Home /News /lifestyle /

30 வயதிலேயே முதுமையான தோற்றமா? அதற்கான காரணங்களும், அதை சரிசெய்யும் வழிகளும்..!

30 வயதிலேயே முதுமையான தோற்றமா? அதற்கான காரணங்களும், அதை சரிசெய்யும் வழிகளும்..!

30 வயதிலேயே முதுமையான தோற்றம்

30 வயதிலேயே முதுமையான தோற்றம்

முன்கூட்டிய முதுமை, உங்கள் தோற்றம் மற்றும் உங்கள் ஆரோக்கியம் இரண்டிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இன்றைய தலைமுறையினரில் பலர் சிறுவயதிலேயே தலைமுடி உதிர்வு, வயதான தோற்றம் போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அதற்கு காரணம் சூழலியல் காரணங்களும், நமது வாழ்க்கை முறையும் தான். வயது மூப்பு என்பது நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத நிகழ்வுதான். ஆனால், இளம் வயதில் முதுமை தோற்றம் என்பது ஒருவரை மிக விரைவில் முதுமை பருவத்திற்கு துரிதப்படுத்துகிறது என்று அர்த்தம்.

அதேபோல சுற்றுச்சூழல் தாக்கங்கள் கூட முன்கூட்டிய முதுமை தோற்றத்தை விரைவுபடுத்தலாம். முன்கூட்டிய முதுமை, உங்கள் தோற்றம் மற்றும் உங்கள் ஆரோக்கியம் இரண்டிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். உங்கள் 30களின் முற்பகுதியில் சருமத்தில் தோன்றும் வயதுப் புள்ளிகள், சுருக்கங்கள், முடி உதிர்தல் மற்றும் கோடுகள் ஆகியவை முன்கூட்டியே வயதானதற்கான பொதுவான அறிகுறிகளாக இருக்கின்றன. முதுமை அதிகரிப்பதற்கான இந்த உடல் குறிகாட்டிகளுக்கு, பல சிகிச்சைகள் உள்ளன. அவற்றை பற்றி நாம் இந்த பதிவில் காண்போம்.

மிக இளமை பருவத்திலேயே வயதான தோற்றத்தை பெற சில காரணங்கள் பின்வருமாறு:

* மன அழுத்தம் / பதட்டம்

* நீரிழப்பு

* தூக்கமின்மை

* புகைபிடித்தல்

* ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்

* சூரிய ஒளி அதிகம் படுதல்

* அதிகரித்த மதுப்பழக்கம்

இந்த முன்கூட்டிய வயதான தோற்றத்தை தவிர்க்க பல வழிகள் உள்ளன. உங்கள் தோல் வகைக்கு ஏற்ப வயதான எதிர்ப்பு தோல் பராமரிப்பு வழக்கத்தை எப்போதும் கடைபிடிக்க மறக்காதீர்கள்.முப்பது வயதிற்குட்பட்டவர்களுக்கு ஆன்டி ஏஜிங் ஸ்கின் பராமரிப்புக்கான உதவிக்குறிப்புகள்:

* தினமும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தத் தொடங்குங்கள். நீங்கள் வீட்டில் இருந்தாலும் சரி வெளியில் இருந்தாலும் சரி அல்லது மோசமான வானிலையாக இருந்தாலும் சரி, உங்கள் சருமத்தை சூரியனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் முன்கூட்டிய முதுமை ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க விரும்பினால், அதிக SPF கொண்ட சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது அவசியம்.

பொடுகு தொல்லை, முடி உதிர்வை நீக்கும் வேம்பு... தலைமுடி பிரச்சனைகளுக்கு 6 வழிகளில் பயன்படுத்த டிப்ஸ்

* 30 வயதினருக்கான சிறந்த ஆன்டி ஏஜிங் முறைகளில் ஒன்று, ரெட்டினோலை உங்கள் சருமப் பராமரிப்பு முறையில் சேர்த்துக்கொள்வதாகும். நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்கள் உங்கள் சருமத்தில் வேரூன்றுவதற்கு முன்பு, இரவில் ரெட்டினோல் கொண்ட பராமரிப்பு தயாரிப்புகளை சருமத்தில் தேய்த்துக்கொண்டு படுக்கலாம். நீங்கள் இதற்கு முன்பு ரெட்டினோல் தோல் பராமரிப்பு தயாரிப்புகளை முயற்சித்ததில்லை என்றால், தினமும் அதனை பயன்படுத்துவதற்கு பதிலாக வாரத்திற்கு மூன்று முதல் நான்கு முறை எனத் தொடங்கி, இந்த சிகிச்சைக்கு உங்கள் சருமம் பழகும் வகையில் படிப்படியாக எண்ணிக்கையை அதிகரிக்கவும்.* நீங்கள் 30 வயதில் இருக்கும்போது, ​​உங்கள் கண்களை சுற்றியுள்ள பகுதிகளில் கருவளையங்கள் சுருக்கங்கள் இருப்பதைக் காண்பீர்கள். உணர்திறன் மிக்க கண்களின் பகுதியை பராமரிக்க, 30 களில் உங்கள் பகல் மற்றும் இரவு நேர தோல் பராமரிப்பு முறையுடன் கண்களுக்குக் கீழே தடவக்கூடிய சருமப் பராமரிப்பையும் சேர்த்து கொள்ளுங்கள்.

* ஒருவருக்கு வயதாகும்போது, ​​​​தோலின் செல் புதுப்பித்தல் செயல்முறை குறைகிறது. புத்துணர்ச்சியூட்டும், தெளிவான சருமத்தை வெளிக்கொணர, வாரத்திற்கு இரண்டு முறையாவது உங்கள் சருமத்தை எக்ஸ்போலியேட் செய்யவும்.

இந்த 2022-இல் கொரியன் பியூட்டி துறையில் இருந்து இந்த 5 புது விஷயங்கள் வெளிவரப் போகிறதாம்!

* ஹையலூரோனிக் அமிலம் கொண்ட தயாரிப்புகளைப் பயன்படுத்தி உங்கள் முகத்தை ரீஹைட்ரேட் செய்யவும் மற்றும் கொழுகொழுவென மாற்றவும். அதே போல் மெல்லிய சுருக்கங்கள், முகச் சுருக்கங்கள் மற்றும் கோடுகளை சரிசெய்ய இவை உதவும்.* உங்கள் சருமத்திற்கு ஊட்டமளிப்பதற்கும் ஈரப்பதமூட்டுவதற்கும் ஒரு நாளைக்கு இரண்டு முறை ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த லோஷன் அல்லது சீரம் பயன்படுத்தவும்.

* கோடுகள் மற்றும் சுருக்கங்களின் தோற்றத்தைக் குறைக்கும் அதே வேளையில், உங்கள் சருமத்தை குணப்படுத்தவும் புதுப்பிக்கவும் ஈரப்பதமூட்டும் நைட் க்ரீமை தடவலாம்.

* 30 வயதிற்கு மேல் வளர்சிதை மாற்றம் குறையும் கட்டம் என்பதால் சரியான ஆரோக்கியமான உணவு பழக்கத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Beauty Hacks, Beauty Tips

அடுத்த செய்தி