Home /News /lifestyle /

டாட்டூ போடப் போறீங்களா? அதற்கு முன் இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க...

டாட்டூ போடப் போறீங்களா? அதற்கு முன் இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க...

டாட்டூ போடப் போறீங்களா?

டாட்டூ போடப் போறீங்களா?

Pre and post tattoo care : கருப்பு மையினால் வரையப்பட்ட டாட்டூவை அழிப்பது சுலபம். அதுவே கலர், கலரான இங்கை பயன்படுத்தி வரையப்பட்ட டாட்டூ என்றால், அதனை அழிப்பது கடினம்.

டாட்டூ எனப்படும் பச்சை குத்துதல் மீதான மோகம் இன்றைய இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் இடையே வேகமாக அதிகரித்து வருகிறது. வண்ண வண்ண டாட்டூக்கள் இன்றைய இளம் தலைமுறையின் புதிய ஃபேஷனாக மாறிவிட்டது. டாட்டூ குத்துக்கொண்டால் அதை அழிக்கவே முடியாது, உடலோடு கலந்துவிடும் என்ற நிலையும் இப்போது மாறிவிட்டது.

கருப்பு மையினால் வரையப்பட்ட டாட்டூவை அழிப்பது சுலபம். அதுவே கலர், கலரான இங்கை பயன்படுத்தி வரையப்பட்ட டாட்டூ என்றால், அதனை அழிப்பது கடினம். ஒருவேளை அழித்துவிட்டீர்கள் என்றாலும், உங்களுடைய தோல் பழைய நிலையில் இருக்குமா? என்பது சந்தேகமே.

இன்றைய காலக்கட்டத்தில் பிரேக்கப்பிற்கு பிறகு காதலன் அல்லது காதலின் பெயர் உள்ள டாட்டூவை அழிக்க வேண்டும் என்றால் லேசர் உள்ளிட்ட பலவகையான சிகிச்சை முறைகள் உள்ளன. இதனால் தற்போதைய இளம் தலைமுறையினர் எவ்வித பயமோ, தயக்கமோ இன்றி உடலில் தாங்கள் விரும்பும் இடங்களில் பிடித்தமான டிசைன்களில் பச்சை குத்திக்கொள்கின்றனர். ஆனால் டாட்டூ குத்திக் கொள்வதற்கு முன்னும், பின்னும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகம் உள்ளது. அதுகுறித்து இங்கு காண்போம்.,

டாட்டூ போட்டுக்கொள்ளும் முன் இதை சிந்தியுங்கள்:டாட்டூ போட்டுக்கொள்ளும் முன்பு அது நமக்கு தேவை தானா? என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை நன்றாக சிந்தித்து முடிவெடுங்கள். ஏனென்றால் நீங்கள் போட்டுக்கொள்ளும் டிசைன் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு உங்களுக்கு பிடிக்காமல் போகலாம் அல்லது அதை நீங்கள் அழிக்க முடியாததாக மாறலாம் என்பதால் கூடுதல் கவனம் தேவை.

அடேங்கப்பா இதையும் படிங்க ..  நயன்தாரா முதல் சமந்தா வரை... டாட்டூக்களில் இருக்கும் ரகசியம் என்ன...?

1. டாட்டூ குத்திக்கொள்ள செல்லுவதற்கு முந்தைய இரவில் காபி அல்லது ஆல்கஹால் அருந்தாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் அவை ரத்தத்தை நீர்த்துப்போக செய்வதால், பச்சை குத்தும் போது அதிக ரத்தப்போக்கு ஏற்படும் அபாயம் உண்டு.2. டாட்டூ போட்டுக்கொள்ள முடிவெடுத்துவிட்டீர்கள் என்றால், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே நிறைய தண்ணீர் குடிக்க தொடங்குங்கள். தினமும் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீராவது குடிப்பது மிகவும் நல்லது. நிறைய தண்ணீர் குடிப்பதால் நமது சருமம் மிருதுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

இத கொஞ்சம் படிங்க... கர்ப்பிணிகள் பச்சைக் குத்திக்கொள்ளலாமா..?

3. மிகவும் முக்கியமானது உங்களுக்கு டாட்டூ குத்தப்போகும் கலைஞர் புதிய ஊசியை தான் பயன்படுத்துகிறாரா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் வேறு யாருக்காவது பயன்படுத்திய ஊசியை பயன்படுத்தினால் அது தீவிரமான வைரஸ் தொற்றுக்களை உண்டாக்க வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.

டாட்டூவை பராமரிப்பது எப்படி?1. புதிதாக டாட்டூ குத்தியுள்ள இடத்தில் இருந்து நோய் தொற்றுக்கள் எளிதில் பரவும் ஆபத்து உள்ளது. எனவே டாட்டூ குத்திக்கொண்ட பாகத்தை அப்படியே விடாமல் பாதுகாப்பான முறையில் கட்டு போட்டுக்கொள்வது நல்லது.

2. டாட்டூ போடப்பட்ட சில மணி நேரங்களிலேயே அதனை கட்டு போட்டு பாதுகாப்பாக மூடிய பிறகு, உங்களது கைகளை கிருமி நாசினி அல்லது சோப்பு போட்டு நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். இது பாக்டீரியா தொற்றை தடுக்க உதவும். மேலும் புதிதாக குத்தப்பட்டுள்ள டாட்டூவை வெது வெதுப்பான தண்ணீர் கொண்டு கழுவி, மென்மையான டவல் கொண்டு லேசாக மட்டுமே துடைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அதனை அழுத்தி தேய்க்க கூடாது. அப்படி செய்வது சருமத்திற்கு பிரச்சனைகளை கொடுக்கும்.3. டாட்டூ போட்டுக்கொண்ட பிறகு குறைந்தது இரண்டு வாரத்திற்காவது லோஷன், கிரீம் அல்லது பெட்ரோலியம் ஜெல்லியை அதன் மீது தடவுங்கள். இது சருமத்திற்கான பாதுகாப்பை அதிகரிக்க உதவும்.

4. டாட்டூவின் நிறம் மாறுவது, மங்குவது போன்றவை பொதுவானது. ஆனால் மிக முக்கியமான விஷயம், ஆபத்தான ரசாயனங்கள் மற்றும் சூரியனின் புற உதா கதிர் வீச்சில் இருந்து டாட்டூ போடப்பட்ட பாகத்தை பாதுகாத்துக்கொள்வது அவசியம். இதிலிருந்து தப்பிக்க, நீங்கள் வெளியே செல்கிறீர்கள் என்றால் போதுமான அளவுக்கு சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தி இருக்கிறீர்களா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க வரலட்சுமி கையில் முகமூடி டாட்டூ... சொல்லும் செய்தி என்ன?

5. உங்களது டாட்டூ ஈரமானால் கவலைப்பட தேவையில்லை. ஆனால் டாட்டூ குத்திக்கொண்ட பிறகு, குறைந்தது 3 வாரங்களுக்காவது நீச்சல், சூடான தண்ணீர் தொட்டிகளில் குளிப்பது, சூரிய குளியல் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Tattoos

அடுத்த செய்தி