• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • குழந்தையிலேயே வெள்ளை முடியா..? அதற்கு காரணம் இதுதான்..!

குழந்தையிலேயே வெள்ளை முடியா..? அதற்கு காரணம் இதுதான்..!

குழந்தையிலேயே வெள்ளை முடி

குழந்தையிலேயே வெள்ளை முடி

இது மரபணு காரணமாக இருந்தால் மாற்றுவது கடினம். அது தவிர மற்ற காரணங்களாக இருந்தால் வாழ்க்கை முறை மூலம் சரிசெய்யலாம்.

  • Share this:
    வயதானால் வெள்ளை முடி வளர்வது இயற்கை. ஆனால் குழந்தையிலேயே வெள்ளை முடி வளர்கிறது எனில் அது இயற்கை அல்ல. ஏதோ உடல்நலப் பிரச்னையே காரணமாக இருக்கும். அது என்ன பார்க்கலாம்.

    முடி கருமைக்குக் காரணம் : 

    பொதுவாக முடிக்கு கருமை அளிப்பது மெலனின் நிறமிதான். அது வயது செல்ல செல்ல அதன் சுரப்பு தடைபடுகிறது. அதன் தரமும் குறைகிறது.

    குழந்தைகளுக்கு இந்த மெலனின் தரம் குறைய காரணங்கள் என்ன?

    மரபணு : குழந்தையிலேயே வெள்ளை முடி வளர்வது மரபணு காரணமாக இருக்கலாம். தந்தைக்கோ, தாய்க்கோ இந்த பிரச்னை இருந்தால் பிள்ளைக்களுக்கும் இருக்கலாம்.

    ஊட்டச்சத்து பற்றாக்குறை : வைட்டமின் B12 குறைபாடு வெள்ளை முடிக்கு காரணமாக் இருக்கலாம். அதைத் தொடர்ந்து கால்சியம் , வைட்டமின் D3 குறைபாடும் முக்கிய காரணம்.

    மருத்துவ காரணங்கள் : விட்டிலிகோ, தைராய்டு,வெர்னரின் நோய்க்குறி ( Werner’s syndrome) போன்ற மருத்துவக் காரணங்களாலும் வெள்ளை முடி வரலாம்.

    அசிடிடியால் நெஞ்சு எரிச்சலா..? உடனே குணமாக இப்படி செஞ்சு பாருங்க..!

    கெமிக்கல் பயன்பாடு : பயன்படுத்தும் ஷாம்பூ, லோஷன், கண்டிஷ்னர், டை போன்றவையும் காரணங்களாக இருக்கலாம்.

    மற்ற காரணங்கள் : மேலே குறிப்பிட்டவை அல்லாமல் மன அழுத்தம், காற்று மாசுபாடு, யூவி கதிர்கள் போன்றவையும் குழந்தை அல்லது இளமையிலேயே வெள்ளை முடி வளர காரணமாக இருக்கலாம்.



    தீர்வு என்ன ?

    இது மரபணு காரணமாக இருந்தால் மாற்றுவது கடினம். அது தவிர மற்ற காரணங்களாக இருந்தால் வாழ்க்கை முறை மூலம் சரிசெய்யலாம்.

    கால்சியம், வைட்டமின் D3, வைட்டமின் B12 போன்ற ஊட்டச்சத்துகளின் பற்றாக்குறையைக் குறைக்கலாம். கறிவேப்பிலை, பெரிய நெல்லிக்காய் அதிகம் சாப்பிடலாம். இவை இரண்டு மருத்துவ ரீதியாக வெள்ளை முடிகளை நீக்க உதவுபவை என நிரூபிக்கப்பட்டுள்ளது.

    தேங்காய் எண்ணெய் கொண்டு தலையில் 15 நிமிடங்கள் மசாஜ் செய்து வர இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் வெள்ளை முடிகள் கருமையாகும்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    பார்க்க : 

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: