பொங்கலுக்கு டிரடிஷனல் லுக் - ஈஸியான மேக்கப் ஐடியா!
பாரம்பரிய உடைக்கு ஏற்ப எப்படி மேக்கப் செய்வது என்பதற்கான ஐடியாவை இங்கே குறிப்பிடுகிறோம்.

டிரடிஷனல் லுக்
- News18 Tamil
- Last Updated: January 13, 2021, 6:09 AM IST
தமிழர்கள் கொண்டாடும் மிகவும் மகிழ்ச்சியான பண்டிகைகளில் ஒன்று பொங்கல். தமிழர் திருநாளான தைப்பொங்கலன்று, புதுப்பானையில் பொங்கலிட்டு, உழவுக்கு முக்கியமான சூரியனை வழிபாடுவது வழக்கம். பாரம்பரிய உடையணிந்து, அனைவரும் சேர்ந்து ஒன்றாக சாப்பிட்டு, சிரித்து, மகிழ்ந்து இந்த பண்டிகையை கொண்டாடுவார்கள்.
அந்நாளில் பாரம்பரிய உடைக்கு ஏற்ப எப்படி மேக்கப் செய்வது என்பதற்கான ஐடியாவை இங்கே குறிப்பிடுகிறோம்.
ப்ரைமர் இது எவ்வளவு முக்கியம் என்பது இதன் பெயரிலேயே தெரிந்திருக்கும். எந்த மேக்கப்பிற்கும் அடிப்படை ப்ரைமர் தான். சிறிதளவை உங்கள் முகம் முழுக்க அப்ளை செய்துக் கொள்ளுங்கள்.
ஃபவுண்டேஷன்
நிறைய வகைகளில் ஃபவுண்டேஷன்கள் கிடைக்கிறது. அதில் உங்கள் ஸ்கின்னுக்கு ஏற்றபடியான ஃபவுண்டேஷனை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். சிலருக்கு ஹெவி மேக்கப் செட் ஆகாது. அவர்களை லைட்டான மேட் ஃபவுண்டேஷனைப் பயன்படுத்தலாம். மீடியம் முதல் ஹை கவரேஜ் தரக்கூடிய பவுண்டேஷனை உங்கள் முகத்தில் சமமாக தடவிக் கொள்ளவும்.கன்சீலர்
மேற்கூறிய இரண்டும் முடிந்த பின்பு அடுத்த முக்கியமான ஸ்டெப் கன்சீலர். இது உங்கள் கண்களின் கருவளையம் மற்றும் முகத்தின் டார்க் ஸ்பாட்ஸை மறைத்து, முகத்தில் ஒரே மாதிரியான ஸ்கின் டோனை கொண்டு வரும்.
லூஸ் பவுடர்
முகத்தில் தேவையற்ற எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்த லூஸ் பவுடரை லைட்டாக அப்ளை செய்துக் கொள்ளலாம். மேலும் இதற்கு முன்பு நாம் போட்ட மேக்கப்பை ஸ்கின்னில் தங்க வைக்க இந்த பவுடர் முக்கியம்.
மை (காஜல்)
கன்ணுக்கு மை அழகு என்பதைப் போல, கண்களின் அழகை ஹைலைட் செய்வது காஜல் தான். உங்களுக்குப் பிடித்த வகையில் டீப்பாகவோ லைட்டாகவோ அப்ளை செய்துக் கொள்ளலாம்.
ஐ ஷேடோ
லுக்கை ஹைலைட் செய்ய ஐ ஷேடோ.
ஐ லைனர்
ஐ லைனர் இல்லாமல் உங்கள் கண் மேக்கப் முழுமை பெறாது. இது உங்கள் கண்களை போல்டாகக் காட்டும்.
மஸ்காரா
நேஅரம் இல்லையெனில் இதை தவிர்க்கலாம். ஆனால் லேசான இமைகளைக் கொண்டவர்கள் மஸ்காரா பயன்படுத்தினால் அவர்களின் கண் இமை அடர்த்தியாகவும் போல்டாகவும் தெரியும்.
லிப்ஸ்டிக்
இத்தனை மேக்கப்பும் நன்றாக தெரிய வேண்டுமெனில் அதற்கு லிப் ஸ்டிக் மிக முக்கியம். ரெட், பிங்க் ஷேட்களில் உங்கள் ஸ்கின் டோனுக்கு ஏற்ற லிப்ஸ்டிக்கை போட்டுக் கொள்ளலாம்.
அவ்வளவு தான் உங்கள் லுக் ரெடி... நீங்கள் உடுத்தும் உடைக்கு ஏற்ப ஹேர் ஸ்டைலை செய்துக் கொண்டால், தேவதையாய் ஜொலிப்பீர்கள்!
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
அந்நாளில் பாரம்பரிய உடைக்கு ஏற்ப எப்படி மேக்கப் செய்வது என்பதற்கான ஐடியாவை இங்கே குறிப்பிடுகிறோம்.
ப்ரைமர்