Home /News /lifestyle /

முகப்பருக்கு ப்ரீத்தியின் டாக்டர் வாழைப்பழ தோல் தானாம்! பயங்கரமான ரிசல்ட்

முகப்பருக்கு ப்ரீத்தியின் டாக்டர் வாழைப்பழ தோல் தானாம்! பயங்கரமான ரிசல்ட்

ப்ரீத்தி சஞ்சீவ்

ப்ரீத்தி சஞ்சீவ்

முகத்தில் முகப்பருக்கள் வந்தால் அவர் உடனே பயன்படுத்தும் பொருள் வாழைப்பழ தோல் தானாம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    சீரியல் நடிகை, பரதநாட்டிய கலைஞரான ப்ரீத்தி சஞ்சீவின் முகப்பருக்கு டாக்டராக இருப்பது வாழைப்பழ தோல் தானாம்.

    சீரியலிலும் உடன் நடித்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது என்பது புதிதல்ல. சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து, பின் நாட்களில் ரியல் ஜோடிகளான சின்னத்திரை பிரபலங்கள் ஏராளம்.அந்த வகையில் பலருக்கும் முன் உதாரணமாக சின்னத்திரையில் வலம் வரும் ஜோடிகள் தான் சஞ்சீவ் - ப்ரீத்தி. நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பராக அறியப்படும் சஞ்சீவ் சீரியலில் நடித்து வந்த ப்ரீத்தியை மணந்தார். சஞ்சீவுக்கு லயா, ஆதவ் என இரு குழந்தைகள் உள்ளனர்.ப்ரீத்தியை பற்றி சின்னத்திரையில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். பக்கா கிளாஸிக்கல் டான்ஸர்.

    இயக்குனர் பாலசந்தர் மூலம் சீரியலில் அறிமுகமானார். அதன் பின்பு சன் டிவி, ராஜ் டிவி, விஜய் டிவி என ப்ரீத்தி பயங்கர பிஸியான ஆர்டிஸ்ட். அதுமட்டுமில்லை, நடிகர் டிங்கு உடன் சேர்ந்து ஜோடி நம்பர் ஓன் நிகழ்ச்சியில் கலக்கினார். அந்த சீசனில் டைட்டில் வின்னரும் இந்த ஜோடி தான்.

    வயசானாலும் என் முடி கொட்டாமல் இருக்க காரணம் அரிசி தண்ணீர்.. ரகசியம் சொல்லும் லட்சுமி அம்மா!

    அதன் பின்பு, கணவர்,பிள்ளைகள் என குடும்பத்தில் பிஸியானதால் சின்னத்திரைக்கு பாய் சொன்னார். தனியாக யூடியூப் சேனல் தொடங்கி அதில் கவனம் செலுத்தி வருகிறார்.சமையல், குறிப்புகள், பூஜைகள் என அவருடைய ஸ்டைலில் கலக்குகிறார். சமீபத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் கண்ணான கண்ணே சீரியலில் ரீ எண்ட்ரி கொடுத்தார். இயல்பாகவே ப்ரீத்திக்கு நல்ல பொலிவான முகம். சன் டிவியில் ஒளிப்பரப்பான சிந்துபாத் சீரியலில் மேக்கப் இல்லாமல் நடித்து இருப்பார். பெரும்பாலும் ப்ரீத்தி, இயற்கை பொருட்களையே முகத்திற்கு பயன்படுத்தும் பக்கம் உடையர். முல்தானி மெட்டி, கடலைப்பருப்பு, பயித்த பருப்பு, கஸ்தூரி மஞ்சள், ஆரஞ்சு தோல் போன்றவற்றையே அவரின் ஃபேஷியல் பொருட்கள்.



    அவரின் முகத்தில் முகப்பருக்கள் வந்தால் அவர் உடனே பயன்படுத்தும் பொருள் வாழைப்பழ தோல் தானாம். தோலை முகத்தில் தேய்த்து மசாஜ் கொடுப்பாராம். 2 நாட்களில் பருக்கள் அதுவாகவே மறைந்துவிடுமாம். இன்றைய இளம் தலைமுறையினர் அதிகம் கவலைக்கொள்ளும் விஷயமான முகப்பருக்களுக்கு அருமையான டிப்ஸை ஷேர் செய்துள்ளார் ப்ரீத்தி. நீங்களும் டிரை பண்ணி பாருங்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Beauty Tips

    அடுத்த செய்தி