ராஜா ராணி அர்ச்சனாவுக்கு அழகை பரிசளித்த பொருள்... அட நம்ம கிச்சன்ல கூட இருக்குமே அதுதான்!

ராஜா ராணி அர்ச்சனா

ஷார்ட் ஃபிலிம்களில் நடித்த அர்ச்சனாவுக்கும் இப்போது இருக்கும் அர்ச்சனாவுக்கும் நிறைய வித்யாசங்கள்

 • Share this:
  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்த அர்ச்சனாவின் அழகுக்கு என்ன காரணம் தெரியுமா?

  ராஜா ராணி சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடிக்கும் விஜே அர்ச்சனா டீன் ஏஜ் பெண்களுக்கு ஏற்ற பியூட்டி டிப்ஸ்களை தான் பெரும்பாலும் பின்பற்றுகிறார். இந்த குறிப்புகள் கண்டிப்பாக கல்லூரி செல்லும் பெண்களுக்கு யூஸ்ஃபுல்லாக இருக்கும். இன்றைய இளம் தலைமுறையினர் முக அழகு, உடல் நலம் ஆகியவற்றில் பெரிதும் கவனம் செலுத்துக்கின்றனர். டஸ்கி ஸ்கின்னோ ஒயிட் ஸ்கின்னோ பருக்கள், கருத்தட்டுக்கள் இல்லாத ஆரோக்கியமான சருமத்தை பெறவே ஆசைப்படுகின்றனர். இதற்கு செலவு ஆனாலும் பரவாயில்லை என்று காஸ்லியான மேக் அப் புராக்டெக்டுகளை பின்பற்றுக்கின்றனர். அதிலும் குறிப்பாக பிரபலங்கள் என்ன யூஸ் செய்கிறார்களோ அதையே வாங்க நினைக்கின்றனர்.

  ஆனால் பெரும்பாலான பிரபலங்கள் தங்கள் முக அழகுக்கு ஆர்கானி பழங்கள், காய்கறிகள், வீட்டில் இருக்கும் பயித்தம் பருப்பு, மஞ்சள் போன்றவற்றையே பயன்படுத்துவதாக தெரிவிக்கின்றனர். அந்த வகையில் சின்னத்திரை அர்ச்சனாவின் அழகுக்கு காரணம் மாவு தானாம். பயித்தம் மாவு, பூலாங்கிழங்கு, காயவைத்த ரோஜா இதழ்கள், சந்தனம், வேப்பிலை, ஆரஞ்சு தோல் ஆகியவற்றை சேர்த்து அரைத்து வைத்துள்ள பவுடரை தான் முகம் கழுவதற்கு பயன்படுத்துகிறாராம். அடிக்கடி ரோஸ் வாட்டர் ஸ்ப்ரே செய்வராம்.  இதுதவிர்த்து அவர் லாக்டவுனில் எடுத்துக் கொண்ட ஜூஸ் அர்ச்சனாவின் அழகுக்கு பெரிய அளவில் ரிசல்ட் தந்தது. ஏபிசி ஜூஸை 7 மாதங்களாக அர்ச்சனா எடுத்துக் கொண்டார். இதனால் அவரின் கலர் இம்ப்ரூ ஆனதாம். இதை இப்பவும் ரெகுலராக ஃபாலோ செய்கிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதைத்தவிர்த்து சன்ஸ்க்ரீன் லோஷனை தவறாமல் உபயோகிப்பார். காலையில் யோகா செய்வதையும் மிஸ் பண்ண மாட்டாராம். இதை தவிர்த்து மேக்கப்பை அகற்ற எப்போதுமெ தேங்காய் எண்ணெய் தான் அவரின் சாய்ஸ். ஷார்ட் ஃபிலிம்களில் நடித்த அர்ச்சனாவுக்கும் இப்போது இருக்கும் அர்ச்சனாவுக்கும் நிறைய வித்யாசங்கள் தெரிகின்றன. அவரின் அழகு கூடிக்கொண்டே போக இது எல்லாவும் தான் மிக முக்கிய காரணங்களாக உள்ளன.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: