பிசுபிசுப்பான தலைமுடி பிரச்சனையா? நடிகை ரகுல் பிரீத் சிங் அழகிய டிப்ஸ்

ரகுல் ப்ரீத் சிங்

நடிகை ரகுல் பிரீத் சிங் ஒவ்வொரு நாளும் தனது தலைமுடியை தொடர்ந்து வாஷ் செய்து வருவதாகவும் கூறி உள்ளார்.

  • Share this:
    குளிக்கும் போது தினமும் தலைக்குத் தண்ணீர் ஊற்றினால் முடி சேதமடையும் அல்லது கொட்டி விடும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் பிரபல நடிகையான ரகுல் பிரீத் சிங், ஒருவர் தனது தலைமுடியை எவ்வளவு அடிக்கடி தண்ணீரால் வாஷ் செய்ய வேண்டும் என்பதுபற்றிய தகவல்களை ஷேர் செய்து கொண்டுள்ளார். மேலும் அவர் ஒவ்வொரு நாளும் தனது தலைமுடியை தொடர்ந்து வாஷ் செய்து வருவதாகவும் கூறி உள்ளார்.

    ஒர்கவுட் டிப்ஸ், ஹெல்த் டிப்ஸ்கள் மற்றும் பல ஆரோக்கியமான டிப்ஸ்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ள விரும்பும் ஒரு நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். சமூக ஊடகத்தில் பெரும்பாலும் தனது டிப்ஸ் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தொடர்ந்து ஷேர் செய்கிறார். இதனிடையே பல ஆண்டுகளாக தன் அழகை பராமரிக்க உதவி வரும் அழகு குறிப்புகள் பற்றியும் இவர் தகவல்களை பகிர்ந்து கொள்வார்.

    Also Read: காதலின் நினைவு.. லவ் லாக்கை உடைக்க 10,000 கிமீ பயணம் மேற்கொண்ட பெண்

    அந்த வகையில் சமீபத்தில் தனது தலைமுடி பராமரிப்பு பற்றிய தகவல்களை வீடியோ ஒன்றில் நடிகை ரகுல் பிரீத் சிங் கூறி உள்ளார். அனைவருக்கும் வித்தியாசமான வாழ்க்கை முறை இருந்தாலும், தலைமுடியை வாஷ் செய்ய பெரும்பாலும் ஒரே முறையை பயன்படுத்துவதாக குறிப்பிடுகிறார். ஒவ்வொரு நாளும் நமது தலைமுடியை வாஷ் செய்வது தலைமுடியைக் கெடுத்து விடும் என்று பலர் நம்புகிறார்கள், ஆனால் இந்த கருத்தை ரகுல் பிரீத் சிங் நம்பவில்லை. ஒரு முழு முட்டை, வாழைப்பழத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஹேர் மாஸ்க் நல்ல பலனை தரும். ரகுலைப் பொறுத்தவரை அனைத்து இயற்கை பொருட்களையும் கொண்டுள்ள இந்த ஹேர் மாஸ்க், அவருடைய அம்மாவின் டிப்ஸ் ஆகும்.

    உச்சந்தலை எண்ணெயாக இருக்கும் ஆயிலி ஸ்கால்ப் (oily scalp) பிரச்சனை உள்ளவர்கள் தவறாமல் தலைமுடியை வாஷ் செய்வது அவசியம் என்கிறார். ஆயிலி ஸ்கால்ப் என்பது அதிகப்படியான செயலற்ற செபாசஸ் சுரப்பிகளின் விளைவாகும். உச்சந்தலையில் உள்ள சிறிய துளைகளின் கீழே செபாசஸ் சுரப்பிகள் உள்ளன. அவை sebum என்ற இயற்கை எண்ணெயை உற்பத்தி செய்கின்றன. ஆனால் சில நேரங்களில், சில காரணிகள் உங்கள் தோல் அல்லது உச்சந்தலையில் அதிகப்படியான sebum உற்பத்தி செய்ய பங்களிக்கக்கூடும், இதனால் உங்கள் தலைமுடி பிசுபிசுப்பாகவே இருக்கும்.

    Also Read: நிலவை துல்லியமாக போட்டோ எடுத்து 10ம் வகுப்பு மாணவர் சாதனை - குவியும் பாராட்டு!

    பிசுபிசுப்பான தலைமுடி அழுக்கை ஈர்க்கிறது, அது பொடுகுக்கு வழிவகுக்கிறது. முடி வேர்களை களை பாதித்து முடிஉதிர்வு மற்றும் குறைவான முடிவளர்ச்சி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
    தான் தினமும் ஒர்கவுட் செய்வதால் தன பிசுபிசுப்பான தலைமுடி சிக்கலை தவிர்க்க ஒவ்வொரு நாளும் தலைமுடியை வாஷ் செய்வதயே விரும்புவதாக கூறியுள்ளார். பெரும்பாலானோர் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே தலைமுடியை வாஷ் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் தொடர்ந்து நிறைய வியர்த்து கொட்டும் வேலைகளை நீங்கள் தொடர்ந்து செய்கிறீர்கள் என்றால் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

    உதாரணமாக, ஈரப்பதமான பருவத்தில் காற்றில் உள்ள ஈரப்பதம் oily scalp பிரச்சனைக்கு வழிவகுக்கிறது, அதனால்தான் இந்த காலகட்டத்தில் மக்கள் பெரும்பாலும் முடி உதிர்தலுக்கு ஆளாகின்றனர். இந்த நேரத்தில், ஒவ்வொரு நாளும் உங்கள் தலைமுடியை ஷாம்பு போட்டு குளிப்பது நல்லது. வெப்பம் மற்றும் அதிகப்படியான ஸ்டைலிங் காரணமாக முடி நிறைய பாதிக்கப்படுகிறது என்றும் ரகுல் பகிர்ந்து கொண்டுள்ளார். எனவே, உணவிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். முடி வளர்ச்சிக்கு ஆரோக்கியமான உணவை உட்கொள்வது முக்கியம் மற்றும் ஆரோக்கியமான முடியை பராமரிக்க வேண்டும். அவர் தனது முடி பராமரிப்பு வழக்கத்தில் இயற்கை தயாரிப்புகளை பயன்படுத்த முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Ramprasath H
    First published: