Home /News /lifestyle /

ஹோலிக்கு முன் மற்றும் பின் சருமத்தை பராமரிக்க நீங்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை...

ஹோலிக்கு முன் மற்றும் பின் சருமத்தை பராமரிக்க நீங்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை...

ஹோலி

ஹோலி

ஹோலி கொண்டாட்டத்திற்கு செல்வதற்கு முன் தேங்காய் எண்ணெய் அல்லது பேபி ஆயிலை உடல் மற்றும் முகத்தில் தடவிக்கொள்ளுங்கள். உதடுகளில் லிப் பாம் தடவுங்கள்.

ஹோலியின்போது பயன்படுத்தப்படும் வண்ணங்கள் கடுமையான இரசாயனங்களால் ஆனது. அவை நம் முடி மற்றும் சருமத்தை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். எனவே ஹோலி கொண்டாடுவதற்கு முன் தோல் மற்றும் முடியை கவனித்துக்கொள்வதற்கான சில முக்கியமான குறிப்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன...

மாய்ஸ்சரைசர் பயன்படுத்தி உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நன்கு நீரேற்றப்பட்ட சருமத்தை எளிதில் சேதப்படுத்த முடியாது.

ஹோலி கொண்டாட்டத்திற்கு செல்வதற்கு முன் தேங்காய் எண்ணெய் அல்லது பேபி ஆயிலை உடல் மற்றும் முகத்தில் தடவிக்கொள்ளுங்கள். உதடுகளில் லிப் பாம் தடவுங்கள்.

முழு கை உடைகள், தலையில் ஸ்கார்ஃப், சன்கிளாஸ்கள் அணிந்து, நகங்களைப் பாதுகாக்க நெயில் பாலிஷ் போட்டுக்கொள்ளுங்கள்.

சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த மறக்காதீர்கள்.

சருமத்தை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள தண்ணீர் குடிக்கவும். தண்ணீர் உங்கள் சருமத்தை உள்ளேயும் வெளியேயும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.

ஹோலிக்கு முன் அனைத்துவித தோல் சிகிச்சைகளையும் தவிர்க்கவும்.

ஹோலியைக் கொண்டாடிய பிறகு தோலில் தடிப்புகள், வறட்சி, அரிப்பு மற்றும் முகப்பரு போன்றவை வருவது மிகவும் பொதுவானது. முடிந்த வரை அவற்றை தவிர்க்கவும்.



ஹோலியின் போது பின்பற்ற வேண்டிய சில குறிப்புகள் :

வறண்ட சருமம் : உங்கள் சருமம் வறண்டது எனில், ஹோலி வண்ணங்கள் நிலைமையை இன்னும் மோசமாக்கும். எனவே இந்த எளிய உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்:

குளியல் போது மிகவும் மென்மையான ஃபேஸ் வாஷ் அல்லது ஈரப்பதமூட்டும் சோப்பைப் பயன்படுத்தவும். கடுமையான சோப்புகள் மற்றும் க்ளென்சர்களைத் தவிருங்கள். ஏனெனில் அவை ஏனெனில் அவை இயற்கையாக சுரக்கும் எண்ணெயை நீக்கி சருமத்தை மேலும் வறட்சியடையச் செய்யும்.

ஹோலி வண்ணப்பொடிகள் சருமத்தை பாதிக்காமல் இருக்க இந்த 3 வகை எண்ணெய்களை அப்ளை செய்யுங்கள்..!

குளித்த பிறகு தடிமனான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். மாய்ஸ்சரைசர்கள் சருமத்தை நீண்ட நேரம் நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன.

சருமத்தின் இயற்கையான சமநிலையை மீட்டெடுக்க நாள் முழுவதும் தண்ணீர் குடிக்கவும்.



எண்ணெய் சருமம் : எண்ணெய் சருமத்திற்கு, இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்:

ஹோலி கொண்டாட வெளியே செல்லும் முன் மாய்ஸ்சர் தடவிக்கொள்ள மறவாதீர்கள்.

ஹோலி விளையாடிய உடனே குளித்துவிடுங்கள். அதிகப்படியான அசுத்தங்களை அகற்ற நீங்கள் மாஸ்க் பயன்படுத்தலாம்.

ஹோலிக்குப் பின் முகம் மற்றும் தலைமுடியில் இருக்கும் வண்ணங்களை அகற்ற ஈசி டிப்ஸ்..!

முடி பராமரிப்பு: ஹோலி கொண்டாட்டத்திற்கு முன் தலையில் தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளுங்கள்.

ஹோலிக்குப் பிறகு, தயிர், முட்டை மற்றும் தேன் சேர்த்து உங்கள் தலைமுடியைக் கழுவவும். இது வறட்சியிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது.

ப்ளீச் கொண்ட ஷாம்பூவைக் கொண்டு உங்கள் தலைமுடியைக் கழுவுங்கள். இது ஹோலி நிறங்களை எளிமையாக நீக்க உதவும்.

அதிகப்படியான ஸ்க்ரப்பிங் செய்வதைத் தவிர்க்கவும். ஏனெனில் ஸ்கிரப்பிங் முடியின் வேர்களை சேதப்படுத்தும். எனவே முடியை அலசி வண்ணங்களை நீக்குங்கள்.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Hair care, Holi, Holi Celebration, Skincare

அடுத்த செய்தி