ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பொடுகு தொல்லையை போக்க வெங்காயமும் தேங்காய் எண்ணெயும் போதுமா..? உங்களுக்கான டிப்ஸ்..!

பொடுகு தொல்லையை போக்க வெங்காயமும் தேங்காய் எண்ணெயும் போதுமா..? உங்களுக்கான டிப்ஸ்..!

பொடுகு தொல்லை

பொடுகு தொல்லை

தலைமுடி வேர்கள் வறட்சி அடையும்போது செதில் செதிலாக உதிர்வதே இந்த பொடுகு பிரச்சனை. சில நேரங்களில் சரியான பராமரிப்பின்மை, பூஞ்சை தொற்று காரணமாகவும் பொடுகு வரும். இது அரிப்பை உண்டாக்குவதால் பொது இடங்களில் சொறியவும் சங்கடமாக இருக்கும்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  எந்த பிரச்சனை தீர்ந்தாலும் பலருக்கும் பொடுகு தொல்லை மட்டும் போவதே இல்லை என்பதே பலருடைய புலம்பல்களாக இருக்கும். குறிப்பாக குளிர்காலத்தில் பலரும் பொடுகு தொல்லையால் அவதிப்படுவதுண்டு.

  தலைமுடி வேர்கள் வறட்சி அடையும்போது செதில் செதிலாக உதிர்வதே இந்த பொடுகு பிரச்சனை. சில நேரங்களில் சரியான பராமரிப்பின்மை, பூஞ்சை தொற்று காரணமாகவும் பொடுகு வரும். இது அரிப்பை உண்டாக்குவதால் பொது இடங்களில் சொறியவும் சங்கடமாக இருக்கும். இதனால் ஒருவித எரிச்சலையும் அனுபவிக்கலாம். இப்படி பல வகைகளில் தொந்தரவாக இருக்கும் பொடுகு தொல்லைக்கு வைத்தியங்களே இல்லையா என கேட்டால் உங்களுக்காகவே இந்த டிப்ஸ்..!

  தேங்காய் எண்ணெயும், வெங்காய சாறும் பொடுகு தொல்லையை போக்க உதவுவதாக கூறப்படுகிறது. எப்படி பயன்படுத்த வேண்டும்..? என்பதை பார்க்கலாம்.

  தேங்காய் எண்ணெயால் தலைமுடிக்கு கிடைக்கும் நன்மைகள் :

  தேங்காய் எண்ணெய் வேர்களில் ஆழமாக சென்று எண்ணெய் பதத்தை தக்க வைத்து ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுவதாக ஆய்விலேயே கூறப்பட்டுள்ளது. அதோடு தேங்காய் எண்ணெயில் இருக்கும் antimicrobial பண்புகள் வேர்களை தாக்கும் பூஞ்சை தொற்றுகளை எதிர்த்து போராடவும் உதவுவதாக கூறப்படுகிறது.

  Also Read : முகம் பளபளக்கும்.. முடி கருகருக்கும்.. கற்றாழையில் இருக்கு சூப்பரான பலன்கள்!

  தேங்காய் எண்ணெய் மசாஜ் :

  தேங்காய் எண்ணெயை சூடேற்றி சற்று வெதுவெதுப்பான பதத்தில் இருக்கும்போது பஞ்சில் நனைத்து வேர்களில் படும் படி தடவி மசாஜ் செய்யுங்கள்.

  பின் தலைமுடியை கட்டிவிட்டு 1 மணி நேரம் ஊற விட்டு பின் குளிக்க பொடுகை தவிர்க்கலாம்.

  தேங்காய் எண்ணெய் , எலுமிச்சை சாறு :

  தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு கலந்து வேர்களில் படும்படி தடவி ஊற வைத்து குளிக்கலாம்.

  வெங்காயம் நன்மைகள் :

  வெங்காயம் தலைமுடி வளர்ச்சியை தூண்டுவதற்கு உதவுகிறது. அதோடு பொடுகு அரிப்புக்கு நல்ல தீர்வு. வேர்களின் பூஞ்சை தொற்று, வறட்சி என பொடுகுக்கு காரணமான பிரச்சனைகளை சரி செய்ய வெங்காய சாறு உதவுகிறது.

  Also Read :  முகம் பொலிவா இருக்கணுமா?தூங்கச்செல்லும் முன் இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க..

  வெங்காய சாறை எப்படி பயன்படுத்துவது..?

  வெங்காய சாருடன் எலுமிச்சை சாறு :

  2 : 1 என்ற கணக்கில் வெங்காய சாறு மற்றும் எலுமிச்சை சாறை கலந்துகொள்ளுங்கள்.

  பின் அதை உங்கள் தலைமுடி வேர்களில் நன்கு படும்படி தடவி மசாஜ் செய்யுங்கள்.

  பின் 20 நிமிடங்கள் கழித்து தலைமுடியை வாஷ் செய்துவிடுங்கள்.

  வெங்காய சாறும் கற்றாழையும் :

  கற்றாழை மற்றும் வெங்காய சாறை கலந்து அதை வேர்களில் தடவி 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஊற வைத்து பின் குளிக்க பொடுகு மறையும்.

  வெங்காய சாறு, தேங்காய் எண்ணெய் :

  இரண்டையும் ஒன்றாக கலந்து வேர்களில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடங்களுக்கு ஊற வைத்து பின் கழுவ பொடுகை போக்கலாம்.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Dandruff, Home remedies