Home /News /lifestyle /

ஆண்களை அதிகமாக பாதிக்கும் வழுக்கை பிரச்சனை : எவ்வாறு சரி செய்யலாம்..?

ஆண்களை அதிகமாக பாதிக்கும் வழுக்கை பிரச்சனை : எவ்வாறு சரி செய்யலாம்..?

வழுக்கை வர காரணம் மற்றும் சிகிச்சை முறைகள்

வழுக்கை வர காரணம் மற்றும் சிகிச்சை முறைகள்

தற்போதைய மாறிவரும் வாழ்க்கை முறையினாலும் உணவு பழக்கங்களினாலும் இந்த முடி உதிர்தல் பிரச்சனையானது வாலிபர்கள் முதல் மத்திய வயது ஆண்கள் வரையும் பொதுவாக பாதிக்கிறது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இன்றைய காலத்தில் ஆண்களுக்கு அதிகமாக ஏற்படும் வழுக்கை பிரச்சனைக்கு “ஆண்ட்ரோஜென்” எனப்படும் ஒரு ஹார்மோன் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

தற்போதைய மாறிவரும் வாழ்க்கை முறையினாலும் உணவு பழக்கங்களினாலும் இந்த முடி உதிர்தல் பிரச்சனையானது வாலிபர்கள் முதல் மத்திய வயது ஆண்கள் வரையும் பொதுவாக பாதிக்கிறது. இந்த பிரச்சனையினால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் ஒரு வித தாழ்வு மனப்பான்மையோடு இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இது உளவியல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எவ்வாறு வழுக்கை ஏற்படுகிறது:

ஒருவருக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 50 முதல் 100 முடிகள் வரை உதிர்வது சாதாரணமாக ஒரு நிகழ்வாக தான் கருதப்படுகிறது. அவ்வாறு உதிர்ந்த முடியானது விரைவிலேயே மீண்டும் வளர்ந்து விடும். ஆனால் சில நேரங்களில் இவ்வாறு வளர வேண்டிய முடியானது வளரும்போது அடர்த்தி குறைவாகவும், முடியின் தடிமன் குறைந்தும் வளர்கிறது. ஒரு கட்டத்தில் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளராமல் போகும்போது அந்த இடத்தில் வழுக்கை ஏற்படுகிறது. முதலில் சாதாரணமாக துவங்கும் இந்த முடி உதிர்வானது முன்பக்க நெற்றியில் லேசாக துவங்கி, பிறகு தலையின் பின் புறத்திலும் உச்சந்தலையிலும் முடி உதிர்வு ஏற்பட்டு இந்த வழுக்கையானது தெளிவாக தெரிய ஆரம்பிக்கும். ஒவ்வொரு ஆண்மகனும் தன்னுடைய வாழ்க்கையின் ஏதாவது ஒரு வயதில் இந்த முடி உதிர்வு பிரச்சனையால் கண்டிப்பாக பாதிக்கப்பட்டு இருப்பார்.



வழுக்கை ஏற்படுவதற்கு காரணங்கள்:

வழுக்கை ஏற்படுவதற்கு மரபணுவு சார்ந்த குறைபாடு ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. தன்னுடைய குடும்பத்தை சார்ந்த எவருக்கேனும் இந்த பிரச்சனை இருந்தால் அதுவும் ஒரு காரணம் முக்கியமாக காரணமாக கருதப்படுகிறது. ஆண்களுக்கு சுரக்கும் ஆண்ட்ரோஜென் என்னும் ஒரு ஹார்மோன் சமநிலையில் ஏற்படும் மாற்றம் முடி உதிர்தலுக்கு முக்கிய காரணமாக விளங்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஏழு நிலைகளில் இந்த வழுக்கை பிரச்சனை ஏற்படுகிறது:

முதல் நிலை: இந்தநிலையில் முடி உதிர்வானது அவ்வளவாக ஏற்படாது எனினும், அங்கங்கே முடியின் அடர்த்தி குறைவதை அந்த நபர் உணர முடியும். அவ்வாறு அடர்த்தி குறைய குறைய அவருக்கு முடி கொட்டியது போன்ற ஒரு தோற்றம் ஏற்படும்.

இரண்டாம் நிலை: இந்த நிலையில் முடி உதிரும் காலமானது மந்தப்பட்டு மிக மெல்லியதான அளவில் முடி உதிர்வது தெரிய ஆரம்பிக்கும்.

மூன்றாம் நிலை: இப்பொழுதுதான் உங்களின் முடி உதிர்வானது அதிகரித்து அங்கங்கே வழுக்கையானது வெளிப்படையாக தெரிய ஆரம்பிக்கும்.



நான்காம் நிலை: முன்பிருந்த 3 நிலைகளை விட அதிகமாக உங்களுடைய முடி உதிர்வானது அதிகரித்து கிட்டத்தட்ட தலையின் மேல் புறம் மிகப் பெரிதான அளவில் வழுக்கை தெரிய ஆரம்பிக்கும். நெற்றியின் மேல் புறத்தில் தொடங்கிய முடி உதிர்வானது மெல்ல மெல்ல அதிகரித்து உச்சந்தலையில் முடி உதிர்வதை அதிகபடுத்தும்.

ஐந்தாம் நிலை: இது நான்காம் நிலையை விட சற்று மோசமாக இருக்கும். இதில் தலையில் அங்கங்கே வழுக்கை தென்படுவது மட்டுமல்லாமல் ஏற்கனவே உள்ள முடியின் அடர்த்தியும் இன்னும் குறைய துவங்கும்.

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை சமாளிக்க மற்றும் குறைக்க உதவும் சில எளிய டிப்ஸ்!

ஆறாம் நிலை: இந்த நிலையில் முடி உதிர்ந்து கொண்டு வரும் இடமும் ஏற்கனவே முடி உதிர்ந்து வழுக்கையாக உள்ள இடமும் ஒன்று சேர்ந்து காட்சியளிக்கும். கிட்டத்தட்ட முன்பக்கமும், உச்சந்தலையிலும் உள்ள முடி அனைத்தும் உதிர்ந்து தலையின் பக்கவாட்டில் மட்டுமே முடி இருக்கும்.

ஏழாம் நிலை:

இந்த நிலையில் உச்சந்தலையிலும் தலையின் முன் பக்கமும் உள்ள முடிகள் அனைத்தும் உதிர்ந்து பக்கவாட்டில் மட்டும் முடி இருக்கும். அவ்வாறு பக்கவாட்டுத் தலையில் உள்ள முடியானது மெல்லியதாகவும் அதன் வேர்க்கால்கள் வலிமையற்றதாகவும் இருக்கும்.



முடி உதிர்வுக்கு சிகிச்சை:

மினாக்சிடில்(Minoxidil): மினாக்சிடில் இன்னும் இந்த மருந்து முடி உதிர்வுக்கு ஏற்ற சிகிச்சையாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்துவதால் ஏற்கனவே உள்ள முடியின் வேர்களுக்கு வலிமையூட்டுவதும் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடியை வளர செய்வதற்கும் இது உதவுகிறது. இதனை பயன்படுத்தி முடியை முழுவதுமாக வளர வைக்க முடியாவிட்டாலும் பகுதி பகுதியாக தலையின் பல இடங்களில் முடிவளர்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. பலர் இதனை மருத்துவரின் அனுமதியின்றி பயன்டுதல்லாம் என கூறினாலும், இதனை பயன்படுத்தும் போது இரத்தஓட்டம் அதிகரிக்கப்பட்டு இதயத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மருத்துவரின் அறிவுரையின் பேரில் சரியான அளவில் இதனை எடுத்துகொள்ள வேண்டும்.

பளபள சருமம், பட்டுபோன்ற கூந்தலும் பெற உதவும் உணவுப் பொருட்கள் எவை தெரியுமா?

பினாஸ்டரைட்(FInasteride): 80%-90% வரை இந்த FInasteride எனப்படும் மருந்தை பயன்படுத்தி முடி உதிர்வது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த மருந்தை பயன்படுத்துவதால் சிலருக்கு ஆண்மை குறைவு ஏற்படும் பிரச்சனை ஏற்படலாம். எனவே இந்த மருந்தை மருத்துவரின் அறிவுரை இன்றி பயன்படுத்தக் கூடாது.

இவை அனைத்தையும் தாண்டி ஹேர் ட்ரான்ஸ்பிளான்டேஷன் எனப்படும் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடிகளை நட்டு வளர வைக்கும் சிகிச்சை முறையும் லேசர் முறையை பயன்படுத்தி வாழும் சிகிச்சை முறையும் முடி உதிரும் பிரச்சனைக்கு தீர்வாக உள்ளது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Bald Head, Hair care

அடுத்த செய்தி