ரகுல் பிரீத்சிங் சரும அழகைப் பராமரிக்க இதைத்தான் செய்கிறார்..

உடலில் எந்த அளவு வியர்வையை வெளியேற்றுகிறீர்களோ அந்த அளவிற்கு உங்கள் சருமம் பிரகாசிக்கும்.

ரகுல் பிரீத்சிங் சரும அழகைப் பராமரிக்க இதைத்தான் செய்கிறார்..
ரகுல் பிரீத் சிங்
  • Share this:
தீரன் , என்.ஜி.கே போன்ற படங்களின் மூலம் சிறந்த நடிப்பால் தடம் பதித்த நடிகை ரகுல் பிரீத் சிங். நடிப்பில் மட்டுமல்லாது கட்டுக்கோப்பான உடல் அமைப்பு , சரும அழகைப் பாதுகாப்பதிலும் இவர் சளைத்தவர் அல்ல.

இன்ஸ்டாகிராமில் அவருடைய ஒர்க்அவுட் வீடியோக்களைப் பார்த்தாலே எந்த அளவு தன் உடல் எடையை பாதுகாக்க உழைக்கிறார் என்பது தெரியும். இந்த ஒர்க் அவுட்டுகள் உடல் எடைக்காக மட்டுமல்ல சரும அழகைப் பராமரிக்கவும் முக்கியமாக இருக்கிறது என ரகுல் நேர்க்காணலில் ஒரு முறை கூறியுள்ளார். அதில் “ உடலில் எந்த அளவு வியர்வையை வெளியேற்றுகிறீர்களோ அந்த அளவிற்கு உங்கள் சருமம் பிரகாசிக்கும். அதற்கு நான் அடிமையும் கூட.

பாத்ரூம், தரைகளில் உள்ள கிருமிகளை அகற்ற சமந்தா தயாரித்த ஹோம் கிளீனர் - நீங்களும் செய்யலாம்


வியர்வை சொட்ட சொட்ட உடற்பயிற்சி செய்வேன். எனக்கு 4 மணிக்கு ஷூட் என்றாலும் அதற்கு முன்னரே எழுந்து ஒர்க் அவுட் செய்துவிட்டுதான் ஷூட் செல்வேன். ஒருநாளும் தவறாமல் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்துவிடுவேன் என்று கூறியிருந்தார்.அதேபோல் முக அழகைப் பராமரிக்க கெமிக்கல் பொருட்கள் அல்லாமல் இயற்கையான வீட்டுக்குறிப்புகளைத்தான் பின்பற்றுவாராம். குறிப்பாக ஃபிரெஷான பழங்களை அரைத்து முகத்தில் ஃப்ரூட் பேக் அப்ளை செய்வதுதான் அவருடைய வாடிக்கையான சருமப் பராமரிப்பு என்று கூறியுள்ளார்.
First published: July 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading