஒட்டி இருக்கும் எண்ணை பசை, பொடுகு, தூசி போன்றவையும் முகப்பருக்களை ஏற்படுத்துமாம். எனவே முகத்திற்கு வைத்தியம் எடுப்பதற்கு முன்பு படுக்கறையில் இருக்கும் போர்வைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் ரேஷ்மா.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: