• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கிராண்ட் ஃபங்க்ஷனுக்கு போறீங்களா? இந்த மாதிரி ஸ்டைலில் ட்ரெஸ் பண்ணலாமே..

கிராண்ட் ஃபங்க்ஷனுக்கு போறீங்களா? இந்த மாதிரி ஸ்டைலில் ட்ரெஸ் பண்ணலாமே..

ப்ரியா பவானி சங்கர்

ப்ரியா பவானி சங்கர்

விஷேசத்திற்கு செல்லும் போது புடவை கட்டி போர் அடிக்குதா ? அப்ப இந்த மாதிரி லாங் ட்ரெஸ் ஸ்டைலில் ட்ரை பண்ணுங்க..

  • Share this:
நடிகை ப்ரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்பு சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் அறிமுகமானார்.அதையடுத்து 2017 ஆம் ஆண்டு மேயாத மான் திரைப்படத்தில் கதாநாயகியாக  அறிமுகமானார்.

மான்ஸ்டர், மாஃபியா, களத்தில் சந்திப்போம் ஆகிய படங்களில் நடித்தார்.ஓ மணப்பெண்ணே, குருதி ஆட்டம், பொம்மை, ஹாஸ்டல் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்தியன் 2, பத்து தல, திருச்சிடற்றம்பலம், ருத்ரன் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.நடிகை ப்ரியா பவானி சங்கர் ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும் அடிக்கடி போட்டோ ஷூட் செய்து இன்ஸ்டாவில் பதிவிடுவார்.

அந்த வகையில் நடிகை ப்ரியா பவானி சங்கர் சமீபத்தில் பச்சை நிற அனார்க்களியில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். நீங்கள் விஷேசத்திற்கு செல்லும் போது புடவை கட்டி செல்பவரா இருந்தால், வித்தியாசமாக இது போன்ற அனார்க்களியை ட்ரை பண்ணி பாருங்க.



இதில் நடிகை ப்ரியா பவானி சங்கர் ஆலிவ் பச்சை நிறத்தில் ஃபுல் சிலிவ் (full sleeve ) மற்றும் ஃபுல் லென்தில் ( full length ) அனார்க்களி அணிந்துள்ளார். க்ளோசுடு காலர் மாடலில் சில்வர் கலர் நெக் டிசைன் உள்ளது.இந்த உடை பார்ப்பதற்கு நேர்த்தியான அழகை தருகிறது.

Also read : வெளியே போறப்ப எந்த மாதிரி ஹேண்ட் பேக் யூஸ் பண்ணா லுக்கா இருக்கும் ?



மேலும் இது லாங் ட்ரெஸ் என்பதால் ஆடையின் அழகை எடுத்துக்காட்டும் படி சில்வர் கலர் பார்டர் இருப்பது கண்ணை பரிக்கிறது. துப்பட்டாவிலும் டாப்பிற்கு ஏற்றது போல் சில்வர் கலர் பார்டர் இருப்பது கூடுதல் அழகை சேர்க்கிறது.அணிந்திருக்கும் உடைக்கு ஏற்றது போல் ப்ரியா பவானி சங்கர் சில்வர் கலர் சிலிப்பர் ( slipper ) அணிந்துள்ளார்.

Also Read : எந்த ஒரு மேக்கப் இல்லாமல் நீங்க அழகா தெரியணுமா ? இதை ஃபாலோ பண்ணுங்க..



ஹேர் ஸ்டைலை பொறுத்தவரை பார்ட்டிக்கு செல்லுவது போல் ரெடி ஆகியுள்ளார்.  அனார்க்களிக்கு மேட்சாக ஆலிவ் கலரிலே தோடும் அணிந்துள்ளார்.

மேலும் சிம்பிளான மேக்கப்பை தேர்வு செய்து கண்ணுக்கு காஜல், ஐ லைனர் மற்றும் உதட்டிற்கு லைட் ஷேடில் லிப் ஸ்டிக் போட்டுள்ளார்.

நீங்கள் நண்பர்களுடன் பார்ட்டி, பிறந்தநாள் விழா கொண்டாட்டம் இப்படி அனைத்து விதமான கொண்டாத்திற்கும் இது மாதிரியான ஸ்டைலில் ட்ரெஸ் பண்ணி பாருங்க.வித்தியாசமாகவும், அழகாகவும் இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: