Home /News /lifestyle /

குளிர்காலத்தில் சரும வறட்சியிலிருந்து தப்பிக்க வேண்டுமா..? இயற்கையான முறையில் சில டிப்ஸ்..!

குளிர்காலத்தில் சரும வறட்சியிலிருந்து தப்பிக்க வேண்டுமா..? இயற்கையான முறையில் சில டிப்ஸ்..!

சரும வறட்சி

சரும வறட்சி

வறண்ட சருமம் இருப்பவர்களுக்கு வாழைப்பழ பேஷியல் நல்ல பலனை தரும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
குளிர்காலத்தின் வீசும் உலர்ந்த காற்று சரும வறட்சி, ஒவ்வாமை, அரிப்பு மற்றும் சிவத்தல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதற்கு பெரும்பாலானோர் மாய்ஸ்சரைசர்கள் மற்றும் க்ரீம்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இவை தற்காலிக தீர்வை மட்டுமே தரும் என்பதால் இயற்கையான முறையில் சரும வறட்சியை நீக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு காண்போம்.

1. குளிர்காலத்தில் கை, கால்கள் வறட்சியாக காணப்படும். இதற்கு கடைகளில் எண்ணற்ற மாய்ஸ்சரைசர்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அவற்றில் ரசாயனங்கள் இருக்கும் என்பதால், அதற்கு பதிலாக வெண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கையான மாய்ஸ்சரைசர்களை பயன்படுத்துவது நல்ல பலனை தரும்.

2. வறட்சிக்கு வழிவகுக்கும் அழகுசாதனப் பொருட்களான மேட் லிப்ஸ்டிக், பவுடர் ப்ளஷ்கள் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக லிப் பாம்கள் மற்றும் ஹைட்ரேட்டிங் ஃபவுண்டேஷன் போன்றவற்றை பயன்படுத்துங்கள்.

3. குளிர்காலத்தில் வீட்டில் தயாரிக்கப்படும் டோனர்கள் மற்றும் ஸ்க்ரப்களை பயன்படுத்துவது சருமத்திற்கு நல்லது. வறண்ட சருமம் கொண்டவர்கள் பால் பவுடர் , கிளிசரின், மற்றும் எலுமிச்சை சாறு இவற்றை ஒன்றாக கலந்து சருமத்தில் பயன்படுத்தலாம். இதனை இரண்டு முறை பயன்படுத்தலாம்.



5. வறண்ட சருமம் இருப்பவர்களுக்கு வாழைப்பழ பேஷியல் நல்ல பலனை தரும். ஒரு பவுலில் வாழைப்பழங்களை நன்றாக மசித்து, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசிக்கொண்டு 30 நிமிடங்கள் அப்படியே இருக்கவும். அதன் பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.

6. முட்டையின் வெள்ளை கருவை மட்டும் எடுத்து அதை நன்றாக அடித்து முகத்தில் பூசிக்கொள்ளவும். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இதனால் சரும வறட்சி நீங்கும்.

காலையில் எழும்போதே பொலிவான சருமத்துடன் இருக்க வேண்டுமா..? தூங்கும் முன் இதையெல்லாம் செய்யுங்கள்..

7. கற்றாழை ஜெல் சருமத்திற்கு ஈரப்பதத்தை வழக்க வல்லது. தினமும் கற்றாழை ஜெல்லை எடுத்து சருமத்தில் அப்ளை செய்து உலர்ந்த பின்னர் கழுவி வர வேண்டும்.

8. ஒரு பவுலில் எலுமிச்சை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து சாதாரண தண்ணீரில் முகத்தை கழுவவும். இதனை வாரம் மூன்று முறை செய்து வந்தால் சரும வறட்சி நீங்கும்.



9. கொலாஜன், சோடியம் ஹைலூரோனேட், கோஎன்சைம் க்யூ 10, பீட்டா கரோட்டின், அஸ்டாக்சாந்தின், குளுதாதயோன், துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற ஆக்ஸிஜனேற்ற சப்ளிமெண்ட்ஸ்களை எடுத்து கொள்ள வேண்டும்.

மேலும் ஆளிவிதை எண்ணெய் காப்ஸ்யூல்கள், ப்ரிம்ரோஸ் ஆயில் காப்ஸ்யூல்கள், காட்-லீவர் ஆயில் காப்ஸ்யூல்கள் மற்றும் ஒமேகா 3, ஒமேகா 6, ஒமேகா 9 சப்ளிமெண்ட்ஸ் போன்ற அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களின் சப்ளிமெண்ட்கள் எடுத்து கொள்வது சருமத்திற்கு நீரேற்றத்தை வழங்க வல்லது என டாக்டர் ஜமுனா பாயின் வலியுறுத்தியுள்ளார்.
Published by:Sivaranjani E
First published:

Tags: Beauty Tips, Dry skin, Winter

அடுத்த செய்தி