நடிப்புத் திறமையால் உலகப் பிரபலமாக அறியப்படும் பிரியங்கா சோப்ரா இந்தியாவின் பெருமை என்றே கூறலாம். நிக் ஜோனசை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் வசித்து வரும் பிரியங்கா இன்ஸ்டாகிராமில் தன் பதிவை தூசி தட்டி ரீஷேர் செய்துள்ளார்.
அவரே இந்த ரீஷேர் பதிவில் நீண்ட நாட்களுக்கு முன் வோக் இதழின் நேர்காணலுக்கு அளித்த பேட்டியை தூசி தட்டி பகிர்ந்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.
அதாவது உங்களின் மிருதுவான தலைமுடிக்கு என்ன செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு தன் அம்மா சொல்லிக்கொடுத்த ஹோம் டிப்ஸ் தான் பின்பற்றுவதாகக் கூறியுள்ளார். அது என்ன என்பதையும் பகிர்ந்துள்ளார்.
வறண்ட மற்று பொடுகுத் தொல்லையை நீக்கி தலைமுடி வேர்களை எண்ணெய் பதத்துடன் வைத்துக்கொள்ள தயிர், தேன் மற்றும் முட்டை வெள்ளை பகுதி மூன்றயும் சம அளவில் எடுத்துக் கொண்டு நன்குக் கலக்கவும். அதை தலையின் வேர்களில் படும்படி தடவி 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின் தலைக்குக் குளித்துவிடவும் என்று கூறியுள்ளார். இதுதான் தன் தலைமுடி பளபளப்பின் ரகசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
பின் குறிப்பாக : இந்த மிக்ஸிங் தலைக்கு குளித்த பின்பும் துர்நாற்றம் இருக்கும் எனவே நல்ல வாசனையான ஷாம்பூவை இரண்டு முறை போட்டு கண்டிஷ்னர் போடுங்கள் வாசனை போய்விடும் என்று கூறியுள்ளார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.