Home /News /lifestyle /

தலைமுடி உதிர்வு பிரச்சனையா? நீளமான கூந்தலை பெற செய்ய வேண்டியவை!

தலைமுடி உதிர்வு பிரச்சனையா? நீளமான கூந்தலை பெற செய்ய வேண்டியவை!

கோப்புப்படம்.

கோப்புப்படம்.

தலைமுடி உதிர்ந்து சொட்டையாவதற்கு மரபணுக்கள் மட்டும் காரணமல்ல, வேறு சில காரணங்களும் உள்ளன. அவை என்னென்ன தெரியுமா..?

  தலைமுடி உதிர்வு என்பது ஆண்களுக்கான பிரச்சனை மட்டுமல்ல, பெண்களுக்கும் இந்த பிரச்சனை உண்டு. தலைமுடி உதிர்வால் பெண்களை விட ஆண்களுக்கு தான், முடியெல்லாம் கொட்டி வழுக்கையாகிறது. இதனால் பல ஆண்கள் இளமையிலேயே வயதானவர்கள் போன்று காட்சியளிக்கிறார்கள். இந்த காரணத்தினால் பல ஆண்கள் திருமணமாவதில் சிக்கலை சந்திக்கிறார்கள். தலைமுடி உதிர்ந்து சொட்டையாவதற்கு மரபணுக்கள் மட்டும் காரணமல்ல, வேறு சில காரணங்களும் உள்ளன.

  அதில் ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை உண்பது, மன அழுத்தம், பதற்றம் போன்றவைகளும் அடங்கும். பல ஆண்களுக்கு வழுக்கைத் தலை அவர்களது தன்னம்பிக்கையை குறைத்துவிடுகிறது. வழுக்கையை மறைக்க பல ஆண்கள் கடைகளில் கிடைக்கும் பல எண்ணெய்கள், மருந்துகளை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும் எவ்வித பலனும் கிடைத்திருக்காது. மாறாக அவர்களின் மனம் தான் பெரும் வருத்தத்திற்கு உள்ளாகியிருக்கும். இந்த பிரச்சனையை எளிமையாக சரி செய்வது குறித்து இங்கு காண்போம்.,

  உச்சந்தலை மசாஜ் :

  ஆரோக்கியமான கூந்தலுக்கு உச்சந்தலையில் வலுவான வேர்கள் இருப்பது அவசியம். இதற்கு வாரம் 2 முறை உச்சந்தலைக்கு எண்ணெய் மசாஜ் செய்வது அவசியம். உலர்ந்த மற்றும் சீரற்ற உச்சந்தலையில் முடி அதிகமாக கொட்டும். எண்ணெய் மசாஜ் செய்வதன் மூலமாக இறந்த செல்களை அகற்றி புதிய செல்களைப் பெற முடியும். எண்ணெய்யை நேரடியாக உச்சந்தலையில் ஊற்றி, ஏதேனும் சிறந்த எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம், எண்ணெய் வேர்களை அடைந்து, முடி உதிர்தலை குறைத்து, உச்சந்தலையில் முடியின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. மெதுவாக பாட்டில்லில் எண்யெய்யை ஊற்றி உச்சந்தலையில் முழுவதும் சீப்பு பயன்படுத்தியும் அல்லது விரல் நுனியால் மசாஜ் செய்யவும். வழுக்கைத் தலைக்கு வெங்காயம் சிறந்த பலனைத் தரும். அதற்கு வழுக்கையான இடத்தில் வெங்காயத்தை அரைத்து பேஸ்ட் செய்து தடவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்தால், வெங்காயத்தில் உள்ள சல்பர் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை தூண்டி, முடியின் வளர்ச்சிக்கு உதவும்.  சீப்பு :

  தலைமுடி சீவுவது என்பது நாம் சிந்திக்க விரும்பும் அளவுக்கு எளிதானது அல்ல. நீங்கள் முடியை சீவ ஒரு சிறந்த சீப்பை பெறுங்கள். இது சிறிய மற்றும் அகலமான முட்கள் கொண்ட ஒரு சீப்பு ஆகும். இது உங்கள் தலைமுடியை மெதுவாக பிரிக்கிறது. ஒரு பெரிய தூரிகையுடன், பரந்த பல் கொண்ட சீப்பு, ரோலர் தூரிகை மற்றும் அகலமான ஹேர் பிரஷ் ஆகியவற்றை பயன்படுத்தி முடி உதிர்தலை தவிர்த்து விடுங்கள்.

  தண்ணீர் மற்றும் ஒமேகா 3 :

  பல முயற்சிகளை செய்துபார்த்துவிட்டு, எதுவும் வேலை செய்யவில்லை என்றால், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், பயோட்டின் (வைட்டமின் B1) மற்றும் துத்தநாகம் போன்ற சில முக்கிய ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ளுங்கள். இது முடி வேகமாக வளரச்செய்கிறது. மேலும், உங்கள் தலைமுடி வளர காரணமான செல்களை தூண்டுகிறது. தண்ணீர் உங்கள் உடலுக்கு மட்டுமல்ல, உங்கள் தலைமுடிக்கும் சருமத்திற்கும் நல்லது. நீங்கள் ஆரோக்கியமான கூந்தலை விரும்பினால், போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இவை உடலில் நீரிழப்பு, முடியில் ஏற்படும் உடைப்புகளை சரிசெய்ய உதவும்.

  கருமையான, நீளமான கூந்தலைப் பெற இந்த எளிய வழிகளைப் பின்பற்றுங்கள்...

  கண்டிஷனர் :

  கண்டிஷனர் என்பது நம் தலைமுடியை மென்மையாக மாற்றக்கூடிய சில வலுவான இரசாயனங்கள் கலந்த ஒரு தயாரிப்பு ஆகும். இது தீவிரமான விளைவுகளை கொண்டிருப்பதால், அதை வேர்களில் தடவுவது அவற்றை பலவீனப்படுத்துகிறது. பலவீனமான வேர்கள் அதிக முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். கண்டிஷனரைப் பயன்படுத்துவதற்கான சரியான வழி, உங்கள் தலைமுடியின் நடுப்பகுதியில் இருந்து தொடங்கி அடி முனை வரை தடவவேண்டும். உங்கள் முடியில் நீங்கள் பயன்படுத்தும் ஹேர் ஜெல் மற்றும் மெழுகு உங்கள் நீண்ட கூந்தலுக்கு நல்லதல்ல. இந்த தயாரிப்புகளைப் பயன்படுத்துவதால் உங்கள் முடியின் வேர்கள் பலவீனமடைகின்றன. இதனால் முடி உதிர்வு ஏற்படுகிறது. ஆதலால், முடி பராமரிப்பு பொருட்கள் என்ற பெயரில் பக்கவிளைவை ஏற்படுத்தும் ஹேர் ஸ்டைலிங் தயாரிப்புகளை அதிகம் பயன்படுத்த வேண்டாம். இவை உங்கள் தலைமுடியை சேதப்படுத்தும். முட்டையின் வெள்ளை கருவையும் கண்டிஷனராக பயன்படுத்தலாம் நல்ல பலனை தரும்.  ஆரோக்கியமான உணவுகள் :

  உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தில் உங்கள் உணவு வகிக்கும் பங்கு மிகவும் முக்கியமானது. நீங்கள் உட்கொள்ளும் உணவு உடலுக்கு வெளியிலும் பிரதிபலிக்கிறது. குப்பை உணவுகள் மற்றும் அதிக சர்க்கரை உணவை உட்கொள்வது உங்கள் தலைமுடியை மெல்லியதாகவும் சேதமாகவும் மாற்றிவிடும். நீங்கள் ஆரோக்கியமான மற்றும் அடர்த்தியான முடியை விரும்பினால், உங்கள் உணவில் கீரைகள் மற்றும் பழங்களை சேர்த்து கொள்ளுங்கள். மேலும், மது அருந்துதல் மற்றும் புகைபிடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. இது உங்கள் தலைமுடிக்கோ அல்லது சருமத்துக்கோ நல்லதல்ல. பச்சை காய்கறிகள், கீரைகள், முட்டை, மீன் மற்றும் பழங்களை உங்கள் அன்றாட உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

  வைட்டமின் C, D, மற்றும் A :

  - இது அணுக்களை ப்ரீ ராடிகல் சேதத்தில் இருந்து பாதுகாக்கும். இதனால் தலைமுடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும். வைட்டமின் C உடலில் இரும்பு சத்து சேரவும் உதவியாக இருக்கும். ப்ரோகோலி, சர்க்கரைவள்ளி கிழங்கு, பப்பாளி, கொய்யா, கமலாபழம் போன்றவற்றில் இந்த சத்து நிறைந்துள்ளது.

  - இது அதிக அளவு சூரிய ஒளியில் இருந்து மட்டுமே கிடைக்கும். இந்த சத்து தலைமுடியின் வேர் பகுதி பலம் பெறவும், புதிய நுண்குமிழில் உருவாகவும் உதவியாக இருக்கும். நேரடி சூரிய ஒளி கதிர்கள் அதிகம் உங்கள் உடலில் படும் போது இந்த சத்து உங்களுக்கு அதிகம் கிடைக்கும்.  - இது உடலின் வளர்ச்சிக்கு மிகவும் தேவையான ஒரு சத்து. இது சீபம் உற்பத்திக்கு மிகவும் உதவியாக உள்ளது. தலைமுடி பலமாகவும், ஆரோக்கியமாகவும் வளர இது உதவும். சக்கரவள்ளி கிழங்கு, கீரை, சர்க்கரை பூசணிக்காய், கேரட், பால், முட்டை, தயிர் போன்றவற்றில் இந்த சத்து நிறைந்துள்ளது.

  தலைமுடி நீளமாக வளர நம் உணவு மட்டுமல்லாமல் நாம் பயன்படுத்தும் உடல் வெளிப்புற தயாரிப்புகள் முதற்கொண்டு பலவற்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மாறிவரும் பருவ காலத்தினால் உணவில் மாறுபாடு ஏற்பட்டாலும் கூடுமான அளவிற்கு நாம் இயற்கையை சார்ந்து இருப்பது அவசியம். இல்லையெனில் முடி உதிர்வு மட்டுமல்லாது வேறு பல சிக்கல்களும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

  அண்மை செய்திகளுக்கு உடனுக்கு உடன் இணைதிருந்துகள்.
  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Hair fall, Hair growth

  அடுத்த செய்தி