முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / லிப்ஸ்டிக் வேண்டாம்.... இயற்கையாகவே இளஞ்சிவப்பு உதடுகளைப் பெருவதற்கு பீட்ரூட்டை இப்படி யூஸ் பண்ணிப்பாருங்க.!

லிப்ஸ்டிக் வேண்டாம்.... இயற்கையாகவே இளஞ்சிவப்பு உதடுகளைப் பெருவதற்கு பீட்ரூட்டை இப்படி யூஸ் பண்ணிப்பாருங்க.!

உதடுகளுக்கு பீட்ரூட்

உதடுகளுக்கு பீட்ரூட்

முதலில் ஒரு துண்டு பீட்ரூட்டை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். 15 முதல் 20 நிமிடங்களுக்கு பிறகு எடுத்துவிட்டு அதை உதடுகளில் தேய்க்கவும். சில நிமிடங்களுக்கு நீங்கள் இவ்வாறு செய்தால் போதும் உங்களது உதடும் இயற்கையான ரோஜா நிறத்திற்கு மாறிவிடும்.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பெண்கள் வெளியில் செல்லும் போது எப்போதும் மற்றவர்களை விட கொஞ்சம் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு.. அதிலும் வீட்டில் ஏதாவது சுப நிகழ்ச்சிகள் என்றால் சொல்லவே தேவையில்லை. அழகு நிலையங்களுக்குச் சென்று முகத்தை பேசியல் செய்துக்கொள்வார்கள். ஒருவேளை போகமுடியவில்லை என்றால் வீட்டிலேயே விதவிதமான பேஸ் பேக்குகளைப் பயன்படுத்தி முகத்தை அழகுப்படுத்துவார்கள். இவ்வாறு முகத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை உதடுகளுக்கு பல பெண்கள் கொடுக்கத் தவறிவிடுவார்கள்.

இதனால் எத்தனை மேக்அப் போட்டாலும் உதடுகள் பொலிவிழந்து காணப்படுவதால் அனைத்து அழகும் முற்றிலும் கெட்டுவிடும். எனவே முகத்தைப் பராமரிப்பது போல் உதடுகள் பராமரிப்பதிலும் முக்கியத்துவம் கொடுக்கவும். இதற்காக நீங்கள் லிப்ஸ்டிக் தான் பயன்படுத்த வேண்டும் என்றில்லை. இயற்கை முறையிலும் உங்களது உதடுகளை வீட்டில் இருந்தே பொலிவாக வைத்திருக்க முடியும். இதில் முக்கியமானது பீட்ரூட் தான். எப்படி? என்ன மாதிரி உதடுகளைப் பராமரிப்பதற்கு உபயோகிக்கலாம் என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்.

பீட்ரூட்டும் உதடு பராமரிப்பும்:

பீட்ரூட்டில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளதால் உங்களது சருமத்தை பிரகாசமாக வைத்திருக்க உதவியாக உள்ளது. பீட்ரூட்டை உங்களது உதடுகளின் மேல் தடவும் போது, கருமையான உதடுகளைப் போக்கவும், உங்களது உதடுகளை பிரகாசமாகவும், வெளிர் நிறமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

உலர்ந்த மற்றும் வெடிப்புகள் நிறைந்த உதடுகளை சீராக்கவும் பீட்ருட் மிகுந்த பலனளிக்கிறது. இயற்கையான மாய்ஸ்சரைசராக பீட்ரூட் இருப்பதால் தினமும் நீங்கள் உதடுகளில் மேல் பயன்படுத்தலாம். இதில் உள்ள நீரேற்றம் பண்புகள் உதடுகளை மிகவும் மென்மையாக வைத்திருக்க உதவுகிறது. இதோடு உதடுகளில் உள்ள வெடிப்புகள் மற்றும் கோடுகளை மறைத்து வயதானத் தோற்றத்தை மறைக்கிறது.

உதடுகளுக்கு பீட்ரூட் பயன்படுத்தும் முறை:

உதடுகளை மென்மையாகவும், வெடிப்புகள் இல்லாமல் பராமரிப்பிற்கு பீட்ரூட் மிகவும் பயனுள்ளதாக உள்ளதால் பல வழிகளில் நீங்கள் இதை உபயோகிக்கலாம்.

பீட்ரூட்டை நன்றாக அரைத்துக் கொண்டு அதனுடன் சர்க்கரைக் கலந்து பேஸ்ட் செய்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்து உதட்டில் தடவி வர வேண்டும். இவ்வாறு மேற்கொள்வதன் மூலம் இறந்த செல்கள் அகற்றப்பட்டு உதடுகள் மென்மையாகவும், பிரகாசமாகவும் மாறுவதற்கு உதவியாக உள்ளது.

உதடுகளுக்கென்று பல விதமான லிப்ஸ்டிக் முதல் லிப் பாம்களில் வரை சந்தையில் விற்பனையாகிறது. இதில் டன் கணக்கில் ராசாயனங்கள் இருப்பதால் உங்களது உதடுகளை கருமையாக்கும் அல்லது சேதப்படுத்திவிடும். இனி இதற்கு மாற்றாக நீங்கள் பீட்ரூட்டை இப்படி பயன்படுத்தலாம்.

முதலில் ஒரு துண்டு பீட்ரூட்டை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். 15 முதல் 20 நிமிடங்களுக்கு பிறகு எடுத்துவிட்டு அதை உதடுகளில் தேய்க்கவும். சில நிமிடங்களுக்கு நீங்கள் இவ்வாறு செய்தால் போதும் உங்களது உதடும் இயற்கையான ரோஜா நிறத்திற்கு மாறிவிடும்.

அடுத்ததாக பீட்ரூட்டும் எலுமிச்சை சாறும்....இவை இரண்டிலும் வைட்டமின் சி பண்புகள் அதிகளவில் உள்ளதால், உதடுகளை பிரகாசமாக்க உதவுகிறது. நீங்கள் முதலில் பீட்ரூட்டை பேஸ்ட் போல உருவாக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் இதோடு சிறிதளவு எலுமிச்சை சாறு, ரோஸ் வாட்டர் மற்றும் சிறிது ப்ரெஷ் கிரீம் பால் சேர்க்க வேண்டும். இப்போது லிப் மாஸ்க் ரெடியாகிவிடும். இதை நீங்கள் உதடுகளில் தடவி 20 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருந்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவும் போது உங்களது உதடுகள் சிறந்த ஊட்டச்சத்தைப் பெற முடியும்.

Also Read : பற்சிதைவில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவும் 5 டிப்ஸ்..!

இவ்வாறு நீங்கள் தொடர்ச்சியாக பீட்ரூட்டைப் பயன்படுத்தி உதடுகளைப் பராமரித்து வந்தால் நிச்சயம் இளஞ்சிவப்பு நிற உதடுகளை நீங்கள் எவ்வித கெமிக்கலும் இல்லாமல் பெற முடியும். இதோடு மட்டுமின்றி தினமும் பீட்ரூட்டை சமையலில் சேர்ப்பது அல்லது ஜூஸாக செய்து பருகும் போது, சரும பிரகாசம், முகப்பரு இல்லாத முகம், இளமையான தோற்றம், சருமத்தை ஈரப்பதமாக்குதல் போன்றவற்றை நாம் பெற முடியும். மேலும் இதில் உள்ள வைட்டமின்சி, இரும்புச்சத்து மற்றும் தாதுக்கள் செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவியாக உள்ளது. எனவே எவ்வித அச்சமும் இன்றி நீங்கள் பீட்ரூட்டை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

First published:

Tags: Beetroot, Beetroot mask, Lip