Home /News /lifestyle /

Skin Care : முகத்திற்கு எண்ணெய் பூசுவது ஏன் அவசியம் தெரியுமா?

Skin Care : முகத்திற்கு எண்ணெய் பூசுவது ஏன் அவசியம் தெரியுமா?

சரும பராமரிப்பு

சரும பராமரிப்பு

Skin Care : முகப்பரு, தழும்புகள், கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளுடன் வாழ்நாள் முழுவதும் போராட வேண்டிய நிலை ஏற்படும். சருமத்திற்கு சரியான சீரமாக இயற்கையான எண்ணெய்களை பயன்படுத்துவது நல்லது.

முகத்தை பளபளப்பாக பராமரிக்க என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால் தேவையானதை, சரியான நேரத்தில் செய்ய தவறி விடுகிறோம். முகம் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக, மேக்கப் போடுவதற்கு முன்பு பல க்ரீம்களை பூசிக்கொள்வது வாடிக்கையாக இருக்கிறது. ஆனால் இயற்கையாக நம் வீட்டிலேயே இருக்க கூடிய சில பொருட்கள் சரும ஆரோக்கியத்தை பளபளக்க உதவுவதை பலரும் அறிந்திருப்பது இல்லை.

குறிப்பாக ஆயில் ஸ்கின் வகையைச் சார்ந்தவர்கள் முகத்திற்கும், தலைக்கும் எண்ணெய் பூசுவதை தவிர்ப்பார்கள். இதனால் சருமம் வறண்டு, பொலிவிழந்து போகும். உடனடியாக சந்தைகளில் கிடைக்க கூடிய மாய்ஸ்சுரைசர், சீரம் உள்ளிட்ட பல அழகு சாதன பொருட்களை பூசி, முகத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்க முயற்சிப்பார்கள். இதனால் சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கும் என்றாலும், சருமத்திற்குள் தேவையில்லாத ரசாயனங்கள் உருடுவி பல பிரச்சனைகளை உருவாக்கலாம்.

முகப்பரு, தழும்புகள், கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளுடன் வாழ்நாள் முழுவதும் போராட வேண்டிய நிலை ஏற்படும். சருமத்திற்கு சரியான சீரமாக இயற்கையான எண்ணெய்களை பயன்படுத்துவது நல்லது. சருமத்திற்கு எது சரியான சீரம் என்பதை எப்படி அறிந்து கொள்வது?, வெவ்வேறு சரும வகைகளை கொண்டவர்கள் எந்த இயற்கையான முக எண்ணெய்களை பயன்படுத்தலாம் என இந்த தொகுப்பில் காணலாம்...

இதையும் படியுங்கள்:  வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

இதற்கு முன்னதாக எண்ணெயில் இருந்து வரும் வாசனை குறித்து அறிந்து கொள்வோம்.

1. பொதுவாக தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் போன்ற இயற்கையான எண்ணெயின் வாசனையை மக்கள் விரும்ப மாட்டார்கள். எனவே லாவெண்டர் போன்ற எண்ணெய்களுக்குச் செல்வது நல்லது, இது வாசனையை மட்டுமின்றி பாக்டீரியாவை நீக்கவும், எடை குறைக்கவும் உதவுகிறது.

2. எண்ணெய் பிரித்தெடுக்கும் முறையை கவனத்தில் கொள்வது முக்கியம். ஏனென்றால் எண்ணெய் கொழுப்பு அமிலங்களின் இருப்பை அடிப்படையாக கொண்டது. மேலும் பிரித்தெடுக்கப்படும் எண்ணெய்யை சரியாக வடிகட்டாவிடில் தூசு போன்ற மாசுகள் இருக்க வாய்ப்புள்ளது.

3. அடுத்தாக எண்ணெய்யின் ஆயுள் காலம் எவ்வளவு என்பது முக்கியமானது. ஏனென்றால் சில எண்ணெய்யை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போதே, வாசனையில் மாற்றம் ஏற்பட்டு விரும்பதகாததாக மாறிவிடும்.

இதையும் படியுங்கள்:  புற்றுநோயை தடுப்பது முதல் கல்லீரல் பாதுகாப்பு வரை… கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் இவை

ஒவ்வொரு முக எண்ணெயும் மூன்று கூறுகளைக் அடிப்படையாக கொண்டுள்ளது. கேரியர் எண்ணெய், அத்தியாவசிய எண்ணெய் மற்றும் ஆக்ஸிஜனேற்றம். குறிப்பிட்ட பொருளில் இருந்து பிரித்தெடுக்கப்படுபவை கேரியர் எண்ணெய் எனப்படும். பாதாம் எண்ணெய், திராட்சை எண்ணெய், ஆலிவ் ஆயில் ஆகியவை இதில் அடங்கும். அதே நேரத்தில் அத்தியாவசிய எண்ணெய் ஒரு இனிமையான, ஆடம்பரமான நறுமணத்தைக் கொடுக்கும். எண்ணெயில் உள்ள கொழுப்புகள் பழுதடைந்து போகாமல் இருக்க ஆக்ஸிஜனேற்றம் உதவுகிறது.

வறண்ட சருமம்: ஆலிவ் + தேங்காய் எண்ணெய்

ஆலிவ் ஆயிலில் உள்ள ஸ்குவாலீன் என்ற பொருள் மாய்ஸ்சரைசர் போல் செயல்படும், சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் நீரிழப்பு மற்றும் வெடிப்புள்ள சருமத்தில் அற்புதமாக செயல்படும்.

நார்மல் சருமம்:

சணல் விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் ஈரப்பதமூட்டும் அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவை தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. அதே போல் சருமத்தில் இயற்கையான எண்ணெய் அளவையும் பராமரிக்க உதவுகிறது. வயதான சருமம்: மருலா ஆயில், ரோஸ்ஷிப் ஆயில் மற்றும் வைட்டமின் ஈ கலந்த சீரம் சருமத்தை இறுக்கமாக்க உதவுகிறது. இதனால் கொலாஜன் எலாஸ்டிக் ஆகாமல் தடுக்கிறது. ஆயில் சருமம்: அர்கான் ஆயில் மற்றும் ஈவினிங் ப்ரிம்ரோஸ் ஆயில் சருமத்தில் உள்ள கூடுதல் எண்ணெய்களை நீக்கி முகப்பரு உருவாவதை தடுக்கிறது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Skin Care

அடுத்த செய்தி