எவ்வளவோ முயற்சி செய்தும் முடி உதிர்வு ஏன் நிற்கவேயில்லை என்று நீங்கள் கவலைப்பட்டது உண்டா? அதுவும் கூந்தல் பராமரிப்பு தொடர்பாக கண்ணில் தென்படும் தகவல்கள், தோழிகள் சொல்லும் ஆலோசனைகள் என பலவற்றை பின்பற்றியும் பலன் கிடைக்கவில்லை என்று கவலை கொண்டுள்ளீர்களா?உங்கள் முடி உதிர்வுக்கான காரணம் மரபணுக்களாக இருக்கலாம். உங்கள் கண்களின் நிறம் தொடங்கி உடல் அமைப்பு, முகத் தோற்றம், முடி வளர்ச்சி என எல்லாவற்றிலும் மரபணுக்களின் பங்கு இருக்கிறது.
வாழ்க்கையின் பிற்பகுதியில் உங்களுக்கு முடி உதிர்வு ஏற்படுமா, இல்லையா என்பதை உங்கள் பரம்பரை தான் தீர்மானிக்கிறது. ஆண்களுக்கு மரபு ரீதியாக முடி உதிர்வு ஏற்படுவதை Male Pattern Baldness (MPB) என்றும், பெண்களுக்கு முடி உதிர்வு ஏற்படுவதை Female Pattern Baldness (FPB) என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
Read More : நோ சொல்ல யோசிப்பவரா நீங்கள்..? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்!
கட்டுக்கதை மற்றும் உண்மை
ஆண்களுக்கு தாய்வழி மரபுக் கோளாறுகளால் முடி உதிருகிறது என்றும், பெண்களுக்கு தந்தை வழி மரபுக் கோளாறுகளால் முடி உதிருகிறது என்றும் தவறான புரிதல் நிலவுகிறது. ஆனால், மனித உடல் என்பது பல ஜீன்களை உள்ளடக்கியது ஆகும். 23 ஜோடி குரோமோசோம்கள் நம் உடலில் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் பாலினத்தை தீர்மானிக்கும் எக்ஸ், ஒய் குரோமோசோம்கள் ஆகும். எக்ஸ் என்பது தாயிடம் இருந்தும், ஒய் என்பது தந்தையிடம் இருந்தும் வருகிறது.
முடி உதிர்வுக்கு என்னதான் காரணம் மற்றும் தடுப்பதற்கான வழிகள்..?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hair Damage, Hair fall, Health, Mental Health